மேலும் அறிய

Annapurani Arasu Amma: ‘நான் சாமியார் இல்லடா... நான் சாமிடா’’.. தனக்கு தானே கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய அன்னபூரணி அரசு அம்மா

கீழ்பெண்ணாத்தூரில் அன்னபூரணி அரசு அம்மா, தனக்கு தானே கோவிலை கட்டி கும்பாபிஷேகம் செய்து கடவுளாக அவதரித்தார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் அன்னபூரணி அரசு அம்மன் தொண்டு நிறுவனம் நடத்தி வந்தவர் அன்னபூரணி. தன்னை அன்னபூரணி அரசு அம்மனாக மாற்றிக்கொண்டு ஆதிபராசக்தியின் அவதாரமாக கூறி பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார். கடந்த, 2014ல், தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியில் பங்கேற்ற அன்னபூரணி , தனது கணவர் மற்றும், 14 வயது பெண் குழந்தையை பிரிந்து, அவரது காதலனான அரசு என்பவருடன் ஈரோட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில், அரசு என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அன்னபூரணி தனது காதலனான, அரசு உருவ சிலையை வடிவமைத்து வழிபட்டு வந்தார். பின்பு ‘அன்னபூரணி அரசு அம்மன்’ என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்து, தன்னை ஆதிபராசக்தியின் மறு அவதாரம் என கூறி, பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்தார். இதற்கு இந்து அமைப்புகள் சார்பில் பலத்த எதிர்ப்பு எழுந்த நிலையில், இவை சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து யூ டியூப்பில் ஆன்மீக சொற்பொழிவை நடத்தி வந்தார்.

Annapurani Arasu Amma: ‘நான் சாமியார் இல்லடா... நான் சாமிடா’’..  தனக்கு தானே கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய அன்னபூரணி அரசு அம்மா

இந்நிலையில், ஆன்மீக பூமியான திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே ராஜா தோப்பு என்ற பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கி அங்கு ஆஸ்ரமம் அமைக்க பூமி பூஜை போட்டார். அப்போது அங்கு வந்த சில பெண் பக்தர்கள் அவருக்கு கற்பூர தீபம் ஏற்றி தீபாராதனை செய்து வழிபட்டனர். மேலும், சில ஆண்கள், பெண்கள் அவரது காலில் விழுந்து வணங்கினர். அப்போது தெரிவித்த அவர் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்த இடம் தேடி அலைய வேண்டி உள்ளது. அதற்காக என்னிடம் உள்ள பணத்திற்கு இங்குதான் இடம் வாங்க முடிந்தது. இங்கு ஆஸ்ரமம் அமைத்து ஆன்மீக பணியை தொடர உள்ளேன். நான் அருள்வாக்கு சொல்வதில்லை, ஆன்மீகத்தைத்தான் சொல்லிகொடுத்து வருகிறேன். எனது இரண்டாவது கணவர் அரசு சிலை இங்கு ஆசிரமத்தில்தான் உள்ளது. நாங்கள் இரண்டு பேருமே இல்லாமல் ஆன்மீகம் இல்லை. என்னை அழிக்க யாராலும் முடியாது என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் தான் சாமியார் இல்லை கடவுள் என்று அவருக்கு தானே கோவிலை கட்ட முடிவு செய்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவில் கட்டுவதற்கான பணிகளை துவங்கி கோவிலையும் கட்டி முடித்துள்ளார். கோவில் என்றாலே கோவிலுக்குள் கடவுளின் திருவுரு சிலை இருக்கும். ஆனால் அன்னபூரணி அரசு அம்மா கட்டிய கோவிலில் தன்னுடைய உருவத்தை சிலையாக செய்து அங்கு கடவுள் சிலை போன்று அமைத்துள்ளார். மேலும் கோவிலின் கும்பாபிஷேகத்தின் போது அன்னபூரணி அரசு அம்மா அம்மன் வேடத்தில் அவதரித்த அன்னபூரணி அம்மா அரசுவிற்கு ஆண்கள், பெண்கள் என அனைவரும் பாத பூஜை செய்து காலினை தொட்டு வணங்கிச் சூடம் ஏற்றி வழிபட்டனர். அப்போதும் அசராமல் நின்ற, அன்னபூரணியிடம் பலர் ஆசிபெற்றனர். 

Annapurani Arasu Amma: ‘நான் சாமியார் இல்லடா... நான் சாமிடா’’..  தனக்கு தானே கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய அன்னபூரணி அரசு அம்மா

மேலும், அன்னபூரணி அரசு அம்மாவின் வலைப்பதிவில் அன்னையின் இறைசக்தி எங்கும் நிறைந்தது...எப்போதும் நிறைந்தது...ஆக்கமும் அழிவும் படைப்புகளுக்கு அன்றி படைக்கும் சக்திக்கு ஒரு போதும் இல்லை...இவ்வுலகம் காண இருக்கும் பேரழிவுகளில் இருந்து தன் குழந்தைகளை காக்கவே மாபெரும் சக்தி தன்னை உடல் வடிவில் சுருக்கி அவதாரம் கொண்டிருக்கிறாள்...அன்னை சுயம்பு வடிவானவள்...யாருடைய உதவியும் இன்றி பல தடைகளையும் கடந்து தன் அன்புப் பிள்ளைகளை தன்னோடு அரவணைத்து காத்து தனிப்பெரும் சாம்ராஜ்யமாய் கோவில் கொள்ள இருக்கிறாள்...இனி அந்த மஹாசக்தியை எவராலும் தடுக்க இயலாது...அவதார நோக்கமதை நிறைவேற்றி சத்தியத்தை இப்புவியெங்கும் தளைக்கச் செய்யும் அஸ்திவாரமே இன்றைய கோவில் கும்பாபிஷேத திருநாளாகும் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget