கண்கள் கலங்கியபடி அம்மா பாடல் பாடிய மாற்றுத்திறனாளி மாணவர் - சோகத்தில் ஆழ்ந்த மனங்கள்
விபத்தில் பாதிக்கப்பட்டு இறக்கும் நிலையில் உள்ள அனைவரும் கண்டிப்பாக கண் தானம் செய்ய வேண்டும் என்றும் இதன் மூலம் கண்பார்வை இழந்த மாற்று திறனாளிகள் இந்த உலகை பார்க்கும் நிலை ஏற்படும் - துணை சபாநாயகர்
திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் அனைத்து நாடுகள் மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நேற்று திருவண்ணாமலையில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் என 410 பேர் கலந்து கொண்டனர். இதில் ஓட்டப்பந்தையம், நீளம் தாண்டுதல், நின்ற இடத்தில் இருந்து நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டதட்டு எறிதல், காய், பழங்கள், பூக்கள் சேகரித்தல் போன்ற விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
திருவண்ணாமலையில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினம்- கண்கள் கலங்கியபடி அம்மா பாடல் பாடிய மாற்றுத்திறனாளி மாணவன் பாடிய பாடல் அனைவரது மனத்தினையும் சோகதில் ஆழ்தியது.@abpnadu @SRajaJourno @gvprakash @CMOTamilnadu @immancomposer pic.twitter.com/wu7yiKxnQb
— Vinoth (@Vinoth05503970) January 4, 2023
இதில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி மற்றும் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உள்ளிட்டடோர் பங்கேற்று மாற்று திறனாளிகளுக்கு 15 நபர்களுக்கு மூன்று சக்கர சைக்கிள், 12 நபர்களுக்கு காதொலிகருவிகள், 5 நபர்களுக்கு முடக்கு வாத சக்கர நாற்காலிகள் மற்றும் 22 நபர்களுக்கு மாற்று திறனாளிகளுக்கு திட்ட உதவிகள் என 56 மாற்று திறனாளிகளுக்கு 8 லட்சத்து 11 ஆயிரம் மதிப்பிலான நலதிட்ட உதவிகளை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார். மாற்று திறனாளிகள் தினத்தினையொட்டி நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் இந்த விழாவில் பங்கேற்ற மாற்றுதிறனாளிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. அதில் கலந்து கொண்டு நடனம் ஆடிய மாற்றுதிறனாளி மாணவர்களின் பெற்றோர்கள் தங்களுடைய செல்போனில் வீடியோ எடுத்து மகிழ்ச்சி அடைந்துதுடன், நடனமாடிய மாணவர்களை கரகோஷம் எழுப்பி மகிழ்ந்தனர்.
அனைவரது கவனத்தினையும் ஈர்த்தது. மேலும் இந்த விழாவில் மாற்றுதிறனாளி மாணவன் ஒருவன் 10 மாதம் என்னை சுமந்து பெத்தொடுத்த அம்மா என்ற அம்மா பாடலை மனமுருக பாடிய போது மாற்றுத்திறனாளி மாணவின் கண்ணீர் மல்லக பாடினார். பாடியதை கேட்ட மற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கண்களில் கண்ணீர் விட்டு அழுதனர். அனைவரது மனதினையும் சோகத்தில் ஆழ்த்தியது. இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியின் நிறைவில் தேசிய கீதம் பாடும் போது வாய் பேச முடியாத மாணவர்கள் தங்களின் சைகையால் தேசிய கீத பாடலை பாடியதை கண்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் துணை சபாநாயகர் ஆகியோர் விழப்பில் ஆழ்த்தியது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி
விபத்தில் பாதிக்கப்பட்டு இறக்கும் நிலையில் உள்ள அனைவரும் கண்டிப்பாக கண் தானம் செய்ய வேண்டும் என்றும் இதன் மூலம் கண்பார்வை இழந்த மாற்று திறனாளிகள் இந்த உலகை பார்க்கும் நிலை ஏற்ப்படும் என்றும், ஊனமுற்றவர்களை மாற்றுதிறனாளிகள் என்று அழைக்க வேண்டும் என்று கூறியவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி என்றும் உறையாற்றினார். நிகழ்ச்சியில் மாநில தடகள சங்கத் துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சிலம்பரசன், தாட்கோ மேலாளர் ஏழுமலை உள்பட அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.