TTV Dhinakaran : "முதல்வர் ஸ்டாலின் ஹிட்லரைப்போல் செயல்படுகிறார்.." : குற்றம்சாட்டும் டிடிவி தினகரன்..
தமிழக முதல்வரின் ஒராண்டு விடியல் ஆட்சியில் இருண்ட தமிழகம்தான் உருவாகியுள்ளது . ஸ்டாலின் ஹிட்லரை போல் செயல்படுகிறார் என தினகரன் குற்றச்ச்சாட்டு
தமிழக முதல்வர் ஒராண்டு விடியல் ஆட்சியில் இருண்ட தமிழகம்தான் உருவாகியுள்ளது . ஸ்டாலின் ஹிட்லரை போல் செயல்படுகிறார் என தினகரன் குற்றச்ச்சாட்டு
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”திமுகவினர் திருந்தி இருப்பார்கள் என்று மக்கள் நம்பி வாக்களித்து அவர்களுக்கு வாய்ப்பு அளித்ததாகவும், ஆனால் திமுகவினர் திருந்த மாட்டார்கள் என்பதற்கு உதாரணமாக இந்த ஓர் ஆண்டு கால ஆட்சி உள்ளது. தான் எதிர்க்கட்சி என்ற முறையில் சொல்லவில்லை. குறிப்பாக தேர்தல் வாக்குறுதியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துவிட்டு ஆனால் தமிழக முதல்வர் ஸ்டாலின் இது குறித்து வாய் திறப்பதே இல்லை. கொரோனா காலகட்டத்தில் அதிமுக ஆட்சி இருந்தபோது சொத்து வரி உயர்த்திய போது 2019 தமிழக முதல்வர் ஸ்டாலின் போராட்டம் நடத்தினார். கொரோனா நோய் தொற்றினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மீண்டும் பொருளாதாரம் உயர்ந்த பிறகுதான் சொத்துவரி உயர்வு பற்றி சிந்திக்கவேண்டும் என்றார்
தற்போது முகக்கவசம் அணியாமல் இருந்தவுடன் சொத்து வரியை 150 சதவீதமாக உயர்த்தி உள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் நடவடிக்கை தற்போது தமிழகத்தில் ஹிட்லரைப் போல் உள்ளது” குற்றம் சாட்டினார்.
”பேரறிவாளன் விடுதலை திமுகதான் காரணம் மாதிரி சொல்லிக் கொள்வதாகவும் ஆனால் 2014-இல் மாண்புமிகு அம்மா அவர்கள் விடுதலை செய்ய வேண்டும் என தெரிவித்தார். பேரறிவாளன் விடுதலையை திமுக கட்சியினர் அரசியல் செய்து வருகிறார்கள் என்றும், மக்களுக்கு வேதனை ஆட்சிதான் மீண்டும் தமிழகத்தில் மின்வெட்டு ஆரம்பித்துவிட்டது. இது விடியல் ஆட்சியில் இருண்ட இருண்ட தமிழகம்தான் உருவாகி உள்ளது” என்றார்.
”தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழகத்திற்கு அம்மா கொண்டு வந்தார்கள் ஆனால் தற்போதுள்ள திமுக ஆட்சியில் அனைத்து திட்டங்களையும் செயல்படாமல் தடுத்து விட்டதாகவும் , நகை கடன் தள்ளுபடி என்று அறிவித்துவிட்டு தற்போது
அதற்கு பல்வேறு முட்டுக்கட்டைகள் போடுவதாகவும் விவசாயிகள் தொழிலாளர்கள் வியாபாரிகள் அரசு ஊழியர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நீட் தேர்வு விலக்கு குறித்து தமிழக முதல்வரால் எத்தகைய நடவடிக்கையும் எடுக்க இயலாது என்றும். மத்திய அரசு தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு என சட்டம் கொண்டு வந்தால் மட்டுமே நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியும்” என தெரிவித்தார்.
“எப்படியாவது ஆட்சிக்கு வரவேண்டும் என்று மக்களை ஏமாற்றி ஆட்சியைப் பிடித்தார். வருங்காலத்தில் திமுக மிகப்பெரிய தோல்விகளையும் பின்னடைவும் சந்திக்கும் என்று தெரிவித்தார். அதேபோல் சிறுபான்மை மக்களை ஸ்டாலின் ஏமாற்றி வருவதாகவும் சிறையில் உள்ள இஸ்லாமிய சகோதரர்களை விடுதலை செய்வோம் என்று அறிவித்த ஸ்டாலின் தற்போது அவர்கள் சிலையிலிருந்து வெளியே வர முடியாதவாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்” என்று குற்றம் சாட்டினார்
”பாஜக தமிழகத்திற்கு வந்துவிடுவார்கள் என்று மக்களை பயமுறுத்தி ஆட்சி செய்கிறார். உக்ரைன் நாட்டில் இருந்து திரும்பி வந்த மருத்துவ மாணவர்களுக்கு உடனடியாக மருத்துவ கல்லூரியில் சேர்த்து மருத்துவ படிப்பு தொடர செய்ய வேண்டும். பால்நிலை கேஸ் சிலிண்டர் விலை உயர்விற்கு திமுகவினர் பொதுமக்களுக்கு தரும் பரிசு எனவும், விலையேற்றத்தை கட்டுக்குள் வைக்க வேண்டியதுதான் ஆட்சியாளர்களின் கடமை எனவும் ஆனால் திமுகவினர் எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை கூறுவதாக குற்றம் சாட்டுகிறது” என்றார்.
“அதிமுக அமமுக இணைப்பு குறித்த கேள்விக்கு யுகத்திற்கு பதில் கூற விரும்பவில்லை என்றும் தேர்தல் வெற்றி தோல்விகள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை பாதிக்காது என்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்தை அடைவோம் என்றும் வருங்காலங்களில் தமிழக மக்கள் ஆமாம் அவருக்கு வெற்றியை கொடுப்பார்கள் என்று தங்களது பயணத்தை தொடர்ந்து செய்கிறோம்” என தெரிவித்தார்.