![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி கொம்பன் ஜெகன் யார்? முழு க்ரைம் பட்டியல் இதோ!
திருச்சி மாவட்டத்தில் என்கவுண்டர் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி கொம்பன் ஜெகன், பற்றிய முழு விவரங்கள்..
![என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி கொம்பன் ஜெகன் யார்? முழு க்ரைம் பட்டியல் இதோ! Who is this rowdy Komban Jagan? Here are the full details.. என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி கொம்பன் ஜெகன் யார்? முழு க்ரைம் பட்டியல் இதோ!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/23/ecbab8191d772998dff1b8c6b8ce93b51700706526875571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பணயகுறிச்சியை சேர்ந்தவர் முத்துக்குமார் லாரி டிரைவர் இவரது மனைவி சரஸ்வதி இவர்களது மகன்கள் மூத்தவர் தங்கவேல் இளையவர் ஜெகன் என்கின்ற கொம்பன் ஜெகன் வயது 30 இவருக்கு மனைவி ஒரு மகள் உள்ளார். இவர் 12 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். பின்பு தனது 17 வயது முதல் நண்பர்களுக்காக அடிதடியில் இறங்கினார். பின்பு நண்பர்கள் மூலமாக மண்ணச்சநல்லூர் பிரபல ரவுடி குணாவுடன் பழக்கம் ஏற்பட்டது. அதன் பின்பு பல்வேறு சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டார்.
2010 - ஆண்டு பஞ்சாயத்து தலைவரை கொலை செய்யும் முயற்சி - வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
2011- கொலை முயற்சி வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கபட்டார்.
2012- அடிதடி வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
2013- கொலை முயற்ச்சி வழக்கில் கைது செய்து சிறை தண்டனை பெற்றார்.
2014- திருச்சி புத்தூர் சீனிவாசன் நகர் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் மகனை கொலை செய்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கபட்டார். ( காதல் விவகாரம்)
2014- பிப்ரவரி - 15 ஆள் கடத்தல், கொலை வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கபட்டார்.
2015- சக்திவேல் என்பர் கொலை வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கபட்டார். (முதல் குண்டாஸ்)
2016 - பிரபல ரவுடி சந்துரு வை கொலை செய்ய முயற்சி - கைது செய்து சிறை தண்டனை பெற்றார்.
பின்பு கொம்பன் ஜெகன் நண்பர் மணி கொலை செய்ய்பட்டார். நண்பர் கொலைக்கு பழிக்குபழி தீர்க்கு அடுத்தடுத்து 3 கொலைகள் செய்தார்.
2017- செப்டம்பர் - 19 திருச்சி மாவட்டம் கீழ சிந்தாமணி ஓடத்துறை பகுதியில் சசிகுமார் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டார். (குண்டாஸ்)
2018- ஆள் கடத்தல் மற்றும் கொலை முயற்சி வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கபட்டார்.
2019 - பிரபல ரவுடி கொலை வழக்கில் கைது செய்து சிறை தண்டனை பெற்றார்.
2020- டிசம்பர் -3 திருவண்ணாமலையில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யபட்டார்.
2020- டிசம்பர் -23 சேலம், பிரபல ரவுடி கொலை வழக்கில் கைது செய்யபட்டார்.
2021- திருச்சி உறையூர் அருகே பிரபல அரிசி வியாபாரி கடத்தல் வழக்கில் கைது, குண்டாஸ்
2022- கொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்கில் கைது.
2022- மே - 25 , பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பலத்த ஆயுதங்களுடன் வழிப்பறி ஈடுபட்டதாக கைது. குண்டாஸ்
ரவுடி கொம்பன் ஜெகன் மீது திருச்சி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, சேலம் ,திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பாண்டிச்சேரி, நாமக்கல் போன்ற இடங்களில் நேரடியாகவும் கூலிப்படையாகவும் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடையவர். இவர் கைது செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் முக்கிய குற்றவாளியாக ஜெகன் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர் குற்றங்களில் ஈடுபட்டதால் ரவுடி கொம்பன் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)