மேலும் அறிய

வறுமையில் சிக்கித் தவிக்கும் 'கலை இளமணியின்' சோக பின்னணி!

அப்பா சரிவர வேலைக்கு செல்ல முடிவதில்லை. இதனால் தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பை முதலாம் ஆண்டிற்கு மேல் தொடர முடியாமல் தொலைதூர கல்விப் படிப்பிற்கு  விண்ணப்பித்துள்ளேன் என்று தெரிவித்தார்

தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டு துறை சார்பில் மாவட்டங்களில் உள்ள கலைஞர்களிடையே , திறமையுள்ள கலைஞர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உரிய வாய்ப்புகளை வழங்கும் வகையில் , மாவட்ட கலை மன்றங்கள் தொடங்கப்பட்டு , கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் , திறன் படைத்த ஐந்து கலைஞர்களுக்கு அவர்களது வயதிற்கு ஏற்றவாறு , கலை இளமணி (18 வயது மற்றும் அதற்குட்பட்ட வயதுப் பிரிவினருக்கு) , கலைவளர்மணி  (19 முதல் 35 வயதுள்ள பிரிவினருக்கு ) , கலை சுடர்மணி (36 முதல் 50 வயதுள்ள பிரிவினருக்கு ) ,கலை நன்மணி (51 முதல் 60 வயதுள்ள பிரிவினருக்கு ) , மற்றும் கலை முதுமணி (61  வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட வயது பிரிவினருக்கு )  உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின்கீழ் விருது வழங்கி , கலை ஆர்வம் உள்ளவர்களைக் கௌரவித்து வருகின்றனர் .

வறுமையில் சிக்கித் தவிக்கும் 'கலை இளமணியின்' சோக பின்னணி!

அதன் படி , வேலூர் மாநகராட்சி சத்துவாச்சாரி கங்கையம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த ,  ராஜேஸ்வரி என்ற 19 வயதுடைய மாணவி, தனது பள்ளிப்பருவ காலத்திலிருந்தே  , செஞ்சிலுவை  சங்கம் , அரசு அருங்கட்சியகம் , போக்குவரத்துத்துறை , வனத்துறை உள்ளிட்ட துறைகள்  மூலம் நடத்தப்பட்ட ஓவிய போட்டிகளில் பங்குபெற்று , 25 கும் மேற்பட்ட மாவட்ட மற்றும் மண்டல அளவிலான போட்டிகளில் , முதல் பரிசை வென்றுள்ளார் , ராஜேஸ்வரி .

வறுமையில் சிக்கித் தவிக்கும் 'கலை இளமணியின்' சோக பின்னணி!

கடந்த 10 வருடத்திற்கும் மேலாகக் கலையுலகில் பல சாதனை படித்துவரும் ராஜேஸ்வரிக்கு , தனது 17வது வயதில் , 2018 - 2019 ஆம் ஆண்டிற்கான  கலை இளமணி விருதை தமிழ் நாடு அரசின் கலைபண்பாட்டு துறையால் வழங்கப்பட்டது , தொடர்ந்து கலைத்துறையில் பல சாதனை படைத்தது வரும்  ராஜேஸ்வரிக்கு , தற்பொழுது அவரது கல்லூரி மேற்படிப்பிற்குக் கட்டணம் செலுத்தக் கூட வசதியில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மையாக இருக்கின்றது .

இதுகுறித்து ராஜேஸ்வரியின் ஓவிய ஆசிரியர் செல்வ கணேஷை தொடர்புகொண்டு பேசியபோது , "ராஜேஸ்வரி சத்துவாச்சாரி அரசுப் பள்ளியில்  5 ஆம் வகுப்பு  படிக்கும்போது , அவரது பள்ளியில் பகுதிநேர ஓவியாசிரியாராக பணியாற்றினேன் , அப்பொழுது ராஜேஸ்வரிக்கு , ஓவியத்தின் மீது ஒரு தனி ஈடுபாடு  இருப்பதை உணர்ந்துகொண்டு , அவருக்குத் தொடர்ந்து ஓவியப்பயிற்சி அளித்து , மாவட்டம் முழுவதும் நடக்கும் ஓவியப் போட்டிகளில் பங்குபெறச் செய்தேன் .

வறுமையில் சிக்கித் தவிக்கும் 'கலை இளமணியின்' சோக பின்னணி!

ஓவியத்தின்மீது இருந்த ஆர்வ மிகுதியால் அவரும் பல பரிசுகளை , வென்று இளம் கலைமணி விருதுவரை பெற்றுள்ளார் . இன்றுவரையும் கலைத்துறையில்  பல சாதனைகளைப் படைத்து வருகிறார்  அவர் எனது  மாணவி என்று கூறிக்கொள்வதில்  பெருமை படுகிறேன் . எனினும் தற்பொழுது குடும்ப வறுமை சூழ்நிலை காரணமாக , ராஜேஸ்வரி , முழுநேர கல்லூரி படிப்பைத் தொடர முடியாமல் , வீட்டிலிருந்தே தொலைதூர கல்வி வாயிலாக , தமிழ் இலக்கியம் படிப்பிற்கு விண்ணப்பித்துள்ளார். அவருக்குத் தமிழக அரசு சார்பில் உரிய உதவி செய்திடவேண்டும் ,"என்று கூறினார் ஓவிய ஆசிரியர் செல்வ கணேஷ் .

ABP நாடு செய்தி குழுமம் ராஜேஸ்வரியைத் தொடர்புகொண்ட பொது "சிறுவயதிலிருந்தே பல ஓவியப் போட்டிகளில் பங்குபெற்று இருந்தாலும் , நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது , குழந்தை தொழிலாளர் மறுவாழ்வு துறை மூலம் நடத்தப்பட்ட ஓவியப்போட்டியில் நான் குழந்தை தொழிலாளர் ஒழிப்பிற்காக வரைந்த ஓவியம் , 2018  ஆம் ஆண்டு , மகாத்மா காந்தி 150வது ஆண்டு கொண்டாட்டத்தில்  , எனது தோழியுடன் சேர்ந்து , மகாத்மா காந்தியின்  150 வெவேறு வடிவில் வரைந்த ஓவியம் மற்றும் சமீபத்தில் ,

வறுமையில் சிக்கித் தவிக்கும் 'கலை இளமணியின்' சோக பின்னணி!

ஜெல் பேனா கொண்டு 1,00,000 புள்ளிகளால் இசைப்பாடகி பாரத ரத்னா விருதுபெற்ற M Sசுப்புலட்சுமியின் உருவத்தை வரைந்த ஓவியம் என்னை வெளியுலகத்திற்கு அடையாளம் காட்டியது . என்று கூறிய ராஜேஸ்வரி , தனது சோகமான குடும்ப  பின்னணியையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார் . 
 
"மதுரை தான் எங்களது சொந்த ஊர் ,பிழைப்பு தேடி நாங்கள் வேலூருக்கு வந்து 14  வருடங்கள் ஆகின்றது   , அப்பா , சேகர் (46)  கே வீ குப்பம் அருகே உள்ள  டாஸ்மாக் கடை எதிரே தள்ளு வண்டியில், சால்னா கடை வைத்து நடத்திவருகிறார் ,  அம்மா ராணி (37) வீட்டில் தான் இருக்கிறார்   , எனக்குக் கமல் ராஜ் என்ற பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் தம்பி இருக்கிறார் , காலையிலிருந்து மாலைவரை , கால் கடுக்க , தள்ளுவண்டியில்  நின்று   அப்பா சம்பாதித்துவரும் 200 , 300 ரூபாயில் தான் குடும்பம் ஓடுகிறது . 

வறுமையில் சிக்கித் தவிக்கும் 'கலை இளமணியின்' சோக பின்னணி!

தினமும்  10 மணி நேரத்திற்கு மேல் அப்பா நின்றுகொண்டே வியாபாரம் செய்வதால் , அவரது இரண்டு கால் தொடைகளிலும் நரம்பு சுற்றிக்கொண்டு  தற்பொழுது அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் அப்பா சரிவர வேளைக்கு செல்லமுடிவதில்லை . இதனால் தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பை முதலாம் ஆண்டிற்குமேல் தொடரமுடியாமல் தொலைதூர கல்வி படிப்பிற்கு  விண்ணப்பித்துள்ளேன்   , எனவே எங்கள் குடும்ப ஏழுமையைக் கருத்தில் கொண்டு அரசு உரிய நிவாரணம் வழங்கவேண்டும்" என்று கோரிக்கை வைத்தார் .

தொடர்ந்து கலை உலகில் பல சாதனை படைத்தது வேலூர் மாவட்டத்திற்கு பல பெருமை சேர்த்துவரும் ராஜேஸ்வரியின் கோரிக்கையை தமிழ் நாடு அரசு  நிறைவேற்ற வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது . 

தலைப்பு செய்திகள்

Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
Kia Sorento Booking: Fortuner-க்கு பாயாசத்தை போடுமா Sorento.? பவர்ஃபுல் ஹைப்ரிட் SUV-ன் புக்கிங்கை தொடங்கிய கியா
Fortuner-க்கு பாயாசத்தை போடுமா Sorento.? பவர்ஃபுல் ஹைப்ரிட் SUV-ன் புக்கிங்கை தொடங்கிய கியா
Embed widget