மாற்றுத் திறனாளி தம்பதிக்கு வாட்ஸ்அப் குழு மூலம் நிதி திரட்டி வளைகாப்பு - ஆரணியில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்
திருவண்ணாமலை அடுத்த ஆரணி அருகே ஃபீனிக்ஸ் பள்ளியில் மாற்றுத்திறனாளி கணவன் மனைவிக்கு வாட்ஸ்அப் குழு மூலம் நிதி திரட்டி வளைகாப்பு நடத்தி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சந்தவாசல் கிராமத்திலுள்ள ஃபீனிக்ஸ் சிறப்புப் பள்ளியில் மாற்றுத்திறனாளி கணவன் மனைவிக்கு வாட்ஸ்அப்குழு மூலம் நிதி திரட்டி வளைகாப்பு நடத்தி வைத்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி குமார் வயது (28), இவருடைய மனைவி மாற்றுத்திறனாளி தமிழ்ச்செல்வி வயது (24), ஆகிய இருவரும் காதலித்து வந்தனர். பிறகு இவர்கள் இருவரும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இருவருடைய வீட்டிலும் காதல் திருமணத்தை பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு இருவரும் தனியாக வாழ்ந்து வருகின்றனர். மாற்றுத்திறனாளியான குமார் புதுப்பாளையத்தில் ஒரு ஜெராக்ஸ் கடையில் குமாஸ்தாவாக பணிப்புரிந்து வருகிறார். மேலும் இவர்களுக்கு போதிய அளவில் வருமானம் இல்லாததால் குமார் அவரது மனைவி தமிழ்ச்செல்வி ஆகிய இருவரும் வாடகை வீட்டிற்கு வாடகை கட்ட கூட பணம்மின்றி மிகவும் வறுமையில் வாடி வந்துள்ளனர். இந்நிலையில் குமாரின் மனைவி தமிழ்ச்செல்வி தற்பொழுது கர்ப்பமாக இருந்துள்ளார். இந்த நிலையில், இந்த தம்பதியினரின் வறுமையை பற்றியும் இவர்களுடைய காதல் திருமணம் பற்றியும் ஒரு சிலர் அன்னை தெரசா என்கின்ற ஒரு வாட்ஸ் அப் குழுவில் பதிவிட்டுள்ளனர்.
Lokesh Kanagaraj : திடீர்னு என்ன ஆச்சு? ரசிகர்களுக்கு ஷாக் செய்தியை சொன்ன லோகேஷ் கனகராஜ்..
அந்த வாட்ஸ் அப் குழுவில் இருந்த அனைவரும் உதவி தர முன்வந்துள்ளனர். அதன் பின்னர் நிதி திரட்டி ஆரணி அடுத்த உள்ள சந்தவாசல் பகுதியில் இயங்கி வரும் ஃபீனிக்ஸ் சிறப்பு பள்ளி பள்ளியில் மாற்றுத்திறனாளி குமாரின் மனைவி தமிழ்ச்செல்விக்கு அன்னை தெரசா வாட்ஸ்அப் குழுவை சேர்ந்தவர்கள் ஒன்றினைந்து சிறப்பாக வளைகாப்பு நடத்தி வைத்தனர். இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் அந்த வாட்ஸ்அப் குழுவைச் சேர்ந்த நண்பர்கள் சீர்வரிசை வைத்து வளைகாப்பிற்கு வந்தவர்களுக்கு அறுசுவை உணவு விருந்தும் வைத்துள்ளனர். இந்நிகழ்விற்கு சிறப்பு அம்சமாக 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. ஆரணி அருகே இதுபோன்று உதவ ஆளில்லாத மாற்றுத்திறனாளி கணவன் மனைவிக்கு வாட்ஸ்அப் குழு மூலம் நிதி திரட்டி வளைகாப்பு நடத்திய சம்பவம் பொதுமக்களிடையே மிகவும் பாராட்டு பெற்றுள்ளது.
இறப்பிலும் இணைந்த உயிரே"..! 86 வயது மனைவி மரணம்...! அதிர்ச்சியில் உடன் சென்ற 91 வயது கணவன்..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்