துணை முதல்வர் பதவி.. எதிர்பார்ப்பது எல்லாத்தையும் கொடுக்க முடியுமா? - அமைச்சர் துரைமுருகன்
கலைஞரின் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்படும் என அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. அதிகமானோர் குறைந்த விலையில் வாங்கி படிக்க உதவியாக இருக்கும் - அமைச்சர் துரைமுருகன்
காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வேலூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணைர், மேயர், துணை மேயர் 17 வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். அப்போது காட்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வரும் மாநகராட்சி வார்டுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆலோசித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன்
குடியாத்தம் அடுத்த மோர்தானா அணை சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு முறையும் காவிரி நீரை போராடி தான் பெற்று வருகிறோம். நடிகர் விஜயின் கட்சிக்கொடியை பறக்கும் போது பார்பேன் என்றார். துணை முதல்வர் பதவி குறித்த கேள்விக்கு, "எதிர்பார்ப்பது எல்லாத்தையும் கொடுக்க முடியுமா?, எதிர்பார்க்காததையும் கொடுக்க முடியும்." முதலமைச்சர் தன்னுடைய ஆளுகைக்கு உட்பட்டு, நிர்வாகத்தின் தேவையான நேரத்தில் எதை செய்ய வேண்டுமோ அதை செய்வார். அதில் போய் நாம் தலையிடக்கூடாது. இந்த ஊரில் மட்டுமல்ல எல்லா ஊரிலும் ஒரு பழக்கம் உள்ளது குப்பைகளை கொட்டுவதற்கு என ஒரு இடத்தை தேர்வு செய்வது இல்லை. குறிப்பாக வேலூர் மாநகராட்சியில் எங்கு குப்பை கொட்ட சென்றாலும் அங்கு தடுக்கிறார்கள். என் தொகுதி வந்தால் நான் தடுக்கிறேன் பக்கத்து தொகுதிக்கு போனால் அவர் தடுக்கிறார். அதனால் எங்க கொட்டுவது என தெரியவில்லை அவர்களுக்கு. அதனால் ஆறு ஏரிகளில் கொட்டி விடுகிறார்கள், சென்னை கூவத்தில் அளவுக்கு அதிகமாக கொட்டி உள்ளார்கள். ஆக நீர் நிலைகளை காப்பாற்றுகிறோம் என ஒரு பக்கம் சீர்பற்றுகிறோம் என ஒரு பக்கம் கோஷம் போட்டாலும் அதே நீர் நிலைகளை கெடுக்கிறார்கள். ஏற்கனவே கழிவுநீர் தண்ணீரால் பாலாறு கெட்டி விட்டது என சொல்கிறார்கள் போதா பற்றாக்குறைக்கு குப்பை கொட்டி வேற பாழ் படுத்துகிறார்கள்” என அமைச்சர் துரைமுருகன் பேசினார்.