6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ராமன் போக்சோவில் கைது...!
ஆரணி அருகே 6 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த ராமன் என்பவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி அவருக்கு திருமணம் ஆகி 6 வயதில் ஒரு பெண்குழந்தையும் 2 வயதில் ஒரு ஆண்குழந்தை உள்ளனர். இந்த தம்பதியினர் இருவரும் கட்டிட வேலை செய்து குடும்பம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று கூலி வேலைக்கு தம்பத்தியினர் சென்றுள்ளனர். அப்போது இவர்களின் இரண்டு குழந்தைகளையும் அருகில் உள்ள பாட்டியிடம் ஒப்படைத்து விட்டு வேலைக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் அதே பகுதியில் விவசாய நிலத்திற்கு சென்ற அப்பகுதியை சேர்ந்த நாராயணன் மகன் ராமன் (22) நிலத்திற்கு செல்லும் போது குழந்தையிடம் விளையாடி செல்வதாக கூறப்படுகிறது. இதேபோல் நேற்று தனியாக விளையாடிக்கொண்டிருந்த 6 வயது குழந்தையை யாரும் இல்லாத நேரத்தில் குழந்தையிடம் ராமன் நாம் வெளியே செல்லாம் என்று கூறி குழந்தையை ஊரின் வெளிப்பகுதியில் அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்ச்சி செய்ததாக கூறப்படுகிறது.
அப்போது வலிதாங்க முடியாமல் குழந்தை கதறி அழுதுள்ளது. பின்னர் குழந்தையை ராமன் யாருக்கும் தெரியாமல் வீட்டின் அருகே விட்டு விட்டு யாரிடம் இதுகுறித்து கூறக்கூடாது என்று தெரிவித்துள்ளார். அதன் பின்னர் வீட்டிற்கு சென்ற குழந்தை வீட்டில் சோர்வடைந்த நிலையில் இருந்துள்ளார். வேலைக்கு சென்றிருந்த பெற்றோர் வேலை முடித்து வீட்டிற்கு வந்தபோது குழந்தை சோர்வாக இப்பதை கண்டு அவரது தாய் குழந்தையிடம் விசாரித்துள்ளார். அப்போது போது குழந்தை நடந்த சம்பவத்தை கூறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் உடனடியாக சிறுமியை ஆரணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவர்களிடம் கூறி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் இதுகுறித்து மருத்துவர்கள் ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்த ஆரணி மகளிர் காவல்துறையினர் மருத்துவ மனைக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தாய் நடந்த சம்பவத்தை கூறி புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ராமனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுமியை ராமன் பாலியல் வன்புணர்ச்சி செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ராமனை கைது செய்து ஆரணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். ஆரணி அருகே 6 வயது சிறுமியை வாலிபர் பாலியல் வன்புணர்ச்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2 வயது தோற்றம் கொண்ட 25 வயது மாற்றுத்திறனாளி பெண் - உதவிக்கரம் நீட்ட அரசுக்கு கோரிக்கை...!