மலையை குடைந்து ஆக்கிரமிப்பு: திமுக பிரமுகர் மீது கிராம மக்கள் புகார்!
சுமார் 2 ஏக்கர் பரப்பிளான மலைப்பகுதியை குடைந்து, நிலமாக மாற்றியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தொண்டமானூர் பஞ்சாயத்தில் சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் அரசுக்கு சொந்தமான கல்லாங்குத்து மலை புறம்போக்கு இடம் ஒன்று உள்ளது. இந்த மலைப் புறம்போக்கு இருக்கும் இடத்தை அதே கிராமத்தைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் தொண்டமானூர் மலைப்பகுதியில் பொக்லைன் இயந்திரம் மூலமாக மலையை குடைந்து 2 ஏக்கர் பரப்பளவில் அப்பகுதியில் நிலமாக மாற்றியுள்ளார். இந்த மலையை குடைந்தது குறித்து சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரியிடம் அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்த நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த நிலையில் பாரதிய கிசான் சங்கம் சார்பில் தண்டராம்பட்டு தாசில்தாரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து கிராம மக்கள் கூறுகையில், எங்க கிராமத்தில் உள்ள தொண்டமானூர் மலை அடிவாரத்தில் உள்ள இடத்தை தனிநபர் ஒருவர் பொக்லைன் இயந்திரம் மூலம் மலையைக் குடைந்து இடத்தை ஆக்கிரமித்துள்ளர் . மேலும் மலையிலிருந்து வந்த மழைநீர் ஓடையை பொக்லைன் இயந்திரம் மூலம் நிரவி நிலமாக மாற்றியுள்ளார். மேலும் மலையை குடைந்து ஏன் நிலமாக மாற்றி உள்ளீர்கள் என பொதுமக்கள் கேட்டோம். அப்போது அவர் என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது. நான் திமுக கட்சியை சார்ந்தவன் நான் வருவாய்த் துறையைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டிய கவனிப்பு கொடுத்துவிட்டு தான் அதன் பின்புதான் இந்த பணியை செய்கிறேன் என திமிரக பேசுகிறார் என்கின்றனர். மழை கலங்களில் இந்த மலையில் இருந்து ஓடை வழியாக வரும் மழை நீர் மூலம் இந்த பகுதியில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன் பெற்று வருகிறோம்; அது பாதிக்கப்படுவதாகவும் கூறினர்.
மேலும் மலையை ஆக்கிரமிப்பு செய்த நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தினை வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட திமுக நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். இதேபோன்று தண்டராம்பட்டு அடுத்த இளையாங்கண்ணி பஞ்சாயத்தில் மலையை ஆக்கிரமத்து சர்ச் கட்டிய பிரச்சனை இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதற்குள் இன்னொரு மலையை ஆக்கிரமித்து இடமாக மாறி உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தினை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் பார்வையிட்டு ஆக்கரமிப்பு செய்யப்பட்ட இடத்தை வருவாய் துறை அதிகாரிகள் மூலம் மீட்டெடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கை வைத்துள்ளோம் என்று தெரிவித்தனர்.
Watch Video | ''ஒரே நேரத்துல இரண்டு ஃபோனா?'' ஸ்ரீதேவி மகளின் வைரல் வீடியோ!