பள்ளிகளில் அனுமதியின்றி விடுதி நடத்தினால் கடுமையான நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
திருவண்ணாமலை மாவட்டத்தில் அனுமதியின்றி பள்ளிகளில் விடுதி நடத்தினால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் முருகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
![பள்ளிகளில் அனுமதியின்றி விடுதி நடத்தினால் கடுமையான நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை District Collector warns that strict action will be taken if hostels are run in schools without permission பள்ளிகளில் அனுமதியின்றி விடுதி நடத்தினால் கடுமையான நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/28/e62ff11a233650e8a12bb421b73d22341659020209_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் தங்குமிடத்துடன் கூடிய அரசு, தனியார் பள்ளி மற்றும் உண்டு உறைவிட பள்ளியின் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கருதி பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஆட்சியர் பேசுகையில்: “தமிழக அரசு மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி செயல்படுத்தி வருகிறது. பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனை வழங்குவதற்கு மாவட்ட சமூக நல அலுவலர்கள் மூலம் உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் மாணவர்கள் தங்கும் அரசு பள்ளி, கல்லூரி விடுதிகள், உண்டு உறைவிட பள்ளி விடுதிகள் 41, அரசு நிதியுதவி பெறும் பள்ளி விடுதிகள் 18, தனியார் பள்ளி விடுதிகள் 12 என மொத்தம் 71 பள்ளி விடுதிகள் செயல்பட்டு வருகின்றது. ஆபத்தான கட்டிடங்கள் இருந்தால் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதுமட்டுமல்லாமல் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் மனநல பாதிப்பு, மனசோர்வு, படிப்பில் ஆர்வமின்மை ஆகியவைகளை கண்டறிந்து அவ்வாறு இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உளவியலாளர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்களின் மனச்சோர்வை போக்குவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் ஏதேனும் மாற்றங்களை கண்டறிந்தால் அவற்றை புறக்கணிக்காமல் அவர்களுடன் கலந்துரையாடல் வேண்டும். பள்ளிகளில் அனுமதியின்றி விடுதி நடத்தினால் கடுமையான நடவடிக்கை” என்றார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பேசுகையில்;
அமைதியான மாவட்டமாக இருந்த கள்ளக்குறிச்சி, மாவட்டதில் ஏற்பட்ட சம்பவங்கள் குறித்து அனைத்து ஆசிரியர்களும் அரிந்து இருப்பிர்கள். நான் அங்கு 7 நாட்கள் இருந்தேன் எனவும், திருவள்ளூரில் ஏற்பட்ட சம்பவம் அனைவருக்கும் தெரியும். மாணவர்கள் பெற்றோர்களை விட ஆசிரியர்கள் கூட தான் அதிக நேரம் உள்ளனர். பள்ளியில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் சொல்லி கொடுப்பது மட்டும் வேலையில்லை. மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக ஏதேனும் பிரச்சினை உள்ளதா, பள்ளியில் சக மாணவர்களுடன் அவர்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றனர் எனவும் பார்க்கவேண்டும், அதுமட்டுமின்றி அவர்களது மன நிலை எப்படி உள்ளது போன்றவற்றையும் ஆசிரியர்கள் அறிந்து கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். சைல்டு லைன் இலவச உதவி எண் குறித்து பள்ளிகளில் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.பெண் குழந்தைகள் தங்கி இருக்கும் இடத்தை தவிர பள்ளி மற்றும் விடுதிகளில் கண்டிப்பாக கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். பள்ளி மற்றும் விடுதிகளில் புகார் பெட்டி வைக்க வேண்டும். ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும். மேலும் அந்த சம்பவம் குறித்து 12 மணி நேரத்திற்குள் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு விவரத்துடன் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.
மேலும் திருவண்ணாமலையில் சில நாட்களுக்கு முன்பு அரசு பள்ளியில் இருதரபப்பு மாணவர்கள் இடையே தகராறில் ஈடுபட்டனர். பள்ளிகளில் இதுபோன்ற பிரச்சினைகள் இருப்பது கண்டறிந்தால் ஆசிரியர்கள் முன்கூட்டியே காவல்துறையின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும்.குட்கா பொருட்களை மாணவர்கள் யாரேனும் பயன்படுத்துவது தெரியவந்தால் அவர்களை உடனடியாக கண்டித்து, கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். காவல்துறை தகவல் தெரிவித்தால் சம்பந்தப்பட்ட பள்ளியை சுற்றியுள்ள பகுதியில் சோதனை நடத்தி அவற்றை அழிக்க காவல்துறை நடவடிக்கை எடுப்போம் என்றும், மேலும் இந்த தகவல் அளிக்காமல் நாம்மே பாற்று கொள்ளலாம் என்று நினைத்து நீங்கள் தவறு செய்தால், பள்ளியின் உரிமையாளரை கைது செய்யப்படுவார் என்று எச்சரித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)