மேலும் அறிய
Advertisement
சமூகசேவை செய்ய வேலூருக்கு வந்து சொந்த நாட்டுக்கு செல்ல முடியாமல் தவிக்கும் நெதர்லாந்து சமூகசேவகி
’’டெல்லியில் உள்ள நெதர்லாந்து தூதரக அதிகாரிகள் மூலம் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, அதுவரை அவரது செலவுகளை மாவட்ட நிர்வாகமே ஏற்றுக்கொள்ளும்’’
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு சேவை செய்வதற்காக வேலூர் வந்த நெதர்லாந்து பெண்மணி , அவரது வங்கிக்கணக்கு முடக்கப்பட்டதால் சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றார். உணவு , தங்குமிடம் என அத்யாவிசய தேவைகளுக்குக் கூட பணம் இல்லாமல் தவிப்பதால் தன்னை சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பிவைக்கும்படி வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனிடம் மனு அளித்துள்ளார் .
வடமேற்கு ஐரோப்பிய நாடான நெதர்லாந்தைச் சேர்ந்தவர் ஹென்னா மேரி (44). இந்தியாவில் உள்ள மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்குச் சேவை செய்யும் நோக்கில் பல அனாதை இல்லங்கள் மற்றும் தனியார் காப்பகங்கள் மூலம் உதவி தேவைப்படும் குழந்தைகளை அடையாளம் கண்டு பல ஆண்டுகளாக அவர்களுக்கு சேவை மற்றும் நிதியுதவி செய்து வருகிறார் . இந்நிலையில் வேலூர் பகுதியிலுள்ள குழந்தைகளுக்குச் சேவை செய்யும் நோக்கத்துடன் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வேலூருக்கு வந்துள்ளார்.
பின்னர் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் வேலூரிலேயே தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதனால் காட்பாடி காந்திநகர் ஜெகநாதபுரம் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கி வேலூர், காட்பாடி, சத்துவாச்சாரியில் பல்வேறு சமூகப் பணிகள் செய்து வந்தார். 2 ஆண்டுகளாக இங்கேயே தங்கி இருப்பதால் அவர் கொண்டு வந்த பணம் முழுவதும் தீர்ந்து விட்டது. மேலும் அவர் இந்தியாவில் தங்கி இருப்பதற்கான விசா காலம் முடிந்து விட்டது. அவரது வங்கிக் கணக்கும் முடங்கியது.
சொந்த ஊர் செல்லவும், சாப்பாட்டுக்கு வழியின்றியும் தவித்த அவர், நெதர்லாந்து நாட்டில் உள்ள உறவினர்களுக்கு கடிதம் எழுதியும் பதில் இல்லை. மொபைலிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையறிந்த அ.தி.மு.க கட்சியின் மாநில மாணவரணி துணை செயலாளர் எம்.டி.பாபுவுக்கு தகவல் தெரியவந்தது. இதையடுத்து ஹென்னா மேரியை அவரது நாட்டுக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். அதன்படி நேற்று ஹென்னா மேரியை, எம்.டி.பாபு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அழைத்து வந்தார்.
அவர்கள், மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனை சந்தித்து நெதர்லாந்து நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர், நெதர்லாந்து தூதரகம் மூலம் ஹென்னா மேரியை அவரது நாட்டுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் இதுகுறித்து சென்னை மற்றும் டெல்லியில் உள்ள தூதரக அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கும்படி மனு அளித்துள்ளனர்.
ஹென்னாமேரி கூறுகையில், மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் வாழ்க்கை மேம்படுவதற்கு என்னால் முடிந்த உதவி செய்ய வேலூருக்கு வந்தேன். வந்த இடத்தில் ஊரடங்கால் இங்குச் சிக்கிக்கொண்டேன். எனது வங்கிக் கணக்கு எனது நாட்டில் உள்ளது. அந்த கணக்கு முடக்கப்பட்டுள்ளதால் என்னால் பணம் எடுத்து செலவு செய்யவும் முடியவில்லை. நாடு திரும்பவும் முடியவில்லை. இதனால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளானேன் என தெரிவித்தார் .
இது குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் தெரிவிக்கும் பொழுது டில்லியில் உள்ள நெதர்லாந்து தூதரக அதிகாரிகள் மூலம், அவரை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தனர். அதுவரைக்கும் அவரது அனைத்து செலவுகளையும் மாவட்ட நிர்வாகமே ஏற்றுக்கொள்ளும் என்று தெரிவித்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion