மேலும் அறிய

திருவண்ணாமலையில் 13ஆம் நூற்றாண்டை சேர்ந்த தவ்வை என்னும் மூத்ததேவி சிற்பம் கண்டுபிடிப்பு...!

’’பொதுவாக தவ்வை  கால்களை பரப்பித் தொங்கவிட்டு பெருத்த வயிறுடன் காட்டப்படுவாள். இங்கு சுகாசனத்தில் அழகிய உருவமாக காட்டப்பட்டுள்ளாள்’’

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் அரிதாரிமங்கலம் கிராமத்தில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தை சேர்ந்தவர்கள்  களஆய்வு மேற்கொண்டனர் அப்போது ஏரிக்கரை அருகே 13ஆம் நூற்றாண்டை சேர்ந்த தவ்வை சிற்பம் கல்வெட்டுடன் கண்டுபிடிக்கப்பட்டது. இது தமிழ்நாட்டில் கல்வெட்டுடன் கூடிய முதல் தவ்வை சிற்பம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இது குறித்து  நடுவர் ஆய்வு மன்றத்தின் செயலாளர் பாலமுருகனிடம் பேசுகையில், நாங்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் பல வருடங்களாக வரலாற்று ஆய்வு நடுவத்தை நடத்தி வருகின்றோம். எங்களுக்கு பழமையான கல்வெட்டுகள் பற்றி தகவல் வரும் அதன் அடிப்படையில் நாங்கள் சென்று கல்வெட்டுகளை ஆய்வு செய்து வருகின்றோம். அரிதாரிமங்கலம் ஏரிக்கரையின் வடக்குப் பகுதியில் சுமார் 3 அடி உயரமும் 3 அடி நீளமும் உள்ள தவ்வை, மூத்ததேவி என்று வழங்கப்படுகின்ற சிற்பம் ஒன்று உள்ளது. இந்த சிற்பத்தில் இடதுபுறத்தில் 8 வரியில் கல்வெட்டு உள்ளது. இந்த கல்வெட்டையும் சிற்பத்தையும் ஆய்வு செய்த கல்வெட்டு அறிஞர் சு. ராஜகோபால் கூறியதாவது,  
நீர் ஆதாரங்கள் மனித வாழ்வில் இன்றியமையான கூறுகள் ஆதலால் அவை தெய்வங்களாக வணங்கப்படுவதும் அவற்றைத் தெய்வங்கள் பாதுகாப்பதாகவும் தமிழக மக்களிடையே நம்பிகை இருந்து வருகிறது. 


திருவண்ணாமலையில் 13ஆம் நூற்றாண்டை சேர்ந்த தவ்வை என்னும் மூத்ததேவி சிற்பம் கண்டுபிடிப்பு...!

ஏரிமடைகளை கருப்பு காப்பதாக “மடை கருப்பு தெய்வங்கள்” பல இடங்களில் உள்ளன.   அம்மாதிரியான சிற்பமும் அதனுடன் சேர்ந்த கல்வெட்டும் அரிதாரிமங்கலம் கிராமத்தில் கிடைத்துள்ளது. இந்த கல்வெட்டில் ஏரியிலிருந்து நீர் வயல்களுக்குப் பாய உதவும் தூம்பிணையும் கேட்டையாரையும் திருவண்ணாமலையைச் சேர்ந்த பெண் ஒருவர் செய்து கொடுத்தார் என்பது செய்தியாகும். தவ்வைக்கு  பிங்கல நிகண்டு கழுதையூர்தி, காக்கைக்கொடியாள், முகடி, தௌவை கலதி, மூதேவி, சீர்கேடி, கேட்டை, கெடலணங்கு, ஏகவேணி, சேட்டை என்று 11 பெயர்களைக் குறிப்பிடுகிறது.

அவற்றில் கேட்டை என்ற பெயர் இக்கல்வெட்டில் திருக்கேட்டையார் என்று குறிக்கப்பட்டுள்ளது. பொதுவாக துர்க்கை/கொற்றவை சிற்பங்களில் இதுவரை அவற்றைச் செய்து கொடுத்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டு கிடைத்துள்ளன. அறிந்தவரை முதல் முறையாக இங்கு தவ்வை சிற்பத்தை செய்து கொடுத்த செய்தி கிடைப்பது சிறப்பாகும். அதோடு இத்தவ்வை சிற்ப அமைதியும் வேறுபட்டதாகக் காணப்படுகிறது.


திருவண்ணாமலையில் 13ஆம் நூற்றாண்டை சேர்ந்த தவ்வை என்னும் மூத்ததேவி சிற்பம் கண்டுபிடிப்பு...!

 

பொதுவாக தவ்வை  கால்களை பரப்பித் தொங்கவிட்டு பெருத்த வயிறுடன் காட்டப்படுவாள். இங்கு சுகாசனத்தில் அழகிய உருவமாகக் காட்டப்பட்டுள்ளாள். இவளுடைய மகனாகக் கருதப்படும் மாந்தன் மாட்டு முகத்துடன் வலது புறம் காட்டப்படுவது மரபு இங்கு இடது புறம் காட்டப் பட்டுள்ளான்.  மகள் மாந்தி வலதுபுறம் காட்டப்பட்டுள்ளாள். இவளது காக்கைக் கொடி தெளிவாக இடது தோள் புறம் காட்டப்பட்டுளள்து. மாந்தன், மாந்தி, தவ்வை மூவரும் அபயவரம் காட்டி அமர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.  தூம்பையும், தவ்வையும்  செய்தளித்த செய்தி ஒரு சேரக் காணப்படுவதால் இவள் ஏரியின் காவல் தெய்வம் என்பது உறுதியாகிறது. 

மேலும் அபயகரம் காட்டி அமர்ந்து அருள்பாலிக்கின்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த இந்த திருக்கேட்டையார் கல்வெட்டும் சிற்பமும் கலை, சமய, சமூக வரலாற்றிற்கு புதிய செய்தியை வழங்குகின்றது.  மன்னர் பெயர் இல்லாததால் கல்வெட்டின் காலம் எழுத்தமைதியைக் கொண்டு 13 ஆம் நூற்றாண்டு என்று கொள்ளலாம் என கூறினார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget