மேலும் அறிய

வாணியம்பாடி : லஞ்சம் பெற்றுக்கொண்டு அலட்சியம் காட்டியதாக குற்றச்சாட்டு.. வட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணா..!

கொரோனா காலகட்டத்தில் தங்கள் கைக்குழந்தைகளுடன் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிப்பதாகத் தெரிவித்தனர்

விவசாயிக்குச் சொந்தமான நிலத்தை அளவீடு செய்யாமல் 4 மாதங்களாக அலைக்கழித்ததாக, கைக்குழந்தையுடன் ஒரு  குடும்பத்தினர் வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில்  தர்ணா போராட்டம் நடத்தினர். வாணியம்பாடி அடுத்த கலந்திரா பகுதியைச் சேர்ந்தவர்  ஜோதி (வயது 72 ) இவருடைய மனைவி  லட்சுமி (வயது 65)  இவர்களுக்கு நேதாஜி சுபாஷ் சந்திரா போஸ் (வயது 30 ) , ரோஸி (வயது 31 ) மற்றும் ரீட்டா (வயது 27 ) என மூன்று பிள்ளைகள் உள்ளனர் .
 
வாணியம்பாடி : லஞ்சம் பெற்றுக்கொண்டு அலட்சியம் காட்டியதாக குற்றச்சாட்டு.. வட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணா..!
 
 கடந்த 12 வருடத்திற்கு முன்பு லட்சுமி  இறந்துவிட்ட  நிலையில் தந்தை ஜோதி 6  மாதங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் இறந்துள்ளார். சுபாஷ் மற்றும் ரோஸிக்கு திருமணம் நிறைவுபெற்ற நிலையில், ரீட்டாவுக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை . இவர் தற்பொழுது அவரது சகோதரர் சுபாஷின் பராமரிப்பில் உள்ளார் . இந்த நிலையில்  இவர்களது தந்தைக்கு  சொந்தமான 3 ஏக்கர் விவசாய நிலத்தில் பிள்ளைகள் சுபாஷ் , ரோஸி , ரீட்டா ஆகியோர் விவசாயம் செய்து வந்துள்ளனர் .
இந்நிலையில் இவர்களின் சித்தப்பா கோவிந்தன் (வயது 60 ) இவரது  மகன்கள் பாபு(பாபு 31), சதீஷ் (வயது 28), மற்றொரு சித்தப்பா மகன் சங்கர் ஆகியோர்  அவர்களது நிலத்தை அபகரிக்க முயற்சி செய்துள்ளனர்.
 
எனவே இவர்களுக்குச் சொந்தமான  நிலத்தை அளவீடு செய்து தனிப்பட்டா  மாற்றும் செய்து தரக்கோரி ராணிப்பேட்டை  மாவட்ட ஆட்சியர் ,  வட்டாட்சியர் , டிஎஸ்பி அலுவலகம் என அனைத்து துறை அதிகாரிகளிடம்  கடந்த 4 மாதங்களில் 8 புகார் மனுக்களை அளித்துள்ளனர். ஆனால் அவர்களது புகார் மீது அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வந்துள்ளனர் .
 
வாணியம்பாடி : லஞ்சம் பெற்றுக்கொண்டு அலட்சியம் காட்டியதாக குற்றச்சாட்டு.. வட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணா..!
 
மேலும் நில அளவீடு செய்ய வரும்போது அதே  பகுதியில்  பணிபுரியும் சிப்பந்தி சீனிவாசன் என்பவர் எதிர் தரப்பினரிடம் (அவர்களது சித்தப்பாவிடம்)  கையூட்டு பெற்றுக் கொண்டு அவருக்குச் சாதகமாக நடந்துகொண்டுள்ளார் .  இதனால் நான்கு மாத காலமாக தங்களை அதிகாரிகள் அலட்சியப்படுத்தி வருவதால் மனமுடைந்து விரக்தியடைந்த   சுபாஷ் அவரது மனைவி மீனா (வயது 25 ) இவர்களது நான்கு பெண்குழந்தைகள் மற்றும்  சுபாஷின் தங்கை  ரீட்டா ,ஆகியோர் குடும்பத்துடன்  வட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் . இதனால் இன்று வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
மேலும் கொரோனா காலகட்டத்தில் தங்கள் கைக்குழந்தைகளுடன் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிப்பதாகத் தெரிவித்த அவர்கள், சிப்பந்தி  சீனிவாசனைப் பணிமாற்றம் செய்து   தங்களுக்கு உடனடியாக  நியாயம் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இல்லையெனில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொல்வதற்கு அனுமதி அளிக்கும்படி  தெரிவித்தனர் .
 
வாணியம்பாடி : லஞ்சம் பெற்றுக்கொண்டு அலட்சியம் காட்டியதாக குற்றச்சாட்டு.. வட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணா..!
 
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி காவல்துறையினர் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எனினும் அவர்கள் போராட்டத்தைக் கைவிட மறுத்ததால் வாணியம்பாடி வட்டாட்சியர் மோகன் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு உடனடியாக சம்மந்தப்பட்ட இடத்திற்கு அலுவலர்களை அனுப்பிவைத்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியதன் பேரில்  சுமார் 2 மணிநேரத்திற்கு பின்னர் போராட்டத்தைக் கைவிட்டனர். 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
"யப்பா" - 2 MATHS PERIOD: அமித்ஷாவின் ரியாக்ஷனை வைத்து மோடியை கலாய்த்த பிரியங்கா காந்தி
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
உங்களுக்கு நான் இருக்கேன்: இபிஎஸ் போடும் கணக்கு; நிர்வாகிகளுக்கு கொடுத்த அட்வைஸ்
உங்களுக்கு நான் இருக்கேன்: இபிஎஸ் போடும் கணக்கு; நிர்வாகிகளுக்கு கொடுத்த அட்வைஸ்
Premalatha Vijayakanth:
Premalatha Vijayakanth: "விஜய் முதலில் தன்னை நிரூபிக்கட்டும்” ”வாய்சவடால் மட்டும் இருக்கக்கூடாது” -பிரேமலதா விஜயகாந்த்.
Embed widget