மேலும் அறிய

கைவிடப்பட்ட 1333 ஆழ்துளை கிணறுகள் 14 நாட்களில் மீட்டெடுப்பு - திருவண்ணாமலை மாவட்டம் உலக சாதனை

இந்திய துணை கண்டத்தில் வேறு எந்த மாவட்டமும் செய்திடாத இந்த புதிய முயற்சியை திருவண்ணாமலை மாவட்டம் நிகழ்த்தியது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலத்தடி நீர் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டமாக மத்திய அரசின் நீர்வளத் துறையினால் அறிவிக்கப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு மாவட்டத்தில் நிலத்தடி நீரை உயர்த்தும் வகையில் நடவடிக்கையை மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் மாதம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் 30 நாட்களுக்குள் 1,121 பண்ணை குட்டைகள் அமைத்து உலக சாதனை நிகழ்த்தப்பட்டது. மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைப்படி தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வழிகாட்டுதலின்படி மாவட்டத்தின் நிலத்தடி நீர் மட்டத்தினை உயர்த்தும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஒன்றியங்களில் உள்ள 600 கிராம ஊராட்சிகளில் உள்ள 1333 கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளை சுற்றி மீள் நிரப்பு கட்டமைப்புகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கைவிடப்பட்ட 1333 ஆழ்துளை கிணறுகள் 14 நாட்களில் மீட்டெடுப்பு - திருவண்ணாமலை மாவட்டம் உலக சாதனை

இதற்கான பணிகளை கடந்த 20-ந் தேதி துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார். இந்தப் பணிகள் கடந்த 2-ம் தேதிக்கு முன்பு நிறைவு பெற்றது. இதன் மூலம் தற்பொழுது உபயோகத்தில் இல்லாத 1333 ஆழ்துளை குழாய் கிணறுகளை சுற்றிலும் 3 மீட்டர் நீளம், 3 மீட்டர் அகலம் மற்றும் 2.5 ஆழம் உள்ளவாறு குழிகளை ஏற்படுத்தி ஆழ்துளை கிணறுகளின் குழாய்களில் நீர் கசிவுத் துளைகளை அமைத்து மண்புகா வண்ணம் வலை சுற்றி அந்த குழி முழுவதிலும் ஜல்லி கற்களை நிரப்பி அதன் மேற்பரப்பில் அரை அடி உயரத்திற்கு குழியை சுற்றி சுவரும் எழுப்பப்பட்டு உள்ளது. மேலும் ஜல்லி நிரப்புவதற்கு முன்பு மழை நீர் உட்பகுவதற்கு வசதியாக குழியின் 4 பக்கத்திற்கும் மூன்று குழாய்கள் விதம் 12 குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. ஒரு மீள் நிரப்பு கட்டமைப்பு ரூ.50,000 என்ற அடிப்படையில் மொத்தம் 1333 மீள் நிரப்பு கட்டமைப்புகள் ரூபாய் 6 கோடியே 66 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆண்டு முழுவதும் சராசரியாக 1046 மில்லி மீட்டர் மழைப்பொழிவு பெறும் நிலையில் மழை நீர் இந்த நிலத்தடி நீர் மீள் நிரப்பு கட்டமைப்புகளின் மூலம் நிலத்திற்குள் செலுத்தப்பட்டு ஒரு 4 முதல் 5 அடி வரை நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளது.

கைவிடப்பட்ட 1333 ஆழ்துளை கிணறுகள் 14 நாட்களில் மீட்டெடுப்பு - திருவண்ணாமலை மாவட்டம் உலக சாதனை

இந்திய துணை கண்டத்தில் வேறு எந்த மாவட்டமும் செய்திடாத இந்த புதிய முயற்சியை திருவண்ணாமலை மாவட்டம் நிகழ்த்தியது. அதனைத்தொடர்ந்து எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை நிறுவனம், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி உலக சாதனை நிறுவனம், இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி உலக சாதனை நிறுவனம் மற்றும் தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை நிறுவனம் ஆகிய உலக சாதனை நிறுவனங்கள் மூலம் பல ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இந்த சாதனை அங்கீகரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அதற்கான சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் மற்றும் கூடுதல் ஆட்சியர் வீர பிரதாப் சிங் ஆகியோரிடம் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் வழங்கி கவுரவித்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த அமித் ஹிங்க்ரோனி, சத்யஸ்ரீகுப்தா, பாவனா ராஜேஷ், சவுஜன்யா, அர்ச்சனா ராஜேஷ், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி நிறுவனத்தினைச் சேர்ந்த செந்தில்குமார், சாந்தாராம், இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி நிறுவனத்தை சேர்ந்த ஜெகநாதன், யாஷ்வந்த் சாய், தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
Gold Silver Rates Dec.22nd: ஐயோ போச்சே.! மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கத்தின் விலை; வெள்ளியின் விலையும் உச்சம்
ஐயோ போச்சே.! மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கத்தின் விலை; வெள்ளியின் விலையும் உச்சம்
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்- இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்.? இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
ABP Premium

வீடியோ

”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
Gold Silver Rates Dec.22nd: ஐயோ போச்சே.! மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கத்தின் விலை; வெள்ளியின் விலையும் உச்சம்
ஐயோ போச்சே.! மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கத்தின் விலை; வெள்ளியின் விலையும் உச்சம்
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்- இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்.? இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
Mahindra Scorpio N: புத்தாண்டில் மஹிந்த்ராவின் முதல் சம்பவம் - ஸ்கார்ப்பியோ அப்க்ரேட், என்ன இருக்கு? எப்படி வரும்?
Mahindra Scorpio N: புத்தாண்டில் மஹிந்த்ராவின் முதல் சம்பவம் - ஸ்கார்ப்பியோ அப்க்ரேட், என்ன இருக்கு? எப்படி வரும்?
தானத்தில் தழைத்தோங்கும் தமிழ்நாடு.. 5 ஆண்டுகளில் உடல் உறுப்பு தானத்தில் மாஸ் காட்டிய தமிழகம்!
தானத்தில் தழைத்தோங்கும் தமிழ்நாடு.. 5 ஆண்டுகளில் உடல் உறுப்பு தானத்தில் மாஸ் காட்டிய தமிழகம்!
Trump Epstein Files: எப்ஸ்டீன் கோப்புகள்; மீண்டும் தோன்றிய ட்ரம்ப்பின் புகைப்படங்கள்; நீதித்துறை அளித்த விளக்கம் என்ன.?
எப்ஸ்டீன் கோப்புகள்; மீண்டும் தோன்றிய ட்ரம்ப்பின் புகைப்படங்கள்; நீதித்துறை அளித்த விளக்கம் என்ன.?
TVK VIJAY: 70 தொகுதிகளில் தவெக டெபாசிட் இழக்கும்.!! விஜய்க்கு ஷாக் கொடுக்கும் இந்து மக்கள் கட்சி
70 தொகுதிகளில் தவெக டெபாசிட் இழக்கும்.!! விஜய்க்கு ஷாக் கொடுக்கும் இந்து மக்கள் கட்சி
Embed widget