மேலும் அறிய

மேகதாது அணை விவகாரத்தில் மௌனமாக இருக்கும் முதல்வர் ஸ்டாலின் - பாஜக மாநில துணை தலைவர் டால்பின் ஸ்ரீதர்

திருவண்ணாமலையில் பத்திரிகையாளர் சந்திப்பில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக ஒரு இடங்களில் கூட வெற்றி பெறாது என பாஜக மாநில துணைத்தலைவர் டால்பின் ஸ்ரீதர் பேட்டியளித்தார்.

திருவண்ணாமலையில் செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் டால்பின் ஸ்ரீதர் பேட்டியளிக்கையில், கர்நாடக மாநிலத்தில் 2017-ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் மேகதாது அணை கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டு மத்திய அரசால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்ட பிறகு தமிழகத்துக்கு சீரான 177 டிஎம்சி காவேரி நீர் வந்து கொண்டிருந்தது. இரு மாநிலங்களுக்கும் இடையே இருந்த பல ஆண்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த பெருமை நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களையே சாரும். கடந்த 2021 ஜூன் மாதம் தமிழக அரசின் அனுமதி இல்லாமல் கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட முடியாது என்று மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் சாம்பல் வெளிப்படையாக அறிவித்தார். இப்போது காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் மேகதாது அணை கட்டத் தீவிரம் காட்டி வருகிறது.

மேகதாது அணை விவகாரத்தில் மௌனமாக இருக்கும் முதல்வர் ஸ்டாலின் - பாஜக மாநில துணை தலைவர்  டால்பின் ஸ்ரீதர்

காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதியிலேயே மேகதாது அணை கட்ட ஒன்பதாயிரம் கோடி ஒதுக்குவோம் என்று அறிவித்திருந்தார்கள். காங்கிரஸ் கூட்டணி கட்சியான திமுக அதை எதிர்த்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. 1970-ஆம் ஆண்டுகளில் கர்நாடகாவில் காவிரி நதியின் குறுக்கே கபினி, ஹேமாவதி, ஹரங்கி, ஸ்வர்ணவதி ஆகிய நான்கு அணைகள் கட்டிய பொழுது அன்றைய தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதி எப்படி கண்முடி மௌனம் சாதித்தாரோ, அதேபோல் தற்பொழுது மேகதாது அணை கட்ட எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் மௌனமாக இருக்கும் மு.க. ஸ்டாலின் கர்நாடகாவுக்கு சென்று காங்கிரஸ் கட்சியுடன் நட்பு பாராட்டி கொண்டிருக்கிறார். கர்நாடகாவில் பாஜக ஆட்சி காலம் முழுவதும் காவிரி நீர் எந்த பிரச்சனையும் இல்லாமல் தமிழகத்திற்கான பங்கு வந்துகொண்டு இருந்தது.

மேகதாது அணை விவகாரத்தில் மௌனமாக இருக்கும் முதல்வர் ஸ்டாலின் - பாஜக மாநில துணை தலைவர்  டால்பின் ஸ்ரீதர்

ஆனால் காங்கிரஸ் ஆட்சி வந்த உடனே இந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் போதிய மழை இல்லை என்று மழுப்பலான காரணம் சொல்லி காவிரி தண்ணீர் தர மறுத்திருக்கிறது கர்நாடகா அரசு. ஆனால் இதற்கும் மு.க. ஸ்டாலின் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை, 1974-ஆம் ஆண்டு காவிரி நீர் பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் புதுப்பிக்காமல் தமிழகத்தை கருணாநிதி வஞ்சித்ததை போல் அவர் மகன் ஸ்டாலின் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்துக் கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.

கோட்ட அமைப்பு பொதுச்செயலாளர் குணசேகரன் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தலைவர் ஆர். பாலசுப்பிரமணியன் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தலைவர் சி. ஏழுமலை தெற்கு மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன் மாநில உள்ளாட்சி பிரிவு செயலாளர் அறவாழி உட்பட ஏராளமான நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!

ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 

'திருட்டு கேஸ்ல உள்ளே தள்ளிடுவேன்' பள்ளி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய எஸ்.ஐ? பெற்றோர்கள் கண்ணீர்

உஷார்! செல்லூர் ராஜூவின் உதவியாளர்? அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.26 லட்சம் மோசடி?
உஷார்! செல்லூர் ராஜூவின் உதவியாளர்? அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.26 லட்சம் மோசடி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Govt Teacher Sexual Assault : மாணவிகளிடம் அத்துமீறிய அரசு பள்ளி ஆசிரியர்! செருப்பால் அடித்த பெற்றோர்கள்Aadhav Arjuna: ”ஒன்றிய அரசையே சொல்லாதீங்க!” திமுக-வை விளாசும் ஆதவ்! விசிகவில் வெடிக்கும் கலகம்Police Angry: ஜெய் பீம் பாணியில் மிரட்டல்! விழுப்புரம் போலீஸ் அடாவடி.. சூடான இளைஞர்கள்!Sukhbir Singh Badal: EX Deputy CM  மீது துப்பாக்கிச்சூடு! பயங்காவாதி தொடர்பா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
'திருட்டு கேஸ்ல உள்ளே தள்ளிடுவேன்' பள்ளி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய எஸ்.ஐ? பெற்றோர்கள் கண்ணீர்
'திருட்டு கேஸ்ல உள்ளே தள்ளிடுவேன்' பள்ளி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய எஸ்.ஐ? பெற்றோர்கள் கண்ணீர்
உஷார்! செல்லூர் ராஜூவின் உதவியாளர்? அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.26 லட்சம் மோசடி?
உஷார்! செல்லூர் ராஜூவின் உதவியாளர்? அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.26 லட்சம் மோசடி?
Actress Anju: அப்பாவை விட மூத்த வயது நடிகரை நம்பி மோசம் போன நடிகை அஞ்சு! ஒரே வருடத்தில் முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை!

ஏன் தப்பு பன்ற? கஞ்சா வழக்கில் கைதான மகனுக்கு நீதிமன்றத்தில் அறிவுரை கூறிய நடிகர் மன்சூர் அலிகான்!

Rasipalan December 05: கடகத்திற்கு பாசமழை; சிம்மத்திற்கு நட்பு - அப்போ உங்க ராசிக்கு?

பொளந்துகட்டிய ஃபெஞ்சல் புயல்: நடிகர் சிவகார்த்திகேயன் நிதியுதவி! நன்றி தெரிவித்த துணை முதல்வர் - எவ்வளவு தெரியுமா?

Embed widget