LEO: 'லியோ' திரைப்படம்....வேலூர் மாவட்டத்தில் கட்டுப்பாடுகளை அறிவித்த ஆட்சியர்
லியோ திரைப்படம் வேலூர் மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் அறிவிப்பு. ஒரு நாளைக்கு 5 காட்சிகள் தான், புகார் தெரிவிக்க எண் அறிவிப்பு - மாவட்ட ஆட்சியர்.
வேலூர் (Vellore News): லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா, அர்ஜுன், கௌதம் மேனன், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், மிஷ்கின் உள்ளிட்டோரின் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் 'லியோ'. இத்திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் தமிழகத்தில் திரைப்படம் வெளியாவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது; வேலூர் மாவட்டத்தில் உள்ள தியேட்டர்களில் நடிகர் விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம் திரையிட கூடுதலாக ஒரு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது."LEO" திரைப்படத்தினை திரையிடும் திரையரங்குகளில் 19.10.2023 முதல் 24.10.2023 வரை கூடுதலாக சிறப்புக் காட்சி (ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5 காட்சிகள்) நடத்திடவும், தொடக்க காட்சி காலை 09.00 மணிக்கும் கடைசி காட்சி அடுத்த நாள் அதிகாலை 01.30 மணிக்கும் முடிவடையும் வகையில் திரையிடுமாறு அரசு அரசு ஆணைகள் வெளிட்டுள்ளன.
Leo Actors Salary: விஜய் முதல் மன்சூர் அலிகான் வரை.. லியோ பட நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
திரையரங்க உரிமையாளர் திரையரங்கில் சுகாதார குறைபாடுகள் மற்றும் கூட்ட நெரிசல் ஏதும் ஏற்படா வண்ணமும், திரைப்படம் காண்போரின் போக்குவரத்து உள்வருதல் வெளியேறுதல் வாகனம் நிறுத்துதல் மற்றும் இயக்குதல் பாதிக்கப்படாத வகையிலும், காவல் துறையினரின் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு பெறுவதற்கு தக்க ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும். மேலும் மக்கள் மற்றும் பார்வையாளர்கள் சிரமமின்றி உள்ளே வரவும், வெளியேறவும் இருக்கைகள் மற்றும் திரையரங்க வளாகத்தினை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். திரையரங்குகளை சுகாதாரமாக பராமரிக்க போதுமான கால இடைவெளியுடன் உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் சிறப்பு காட்சி நடத்தப்பட வேண்டும், அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் மற்றம் பார்கிங் கட்டணம் ஆகியவற்றினை கடைபிடிக்கவும். தியேட்டர்களை சுகாதாரமாக பராமரிக்க போதுமான கால இடைவெளியுடன் உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் சிறப்பு காட்சி நடத்தப்பட வேண்டும்.
விதிமீறல்கள் இருப்பின் பொதுமக்கள் வருவாய் கோட்ட அலுவலர், வேலூர் (செல் 9445000417), வருவாய் கோட்ட அலுவலர், குடியாத்தம் (செல் 9442999120), வட்டாட்சியர் வேலூர் (செல் 9445000508), வட்டாட்சியர், காட்பாடி (செல் 9445000510), வட்டாட்சியர், குடியாத்தம் (செல் 9445000509), வட்டாட்சியர், பேர்ணாம்பட்டு (செல் 9486064172) ஆகியோர்களுக்கு புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Special Show: 'லியோ' படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி - குஷியில் விஜய் ரசிகர்கள்