Delta Districts | டெல்டா மாவட்டங்களில் முக்கிய செய்திகள் என்ன?
வரும் பண்டிகை காலங்களில் அரசு கூறிய விதிமுறைகளை பின்பற்றாத கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது
1. திருச்சி மாவட்டத்தில் 30 லட்சம் மதிப்புள்ள காரை கடத்தி வந்த இருவர் விற்பனை செய்த சகோதரர்கள் என 4 பேரை கைது செய்த தனிப்படை காவல்துறையினர் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
2. திருச்சியில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மொத்த வியாபாரம் மார்க்கெட் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கான பணிகளை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது, மேலும் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணிகள் புத்தாண்டில் தொடங்க வாய்ப்புகள் உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
3. காணாமல் போனவர்கள் குறித்த புகார்கள் வந்தால் அவர் மீது அதிக கவனம் செலுத்தி உடனே நடவடிக்கை எடுக்குமாறு திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
4. திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்தில் 100 சதவீத எழுத்தறிவு இயக்கம் ஜூலை மாதம் 20-ஆம் தேதி பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார், இதனால் மணிகண்டம் ஒன்றியத்தில் கையெழுத்திட தெரியாதவர் யாரும் இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
5. தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பழமானேரியில் உள்ள மதுபான கடையில் இருந்து காலி மது பாட்டில்களை ஏற்றி வந்த லாரி லால்குடி வழியாக திருச்சி நோக்கி சென்றபோது விபத்துக்குள்ளானது.
6. திருச்சி மாவட்டம் கள்ளிக்குடி மார்க்கெட்டில் உள்ள 850 கடைகளில் 650 கடைகள் காந்தி மார்க்கெட் வியாபாரிகள் 200 கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
7. திருச்சி காவல்துறை எஸ்.பி .மூர்த்தி மாவட்ட பகுதிகளில் உள்ள அரிவாள் பட்டறை உரிமையாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அரிவாள் கேட்டால் அவர்களுடைய முழு விவரங்களை பதிய வேண்டும் என உத்தரவிட்டு உள்ளார், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
8. புதுக்கோட்டை மாவட்டம் மருத்துவ துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை பேசியது கடந்த அதிமுக ஆட்சியில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவ கல்லூரிகள் கொண்டுவரப்பட்டன, மேலும் சுகாதாரத்துறை உடனடியாக மருத்துவ கல்லூரியில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து அறிக்கை சமர்ப்பித்து, மீதமுள்ள மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி பெறவேண்டும் என தெரிவித்துள்ளார்.
9. கரூர் மாவட்டம் இந்தியாவில் தனியார் வங்கி சேவையில் முன்னிலையில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி தன் சமூக கூட்டுப்பொறுப்பு நிதியிலிருந்து சிஎஸ்ஆர் நிதி பிரதமர் நிவாரண நிதிக்கு, 3 கோடி 14 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளது.
10. திருச்சி ,பண்டிகை நாட்களில் அரசு கூறிய விதிமுறைகளை கடை உரிமையாளர்கள் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை.