திருவண்ணாமலையில் NLC-நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் வீட்டில் 65 சவரன் நகை கொள்ளை
முதற்கட்ட விசாரணையில் சுமார் 35 ஆயிரம் பணம், வெள்ளி நகைகள் தற்போது வீட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். நகை திருட்டு குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மிகைப்படுத்தி சொல்வதாகவும் போலிசார் கூறுகின்றனர்
திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் தென்றல் நகர் பகுதியில் உள்ள வள்ளலார் தெருவை சேர்ந்த சிவானந்தம் (60) இவர் நெய்வேலி NLC நிலக்கரி நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு ராஜேஸ்வரி (]55) என்ற மனைவியும் பாலமுருகன் என்ற மகனும் உள்ளனர். மகன் பாலமுருகனுக்கு திருமணமாகி சென்னையில் உள்ள தனியார் கார் கம்பெனியில் பணிபுரிந்து வரும் நிலையில் சிவானந்தம், ராஜேஷ்வரி தம்பதி மட்டும் திருவண்ணாமலையில் தனியாக வசித்து வருகின்றனர். பாலமுருகனின் தந்தை சிவானந்தம் மற்றும் அவரது தாய் ராஜேஸ்வரி ஆகியோருக்கு சேத்துப்பட்டு நம்பேடு பகுதியில் விவசாய நிலம் உள்ளதால் அங்கு அடிக்கடி சென்று தங்கி வருவது வழக்கம்.
சிவானந்தம், ராஜேஷ்வரி தம்பதி கடந்த வியாழக்கிழமை அன்று சோமசிபாடி பகுதியில் உள்ள உறவினர் திருமணத்திற்கு சென்றுள்ளனர். அப்போது மகன் பாலமுருகனின் மனைவி மற்றும் அவருடைய மச்சான் இருவரும் திருமணத்திற்கு செல்லும்போது வீட்டிற்கு சென்று பார்த்து விட்டு தேவையான பொருட்களை எடுத்து செல்லாம் என்று வந்துள்ளார். இந்தநிலையில் வீட்டின் முன் பக்க தாழ்பாள் உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்ததில் வீட்டில்ற்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த சுமார் 65 சவரன் தங்க நகை காணாமல் போனது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கைரேகை நிபுணர்களையும் மோப்பநாயையும் வரவழைத்து தடயங்களை சேகரித்து விசாரணை நடத்திவருகின்றனர். மோப்ப நாய் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் வரை ஓடிச்சென்று ரயில்வே கேட் அருகில் நின்றுவிட்டது. மேலும் காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் சுமார் 35 ஆயிரம் பணம் மற்றும் வெள்ளி நகைகள் தற்போது வீட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் வெள்ளி நகை மற்றும் பணம் இருந்துள்ளதால் இந்த நகை கொள்ளையில் சந்தேகம் இருப்பதாகவும் நகை திருட்டு பற்றி சம்பந்தப்பட்டவர்கள் மிகைப்படுத்திச் சொல்வதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இந்த கொள்ளை சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.