மேலும் அறிய
Advertisement
ABP நாடு IMPACT : சென்னையில் செயல்பட்டு வரும் தனியார் தொண்டு நிறுவனம் 'கலை இளமணி' ராஜேஸ்வரிக்கு உதவிக்கரம்..!
ராஜேஸ்வரிக்கு சென்னை அல்லது , கோயம்புத்தூரில் அவர் விரும்பும் கல்லூரியில் , அவர் விரும்பும் பாடப்பிரிவினில் படிப்பதற்கு , அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதாக உறுதி அளித்துள்ளோம் என்று தெரிவித்தார்
ABP நாடு செய்தி எதிரொலி காரணமாக , ஏழ்மையால் உயர்கல்வி பயிலமுடியாமல் தவித்துவந்த 19 வயது ராஜேஸ்வரிக்கு, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் 'மாற்றம் அறக்கட்டளை' என்ற தனியார் தொண்டு நிறுவனம் ராஜேஸ்வரியின் முழு கல்விச் செலவையும் ஏற்றுக்கொள்ள முன் வந்துள்ளது .
Have spoken to her and offered fully sponsored education from some of the top colleges who are our partners. She needs help in speaking to her parents. Have told her to revert, meanwhile if you know her father, do speak to him and let us know. #MaatramFoundation
— Sujith Kumar (@sujithkumar13) August 6, 2021
ABP நாடு செய்தி குழுமம் தனது இணையத்தளத்தில் "வறுமையில் சிக்கித்தவிக்கும் 'கலை இளமணியின்' சோக பின்னணி" என்ற தலைப்பில் மாணவி ராஜேஸ்வரி குறித்த செய்தியை இன்று காலை வெளியிட்டு இருந்தது , இந்த செய்தியைத் தனது டிவிட்டர் பக்கத்திலும் பதிவு செய்திருந்தது .
#vellore based young #Artist seeks #TNGovernment assistance to escape #poverty .@abpnadu@SRajaJourno@imanojprabakar
— Karal Marx L (@karalmarx_l) August 6, 2021
குடும்ப வறுமை காரணமாக கல்லூரிப் படிப்பைத் தொடர முடியாமல் தவிக்கும் கலை மணியின் சோகப் பின்னணி https://t.co/i07nuu0EVL
இந்த செய்தியைப் படித்த , 'மாற்றம் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனருமான சுஜித்குமார் , ABP நாடு செய்தி குழுமத்தைத் தொடர்புகொண்டு , அதன் மூலமாக ராஜேஸ்வரியிடம் தொலைபேசியில் உரையாடி , மாணவி ராஜேஸ்வரியின் மேற்படிப்புக்குத் தேவையான அணைத்து உதவியையும் செய்வதாக உறுதி அளித்துள்ளனர் .
இது தொடர்பாக மாற்றம் அறக்கட்டளையின் , சுஜித்குமார் நம்மிடம் பேசியபோது " மாற்றம் அறக்கட்டளை" தகவல் தொழில்நுட்பம் , சிவில் சர்வீஸ் , மற்றும் பல பன்னாட்டு நிறுவனங்களில் முழுநேர பணிபுரியும் , வல்லுநர்களை , உறுப்பினர்களாகக் கொண்டு லாப நோக்கில்லாமல், ஆதரவற்ற மாணவர்களுக்கு , கல்வி வாய்ப்பு ஏற்படுத்தி தருவதற்காக செயல்படும் ஒரு தொண்டு நிறுவனம் . சொல்ல வேண்டுமானால் , நானே ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் , மனித வள (Ruman Resource) துறையில் , முழு நேர வேலை செய்து வருகிறேன் .
தேவைப்படுவோருக்கு உதவி செய்வதற்கு , வேலை ஒரு தடை இல்லை என்பதை நிரூபிப்பதற்கே , என்னைப் போன்றே முழு நேர பணியில் இருந்துகொண்டே, கஷ்டப்படும் மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் படைத்த துடிப்பு மிக்க இளைஞர்களைக் கொண்டு இந்த அமைப்பை உருவாக்கி உள்ளேன் என்று தெரிவித்த சுஜித் , மேலும் அவரது மாற்றம் அறக்கட்டளையைப் பற்றிக் கூறும்போது, “கடந்த 2013 ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளை , இதுவரையிலும் 1300-க்கும் மேற்பட்ட , அநாதை குழந்தைகள் , வறுமையின் விளிம்பில் வாடும் மாணவர்கள் , ஏழை குழந்தைகள் உள்ளிட்டோருக்குக் கல்வியுடன் சேர்த்து திறன் மேம்பாடு (Skill development ) பயிற்சிகளையும் கொடுத்து , அவர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்கி கொடுத்துள்ளோம் .
கல்வி மற்றும் வேலைவாய்ப்பால் மட்டுமே ஒரு நாட்டின் வறுமையை முற்றிலும் போக்க முடியும் என்பதை மாற்றம் அறக்கட்டளை உறுதியாக நம்புவதால், கல்வி கனியை எட்டமுடியாத ஏழ்மையான மற்றும் ஆதரவற்ற மாணவர்களை அடையாளம் கண்டு பிடித்து அவர்களுக்குக் கல்வி பயில வாய்ப்பளிப்பதோடு , அவர்களது திறன் மேம்பாட்டிலும் தனிக் கவனம் செலுத்தி வருகிறோம் .
வேலூரைச் சார்ந்த ராஜேஸ்வரியை இன்று தொடர்பு கொண்டு பேசினோம் , ராஜேஸ்வரிக்கு சென்னை அல்லது , கோய்ம்பத்தூரில் அவர் விரும்பும் கல்லூரியில் , அவர் விரும்பும் பாடப்பிரிவினில் படிப்பதற்கு , அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதாக உறுதி அளித்துள்ளோம். அவர் வெளியூர் சென்று படிப்பதற்கு தனது பெற்றோர் மற்றும் ஓவிய ஆசிரியருடன் ஆலோசனை செய்ய வேண்டியிருப்பதால் , அவர்களிடம் கல்லூரி மற்றும் பாடப்பிரிவு உள்ளிட்டவற்றைக் கலந்து ஆலோசனை செய்துவிட்டு , மீண்டும் தொடர்பு கொள்வதாகத் தெரிவித்துள்ளார்” என்று கூறினார் .
மேலும் ராஜேஸ்வரியை அடையாளம் கண்டுபிடிக்க உதவிய ABP நாடு செய்தி குழுமத்திற்கு தங்களது , மாற்றம் அறக்கட்டளை சார்பாக நன்றியை தெரிவித்துக்கொண்டார் .
யார் இந்த 'கலை இளமணி'- ராஜேஸ்வரி முழு விபரம் தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்க : வறுமையில் சிக்கித் தவிக்கும் 'கலை இளமணியின்' சோக பின்னணி!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion