மேலும் அறிய
Advertisement
’கே.சி.வீரமணி வீட்டில் ரெய்டு: ’செய்தியாளரை தாக்கிய 2 பேர் கைது’- முன்னாள் எம்.எல்.ஏ ஓட்டம்!
’’முக்கிய குற்றவாளி வாணியம்பாடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் உட்பட 3 பேரை காவல்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர்’’
கே சி வீரமணி வீட்டில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையின் பொது செய்தியாளரைத் தாக்கிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார் ஓட்டுநர் உட்பட 2 பேரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர் . மேலும் தலைமறைவான முன்னாள் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் சம்பத் குமார் உட்பட 3 பேரை காவல்துறை தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை இளையம்பட்டி கிராமம் காந்திநகர் பகுதியில் உள்ள அதிமுக திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி வீட்டில் நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை அதிரடி சோதனை நடத்தினர். அதேபோல் ஜோலார்பேட்டை ஏலகிரி மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அவரது ஆதரவாளர்கள் , உறவினர்கள் வீடுகள் எனப் பல இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
சோதனை நடந்த வியாழன் கிழமை காலை முதலே அவரது இடையம்பட்டி வீட்டின் அருகே கூடத்தொடங்கிய கே.சி.வீரமணியின் ஆதரவாளர்கள் இது திமுக அரசின் திட்டமிட்ட அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை, உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவை தோற்கடிக்கப் போடப்பட்ட மாஸ்டர் பிளான் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை வைத்து லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனையை எதிர்த்து கருப்பு கோடி ஏந்தி, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனார். இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனையை முடித்துவிட்டு அரசாங்க வாகனங்களில் அதிகாரிகள் வீரமணியின் வீட்டிலிருந்து வெளியேறும்போது ஆபாசமான வார்த்தைகளால் கோஷங்களை எழுப்பியவாறே வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கிடையில் அன்று மதியம் 1 மணி அளவில் இலங்கை ஒழிப்புத் துறை சோதனை குறித்த செய்தி சேகரிக்கப் பல பல பத்திரிகை , ஊடக நிறுவனங்களின் செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் எனப் பலர் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர் .
அதேபோல் சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர் கணேசன் மற்றும் சேலம் மண்டல செய்தியாளர் குமரேசன் ஆகியோர்கள் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது, கே.சி.வீரமணி பற்றி தவறான செய்திகளை வெளியிட்டதாக கூறி அவர்களை அதிமுகவை சார்ந்த முன்னாள் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் (45) தலைமையில் 50க்கும் மேற்பட்ட ஒரு கும்பல் அவர்கள் இருவரையும் கடுமையாகத் தாக்கி அங்கிருந்து விரட்டியடித்தனர். இதில் படுகாயமடைந்த செய்தியாளர் கணேசன் ஜோலார்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து பத்திரிகையாளர்கள் சம்பவ இடத்திலேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர் .
தகவல் அறிந்து ஜோலார்பேட்டை காவல் நிலையத்திற்கு வந்த திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி பாலகிருஷ்ணன் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கொடுத்து வாக்குறுதியின் அடிப்படையில் , பத்திரிகையாளர்கள் அங்கிருந்து களைந்து சென்றனர் . இதுகுறித்த புகாரின் பேரில் நேற்று முன்தினம் ஜோலார்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெய்சங்கர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் சம்பத்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது இந்தியத் தண்டை சட்டம் பிரிவு 147 (கலகம் செய்யச் சட்ட விரோதமான கூட்டத்தைச் சேர்த்தது) 323 (காயபடுத்த வேண்டும் என்ற நோக்கில் தாக்கியது) , 506 (1) கொலை மிரட்டல் விடுத்தது, (294 பி) ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர் . இந்த நிலையில் நேற்று வாணியம்பாடி முன்னால் சட்டமன்ற உறுப்பினர் சம்பத் குமாரின் கார் ஓட்டுநர் கோவிந்தன் (25) , வள்ளிபட்டு கிராமத்தைச் சேர்ந்த கிரி (50 ) ஆகிய இருவரையும் காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
பின்னர் இரண்டு பேரையும் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர் . மேலும் தலைதலைமறிவாகியுள்ள முக்கிய குற்றவாளி வாணியம்பாடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் உட்பட 3 பேரை காவல்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion