மேலும் அறிய

திருவண்ணாமலையில் 10ஆம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் ஒட்டம்...!

திருவண்ணாமலை மாவட்டத்தில் மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் நடத்திய சோதனையில் போலி மருத்துவம் பார்த்த இரண்டு க்ளினிக்குகள் கண்டுபிடிப்பு; ஒருவர் கைது, மற்றொருவர் தப்பியோட்டம்.

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள அடி அண்ணாமலை கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியநாதன் (40). இவர், வீட்டின் முன்பகுதியில் உள்ள ஒரு அறையில் மருந்துக்கடையுடன் கிளினிக் நடத்தி வருகிறார். மருத்துவ படிப்பை படிக்காமல் மருத்துவம் பார்ப்பதாக எழுந்த புகாரின் பேரில், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் கண்ணகி தலைமையில் மருத்துவ குழுவினர்  திடீர் சோதனை நடத்துபோது பாக்கியநாதன் தப்பியோடிவிட்டார். இந்நிலையில் விசாரணையில் பாக்கியநாதன் 10ஆம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு கிளினிக்கும் மருந்து கடையும் நடத்தி வந்தது தெரியவந்தது. அவர் நடத்திய கிளினிக்கில் நடத்திய சோதனையில், குளுக்கோஸ் பாட்டில்கள், ஊசி, மருந்து, மற்றும் மாத்திரைகள், ஸ்டெத் தாஸ்கோப் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். பாக்கியநாதன் MBBS பட்டபடிப்பு முடித்த டாக்டர்கள் நடத்தும் மருத்துவமனைக்கு இணையாக, போலி மருத்துவர் கிளினிக்கை நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலையில் 10ஆம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் ஒட்டம்...!

அதைத்தொடர்ந்து, தப்பியோடிய போலி மருத்துவர் பாக்கியநாதன் மீது இணை இயக்குநர் கண்ணகி திருவண்ணாமலை தாலுகா காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் , காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பாக்கியநாதனை தேடி வருகின்றனர் இதேபோன்று திருவண்ணாமலை மாவட்டம். கலசபாக்கம் அடுத்த கோடிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் வயது  (50). இவர் BA பட்டதாரியான இவர் மருத்துவதுறை சம்பதமாக படிக்காமல் தனது வீட்டிலேயே கிளினிக் தொடங்கி, கடந்த 3 ஆண்டுகாலமாக அப்பகுதியை சேர்ந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார்

திருவண்ணாமலையில் 10ஆம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் ஒட்டம்...!

இதுகுறித்து மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் கலசபாக்கம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சவுத்தரி தலைமையில்  7 பேர் கொண்ட குழுவினர்  சங்கரின் வீட்டுக்கு சென்று அதிரடியாக சோதனை நடத்தியுள்ளனர். அப்போது, அவர் போலி மருத்துவர் சங்கர் நோயாளிகளுக்கு ஆங்கில முறை சிகிச்சை அளிப்பது தெரியவந்துள்ளது.

அதனைத்தொடர்ந்து , அங்கிருந்த ஆங்கில மருந்துகள், மாத்திரைகள், ஊசிகள், மற்றும் அங்கு இருந்த கருவிகள் போன்ற மருத்துவ உபகரகணங்களை பறிமுதல் செய்தனர். பின்னர், சங்கரை கலசபாக்கம் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் கலசபாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலி மருத்துவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்ப குதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal Cyclone LIVE:  இன்று மாலை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல் - வானிலை ஆய்வு மையம்
Fengal Cyclone LIVE: இன்று மாலை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல் - வானிலை ஆய்வு மையம்
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மழைக்கான ஏற்பாடுகள் என்ன? கலெக்டர் கொடுத்த HINT! துண்டு சீட்டில் எழுதிய அமைச்சர்”தூங்குறவர வெட்டிட்டாங்க! 7 வயசுல குழந்தை இருக்கு” கதறி அழும் மனைவிஒரே குடும்பம், 3 கொலைகள்! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! வெளியான திடுக் தகவல்Kallakurichi School Issue : பாத்திரம் கழுவிய மாணவிகள்! அரசுப் பள்ளியில் அவலம்! பகீர் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal Cyclone LIVE:  இன்று மாலை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல் - வானிலை ஆய்வு மையம்
Fengal Cyclone LIVE: இன்று மாலை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல் - வானிலை ஆய்வு மையம்
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
ஃபெஞ்சல் புயல் : சுளுக்கு எடுக்கும் சூறாவளி காற்று... சாலையில் விழும் மரங்கள்; ஸ்தம்பிக்கும் ECR
ஃபெஞ்சல் புயல் : சுளுக்கு எடுக்கும் சூறாவளி காற்று... சாலையில் விழும் மரங்கள்; ஸ்தம்பிக்கும் ECR
Fengal Cyclone: ரெட் அலர்ட்டில் சென்னை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம், தவிக்கும் மக்கள் - ஸ்தம்பித்த தலைநகர்
Fengal Cyclone: ரெட் அலர்ட்டில் சென்னை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம், தவிக்கும் மக்கள் - ஸ்தம்பித்த தலைநகர்
UP Wedding: விடிந்தால் திருமணம் - இளைஞரை கம்பத்தில் கட்டி அடித்து உதைத்த கிராம மக்கள், நடந்தது என்ன?
UP Wedding: விடிந்தால் திருமணம் - இளைஞரை கம்பத்தில் கட்டி அடித்து உதைத்த கிராம மக்கள், நடந்தது என்ன?
Embed widget