மேலும் அறிய
Pongal 2024: திருப்பத்தூரில் விசிகவினர் கொண்டாடிய சமத்துவ பொங்கல்; பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்
100க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் காலண்டர், இனிப்புகள் வழங்கி பொதுமக்களுக்கு விடுதலை சிறுத்தை கட்சியினர் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
![Pongal 2024: திருப்பத்தூரில் விசிகவினர் கொண்டாடிய சமத்துவ பொங்கல்; பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் Pongal 2024 Samathvuay Pongal was celebrated on behalf of the vck Party in Tirupattur - TNN Pongal 2024: திருப்பத்தூரில் விசிகவினர் கொண்டாடிய சமத்துவ பொங்கல்; பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/15/73e1bb9cee12d8d8dbe9fa0dcf867d471705306781955113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சமத்துவ பொங்கல்
திருப்பத்தூரில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன
திருப்பத்தூர் மாவட்டம் 3வது வார்டு சிவராஜ் பேட்டையில் திருப்பத்தூர் விடுதலை சிறுத்தை கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் வெற்றிகொண்டான் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதற்கு சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர்
வேலூர் மண்டல செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் சிவராஜ் பேட்டையில் அமைந்துள்ள அம்பேத்கரின் திரு உருவ சிலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இதனை தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் காலண்டர், இனிப்புகள் வழங்கி பொதுமக்களுக்கு விடுதலை சிறுத்தை கட்சியினர் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
உடன் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செய்தி தொடர்பாளர் பார்த்திபன்,கந்திலி ஒன்றிய செயலாளர் சக்தி, ஜோலார்பேட்டை ஒன்றிய செயலாளர் ரமேஷ், ஒன்றிய அமைப்பாளர் திருமா விமல், மற்றும் நகர,ஒன்றிய, பேரூராட்சி,பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion