மேலும் அறிய
Advertisement
ஓடும் ரயிலில் ஏற முயன்ற முதியவர்; தவறி விழுந்ததால் இரு கால்கள் துண்டிப்பு - தண்ணீர் பாட்டில் வாங்க போனதால் நேர்ந்த சோகம்
சோமா சங்கர் தண்ணீர் பாட்டிலை வாங்கிக் கொண்டு வருவதற்குள் ரயில் கிளம்பிய நிலையில் அவசர அவசரமாக ஓடிச் சென்று ஏறும் பொழுது நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையில் சிக்கி விபத்துக்குள்ளானார்.
ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் தண்ணீர் பாட்டில் வாங்கிக் கொண்டு ஓடும் ரயிலில் ஏற முயன்ற முதியவர் தவறி விழுந்ததில் ரயிலின் சக்கரத்தில் சிக்கி இரு கால்கள் துண்டிக்கப்பட்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு ராஜி நகர் பகுதியை சேர்ந்தவர் சோமா சங்கர் (70). விஜயவாடா பகுதியில் இருந்து கோயம்புத்தூர் செல்வதற்காக கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளார். ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் முதலாவது நடைமேடை அருகே வந்து நின்ற ரயிலில் இருந்து இறங்கி தண்ணீர் பாட்டில் வாங்குவதற்காக சென்றுள்ளார்.
சோமா சங்கர் தண்ணீர் பாட்டிலை வாங்கிக் கொண்டு வருவதற்குள் ரயில் கிளம்பிய நிலையில் அவசர அவசரமாக ஓடிச் சென்று ஏறும் பொழுது நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையில் சிக்கி விபத்துக்குள்ளானார். இதில் இவருடைய இரண்டு கால்களும் துண்டாகியது உடனடியாக அவரை மீட்ட ரயில்வே போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது.
துண்டான அவரது ஒரு காலை மூன்று மணி நேரத்திற்குள் இணைக்க வேண்டும் என்பதற்காக மருத்துவர்கள் துரிதமாக செயல்பட்டு மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு மீண்டும் 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரயில் நிலையத்தில் தண்ணீர் பாட்டில் வாங்குவதற்காக இறங்கிய முதியவர் வாங்கிய பிறகு ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது ரயில் சக்கரத்தில் இடையில் மாட்டி கால் துண்டான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு காணப்பட்டது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion