மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
Theatres Opening : வேலூரில் தியேட்டர்கள் திறப்பது இந்த தேதியில்தான்.. என்னென்ன வழிகாட்டு நெறிமுறைகள்?
தமிழ் நாடு அரசு ஆகஸ்ட் 23-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் , சினிமா தியேட்டர்கள், உயிரியல் பூங்காக்கள், கடற்கரை, அண்டை மாநிலங்களுக்கு பஸ் இயக்கம் உள்ளிட்டவற்றுக்கு நேற்று முதல் அனுமதி அளித்தது.
2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா நோய் பரவல் தீவிரம் அடைந்தது . இதனால் பள்ளிகள் , கல்லூரிகள் , வணிக வளாகங்கள் , திரையரங்குகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொதுமக்கள் ஒன்று சேரக்கூடாது என்று தமிழக அரசு கட்டுப்பாடு விதித்து முழு ஊரடங்கைப் பிறப்பித்திருந்தது கொரோனா முதல் அலையின் தாக்கம் மெல்லக் குறைந்துவந்த நிலையில் தமிழக அரசு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியது .
பல மாதங்களாக கொரோனா பாதிப்பு காரணமாகத் திரையரங்குகள் திறக்கப்படவில்லை. பல படங்கள் தயாரிக்கப்பட்டு வெளியாக முடியாமல் ஒட்டுமொத்த சினிமா துறையினரும் தத்தளித்து வந்தனர் . இவர்களைப் போலவே தமிழகத்தில் பல தியேட்டர் உரிமையாளர்களும் வாழ்வாதாரத்தை இழந்தனர் .
சில நாட்கள் மட்டுமே , திரை அரங்குகள் திறந்திருந்தாலும் நடிகர் விஜய்யின் மாஸ்டர் , கார்த்தியின் சுல்தான் உள்ளிட்ட திரைப்படங்கள் ஒட்டுமொத்த திரைத்துறையினர் , ரசிகர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களை மகிழ்ச்சி அடையச்செய்தது .
எனினும் தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவல் கடந்த ஏப்ரல் மாதம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. இதையொட்டி தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏப்ரல் 24 ஆம் தேதி முதல் சினிமா திரையரங்கங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து மே மாதம் 10-ஆம் தேதி தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக மீண்டும் கடந்த 4 மாதங்களாகத் திரையரங்குகள் மூடப்பட்டன .
நான்கு மாதங்களுக்கு பிறகு கொரோனா பரவல் மீண்டும் குறையத் தொடங்கியதையடுத்து தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. அதன் காரணமாக ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான தமிழ் நாடு அரசு ஆகஸ்ட் 23-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் , சினிமா தியேட்டர்கள், உயிரியல், தாவரவியல் பூங்காக்கள், கடற்கரை, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு பஸ் இயக்கம் உள்ளிட்டவற்றுக்கு நேற்று முதல் அனுமதி அளித்தது. சினிமா தியேட்டர்கள் 50 சதவீத பார்வையாளர்களுடன் இயங்க வேண்டும். திரையரங்கத்தில் பணியாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியது. அரசின் அறிவிப்பைத் தொடர்ந்த மாநிலத்தின் பல பகுதிகளில் திரை அரங்குகள் திறக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் ,வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள சினிமா திரையரங்கங்கள் வருகிற 26-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என வட ஆற்காடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து ABP நாடு செய்தி குழுமத்திடம் பேசிய , வட ஆற்காடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சீனிவாசன் கூறுகையில், ”வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் 60 திரையரங்கங்களில் சுமார் 90 திரைகள் (திரை) உள்ளன. திரையரங்கங்களைத் திறக்க அரசு திடீரென அனுமதி அளித்ததால் பல திரைகள் உள்ள திரையரங்கங்களில் தூய்மை பணிகள் உடனடியாக மேற்கொள்ள முடியவில்லை. மேலும், புதிதாக எந்த தமிழ்ப் படங்களும் வெளியாகவில்லை. அதனால் வேலூர் உள்பட 4 மாவட்டங்களிலும் நேற்று திரையரங்கங்கள் திறக்கப்படவில்லை. வருகிற 26-ஆம் தேதி (வியாழக்கிழமை) ஹாலிவுட் திரைப்படமான கான்ஜுரிங் 3 வெளியாக உள்ளது. எனவே அன்றைய தினமே 4 மாவட்டங்களில் உள்ள திரையரங்கங்கள் திறக்கப்படுகிறது. கான்ஜரிங் 3 படத்தைத் திரையிடாதவர்கள் ஏற்கனவே வெளியாகி மக்களிடம் வரவேற்பைப் பெற்ற மாஸ்டர், கர்ணன் உள்ளிட்ட படங்களைத் திரையிட உள்ளனர்” என்று தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
ஐபிஎல்
ஐபிஎல்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion