ஜவ்வாதுமலை : முதல் முறை மிளகு.. உயிர் பெறும் மகளிர் குழுக்கள்.. மகிழ்ச்சியில் ஜவ்வாது பழங்குடிகள்..!
ஜவ்வாது மலையில் முதல்முறையாக மிளகு சாகுபடியில் சாதனை புரிந்து வருகிறார்கள் பழங்குடி மக்கள்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஜவ்வாதுமலை பகுதியில் வாழும் பழங்குடி விவசாயிகள், வாழ்வாதாரத்தை மேம்படுத்த கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக கேரள மாநிலத்திற்கு சென்று அங்கு வேலைகளை செய்து வருகின்றனர்.
மேலும் அங்கு பயிரிடப்படும் மிளகு செடிகளை வளர்த்து பராமரித்து, பயிரிடு முறைகளை தெரிந்துகொண்டு, தற்போது அங்கிருந்து மிளகு செடிகளை வாங்கி வந்து ஜவ்வாது மலைப்பகுதிகளில் விவசாயம் செய்து வந்தனர். இதனை அறிந்த முன்னால் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அதனை பார்வையிட்டு மிளகு விவசாயத்தை மேம்படுத்த வேளாண்மை வளர்ச்சி மையம் செயல்பட வேண்டுமென்று தோட்டக்கலைத்துறை மூலமாக இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு முக்கியத்துவம் வழங்குமாறு கேட்டுக்கொண்டார். முதலாவதாக மரம் கன்றுகளை வழங்கினர். அதன் பின்பு மிளகு செடிகளை வழங்கி வருகின்றனர். இதற்கு மிளகு செடிகள் 40% மானியத்துடன் வழங்கப்படுகிறது.
நம்மியம்பட்டு கிராமத்தில் வசித்து வரும் விவசாயிகளுக்கு மிளகு செடிகள் வழங்கப்பட்டது. மிளகு செடிகள் உயரமாக படர்ந்து செல்வதற்கு மரங்கள் நடப்பட்டன. நடப்பட்ட ஆண்டில் இருந்து மூன்றாவது ஆண்டில் அறுவடைக்கு தயாராக இருக்கும். முதல் அறுவடையில் ஒரு மிளகு செடிக்கு 1 கிலோ வீதம் கிடைக்கும், அடுத்தடுத்த ஆண்டில் படிப்படியாக உயர்ந்து கொண்டே வரும் 25 ஆண்டில் ஒரு மிளகு செடியில் இருந்து 70 கிலோ முதல் 100 கிலோ வரையில் அறுவடை செய்யலாம். இந்த திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்பட உள்ளது. மலைவாழ் விவசாயிகளுக்கு தற்போது 250 ஏக்கர் பரப்பளவில் மிளகு செடிகள் வழங்கி வளர்க்கப்பட்டு வருகிறது. ஜவ்வாதுமலையில் தற்போது மிளகு முதல் அறுவடையில் 1500 கிலோ மிளகு அறுவடை செய்யப்பட்டது. அறுவடை செய்யப்பட்ட மிளகு கூட்டுறவு துறை சார்பாகவும் , மகளிர் திட்டம் மூலமாகவும் மிளகு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இது குறித்து மிளகு பயிர் சாகுபடி செய்யும் விவசாயிடம் கேட்டபோது, ”எங்கள் மலையில் இருக்கும் பெரும்பாலான விவசாயிகள் கூலி வேலைக்காக கேரளா மாநிலத்திற்கு மிளகு அறுவடைக்கு செல்வோம். அங்கு சென்ற நாங்கள் மிளகு செடிகள் எப்படி வளர்ப்பது, பராமரிப்பு செய்வது போன்றவற்றை அறிந்துகொண்டோம். அதன் அடிப்படையில் எங்கள் கிராமத்தில் செடிகளை வாங்கி வந்து விவசாயம் செய்து வந்தோம். ஒரு நாள் அதிகாரிகள் வருகைதந்து இதற்கு மேல் நீங்கள் வேலைக்காக வெளியில் செல்ல வேண்டாம். நாங்கள் உங்கள் விளைநிலங்களில் விவசாயம் செய்வதற்கு மிளகு செடிகள் மானியத்தில் தருகிறோம். அதனை வைத்து பயிர்செய்து உங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ளாம் என்று கூறினர்.
அதன் அடிப்படையில் எங்கள் விலைநிலத்தில் 1 ஏக்கரில் மிளகு செடி நட்டு பராமரித்து வந்தோம் தற்போது மிளகு 100 கிலோ உற்பத்தி செய்து விற்பனை செய்தோம் , நாங்கள் முதல் முறையாக மிளகு சாகுபடி செய்து உள்ளோம்.
எனவே நோய் தாக்குதலில் இருந்து மிளகு செடிகளை பாதுக்காக மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், எங்களுக்கு தெரிவித்து பயிற்சி அளிக்க வேண்டும் எனவும், தெரிவித்தார். தோட்டக்கலை அதிகாரிகள் வட்டாரத்தில் கூறியதாவது, ”ஜவ்வாது மலையில் முதல் முறையாக விளையும் இந்த மிளகு சாகுபடி மிளகு கிலோ 350 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை விலைக்கு போகின்றது. மகளிர் குழுக்கள் மூலம் மிளகை விற்பனை செய்து வருகின்றனர்” என தெரிவித்தார்.