’ஆரணியில் ஓட்டலில் சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம்’- உணவுபாதுகாப்புத்துறை எச்சரிக்கை...!
’’உணவுப்பாதுகாப்பில் சந்தேகம் ஏற்பட்டால் 94440 42322 என்ற இலவச எண்ணிற்கு பொதுமக்கள் புகார் அளிக்க வேண்டுகோள்’’
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மணிகூண்டு அருகில் இயங்கி வந்த 7 ஸ்டார் என்ற அசைவ ஒட்டலில் கடந்த 8ஆம் தேதியன்று இரவு சுமார் 40க்கும் மேற்பட்டோர் உணவு அருந்தி வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளன. மேலும் ஆரணி வேலூர் திருவண்ணாமலை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் பாதிக்கபட்டவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி லோசினி (10) என்ற சிறுமி உயிரிழந்தார் பின்னர் ஆரணி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து சிறுமியின் உடல் நல்லடக்கம் செய்யபட்டனர். இதனையொடுத்து ஒட்டல் உரிமையாளர் அம்ஜித்பாஷா ஓட்டல் சமையலர் முனியாண்டி ஆகியோரை 3பிரிவின் கீழ் கைது செய்து ஆரணி நீதிமன்றம் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி வந்தவாசி கிளை சிறையில் காவல்துறையினர் இருவரையும் அடைத்தனர்.
இந்நிலையில் இன்று ஆரணி மார்க்கெட் ரோடு காந்தி ரோடு புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளிலும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இளங்கோ மற்றும் சேகர் ஆகியோர் தலைமையில் தொடர்ந்து 2 ஆவது நாளான இன்று அரசு விதித்த விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த 3 இறைச்சி கடைகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இறைச்சி கடைகளில் அசுத்தமாக இருந்த இறைச்சி கடைகளுக்கும் மற்றும் உணவு பாதுகாப்பு துறை சார்பில் எச்சரிக்கை நோட்டீஸை அதிகாரிகள் வழங்கி உள்ளனர். அங்கு ஒரு முட்டை கடையில் அழுகிய நிலையில் 200 முட்டைகள் மற்றும் 2 கிலோ கோழி இறைச்சியை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து ரசாயனம் உற்றி அதனை அழித்தனர்
எதிரொலியாக இன்று ஆரணி நகராட்சியில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மற்றும் ஆரணி ஓட்டல் உரிமையாளர், ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராமகிருஷ்ணன் செய்யார் எம்.எல்.ஏ ஜோதி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது மேலும் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராமகிருஷ்ணன் ஓட்டல் உரிமையாளர் ஆலோசனை கூட்டத்தில் பேசும் போது, தரமற்ற உணவு தயாரிக்கும் ஓட்டல்களுக்கு கடுமையான தண்டனை வழங்கபடும் என்றும் அரசின் விதிகளை மீறி செயல்படும் ஓட்டல்களுக்கு சீல் வைக்கபடும் மற்றும் அபராதமும் விதிக்க நேரிடும் எனவும் எச்சரித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி :
பொதுமக்கள் தரமில்லா உணவு என சந்தேகம் ஏற்பட்டாலும் ஓட்டலில் தரமான குடிநீர் உணவு இல்லையென்று சந்தேகம் வந்தாலும் உடனடியாக 9444042322 என்ற இலவச எண்ணிற்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் புகார் தெரிவிக்கும் நபரின் விவரங்கள் ரகசியமாக வைக்கபடும் மற்றும் அதற்கான தீர்வு இரண்டு நாட்களில் புகார்தாரருக்கு மெசேஜ் அனுப்படும் மற்றும் ஓட்டல் உரிiமாளர் கூட்டத்தில் முக்கிய 5 முக்கிய தகவல் அளிக்கபட்டுள்ளன.
முதலில் தரமான குடிநீர் சமையல் எண்ணெய் மறுசுழற்சி செய்யபடவில்லை, அரசால் தடைசெய்யபட்ட நிறமி பொருட்களை பயன்படுத்தவில்லை, இறைச்சி அன்றே வாங்கி பயன்படுத்த வேண்டும், சேமிக்க வைக்கவில்லை என்ற 5 தகவல்களை ஓட்டல்களில் கடைபிடிக்க வேண்டும் என்று மாவட்ட உணவு அதிகாரி ராமகிருஷ்ணன் இவ்வாறு பேசினார்.
இறுதியாக 5 முக்கிய அறிவிப்புகான நோட்டீஸை திமுக மாவட்ட பொறுப்பாளர் தரணிவேந்தன் செய்யார் எம்.எல்.ஏ ஜோதி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராமகிருஷ்ணன் ஆகியோர் ஓட்டல் உரிமையாளர்களிடம் வழங்கினார்கள். இந்த நோட்டீஸை ஓட்டலில் வாசலில் ஒட்டி வைத்து பொதுமக்களின் பார்வைக்க வைக்க வேண்டும் என்று அதிகாரிகள் ஓட்டல் உரிமையாளர்களை அறிவுறுத்தினார்கள்.