திருவண்ணாமலையில் கஞ்சா விற்பனை அதிகரிப்பு - அதிமுக கவுன்சிலர் குற்றச்சாட்டு
திருவண்ணாமலை நகர்மன்ற கூட்டத்தில் நகராட்சியில் பல இடங்களில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக அதிமுக கவுன்சிலர் கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் நேற்று நகரமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்பு கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராஜாங்கம் முன்னிலை வைத்தார். ஆணையாளர் முருகேசன் வரவேற்றார். இந்த சிறப்பு கூட்டத்தில் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது. மேலும் நகராட்சியில் என்ன பணிகள் செய்து முடிக்கப்பட்டது மற்றும் என்ன பணிகள் செய்யப்பட உள்ளது என விவாதிக்கப்பட்டது. இந்த விவாத்தின் போது அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் பேசுகையில்; திருவண்ணாமலை நகராட்சி நாளுக்கு நாள் பக்தர்களின் வரவு அதிகரித்துள்ளது. அதனால் நகராட்சியின் கழிவரைகள் சுத்தமான நிலையில் இல்லை என்றும்,
அதனை சுத்தப்படுத்த வேண்டும் என்றும், எங்களுடைய வார்ட் டில் தெரு கால்வாய் சரியான முறையில் இல்லை , கால்வாய் சரிசெய்ய நாங்கள் பலமு தருவதில்லை 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வருவதாகவும், கால்வாய் சுத்தம் செய்யப்படாமல் உள்ளதாகவும், அதிமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட நகராட்சி பூங்காக்கள் அனைத்தும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கைவிடப்பட்டு தற்போது பராமரிப்பு இல்லாமல் கிடப்பதுடன் அங்கு கஞ்சா விற்பனை, கள்ளச்சாராயம் விற்பனை உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருவதாகவும், இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மேலும் அதிமுக கவுன்சிலர்களின் கோரிக்கை எதையும் நிறைவேற்றாத விடியோ தி மு க அரசின் அலட்சியத்தை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் அல்லி குணசேகரன், சாந்தி, டாக்டர் பழனி, சந்திர பிரகாஷ், சீனிவாசன் உள்ளிட்ட அதிமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நகராட்சி ஆணையாளர் பேசுகையில், ''நகராட்சி பகுதியில் சாலையில் மத்தியில் சென்ற குடிநீர் குழாய்கள் சாலையோரம் மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் ஆங்காங்கே அவ்வபோது ஏற்படும் குடிநீர் குழாய் உடைப்பு காரணத்தினால் குடிநீர் விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டு இருக்கலாம். உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மூடி கிடக்கும் பூங்காக்களை தன்னர்வலர்கள் மூலம் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும் 39 வார்டு உறுப்பினர்களும் தங்கள் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்த பட்டியலை வழங்கினால் அதன் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வரி பணத்தை வசூல் செய்வதில் திருவண்ணாமலை நகராட்சி பின்தங்கி உள்ளது. எனவே நகராட்சியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள வரி பணத்தை வசூல் செய்வதற்கு கவுன்சிலர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்'' என்றார். அதனைத்தொடர்ந்து கூட்டம் நடைப்பெற்று கொண்டே இருக்கும் போது அதிமுக கவுன்சிலர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.