மேலும் அறிய
Advertisement
கருணை அடிப்படையில் வேலை...சான்றிதழ்க்காக காத்திருந்த பெண்; திடீரென வந்த ஆட்சியர் - அடுத்து நடந்தது என்ன?
கிராம நிர்வாக அலுவலரை சான்றிதழை படிக்க சொல்லிய பிறகு கையெழுத்து இடுங்கள் என கூறி உடனடியாக சான்றிதழை வழங்கிய மாவட்ட ஆட்சியர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கோடியூர் பகுதியில் உள்ள ஜோலார்பேட்டை கிராம நிர்வாக அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது இடையம்பட்டி பகுதியைச் சேர்ந்த ரமேஷ். இவர் ரயில்வே குடியிருப்பில் 26 ஆண்டுகளாக கார்பெண்டர் வேலை செய்து வந்தார். இவர் கடந்த மாதம் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். எனவே அவருடைய மனைவி ஜெயமணி கருணையின் அடிப்படையில் அவரின் வேலை தனக்கு கிடைக்க மத்திய அரசு பணிக்குச் செல்ல ஓபிசி சான்றிதழ் வேண்டும் என மனு அளித்திருந்தார்.
இந்நிலையில், இன்று கிராம நிர்வாக அலுவலகத்தில் ஜெயமணி காத்திருந்த போது அங்கு ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் அவரை எதற்காக காத்திருக்கிறீர்கள் எனக் கேட்டு உடனடியாக ஓபிசி சான்றிதழை வழங்க கிராம நிர்வாக அலுவலர் துக்கனிடம் கூறினார்.
மேலும் சான்றிதழில் என்ன எழுதி இருக்கிறது என்று கிராம நிர்வாக அலுவலர் படிக்க சொல்லியும் உத்தரவு இட்டார். அதன் பிறகு ஜெயமணியிடம் தற்போது அந்த சான்றிதழ் கையெழுத்து இடுங்கள் எனவும் எதையும் படித்த பிறகு கையெழுத்து இடவேண்டும் எனவும் கூறினார். பின்னர் ஜெயமணி மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜிக்கு நன்றியை தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion