(Source: Poll of Polls)
சூப்பருப்பு...திருச்சி - விழுப்புரம் ரயில்களின் வேகம் அதிகரிக்க பணிகள் மும்முரம்
தமிழகத்தின் முக்கியமான வழித்தடமான விழுப்புரம் - திருச்சி வழித்தடத்தில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. அதாவது 130 கிமீ வேகத்தில் ரயில்களை இயக்க பணிகள் நடந்து வருகிறது.

திருச்சி: தெற்கு ரயில்வே மண்டலத்தில் மிகவும் பிசியான ரூட்டாக உள்ள விழுப்புரம் - திருச்சி வழித்தடத்தில் இயங்கும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க முடிவு செய்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிய வந்துள்ளது. இதனால் இந்த வழித்தடத்தில் பயண நேரம் குறையும் என்பதால் ரயில் பயணிகள் உற்சாகமாக உள்ளனர்.
தமிழகத்தின் முக்கியமான வழித்தடமான விழுப்புரம் - திருச்சி வழித்தடத்தில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. அதாவது 130 கிமீ வேகத்தில் ரயில்களை இயக்க பணிகள் நடந்து வருகிறது. இதற்காக தண்டவாளம், சிக்னல் முறைகளை மேம்படுத்துவது, பாலம் அமைப்பது, வேகக் கட்டுபாடுகளை அகற்றுவது போன்ற பணிகளில் மும்முரமாக இறங்கியுள்ளது ரயில்வே நிர்வாகம். தமிழகத்தில் மிகவும் பிசியான ரயில்வே ரூட் என்றால் அது சென்னை - திருச்சி, மதுரையை கனெக்ட் செய்யும் வழித்தடத்தை சொல்லலாம்.

சென்னையில் இருந்து நெல்லை, கன்னியாகுமரி, நாகர்கோவில், மதுரை, திருச்சி என பல்வேறு ஊர்களுக்கு இந்த ரூட்டில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் லட்சக்கணக்கான பயணிகள் இந்த வழித்தடங்களில் பயணம் செய்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறைந்த கட்டணம், வசதிகள் என்ற நிலையால் ரயில் பயணத்தை அதிக பயணிகள் விரும்புகின்றனர். முக்கியமாக முதியவர்கள், பெண்கள் என அனைவருக்கும் ரயில் பயணம்தான் மிகவும் விருப்பமான ஒன்றாக உள்ளது.
130 கிமீ வேகத்தில் இயக்க வடக்கில் இருந்து தெற்கு பகுதிக்கு செல்லும் இந்த கோர்டு லைன் செக்ஷன் வழித்தடத்தில் விருதாச்சலம், அரியலூர், லால்குடி, ஸ்ரீரங்கம் ஆகிய இடங்கள் வழியாக செல்கின்றன. தமிழகத்தின் வடக்கு, தென் கிழக்கு, தெற்கு மாவட்டங்களில் உள்ள பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இந்த வழியாக எக்ஸ்பிரஸ், பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. திருச்சி ரயில்வே டிவிஷனுக்கு உள்பட்ட பகுதிகளில் இருவழிப்பாதை அமைந்துள்ளது. இந்த வழித்தடங்கள் வழியாக கேரள உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களும் இயக்கப்படுகின்றன.
170 கிலோ மீட்டர் நீளம் கொண்ட விழுப்புரம் - திருச்சி வழித்தடத்தில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. சென்னை - ரேணிகுண்டா, அரக்கோணம் - ஜோலார்பேட்டை, சென்னை - கூடூர் ஆகிய வழித்தடங்களில் அதிவிரைவு ரயில்கள் மணிக்கு 110 கி.மீ. முதல் 130 கி.மீ. வரை வேகத்தில் இயக்கப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த வழித்தடத்தில் பயண நேரம் வெகுவாக குறைந்துள்ளது.
ஆனால் மற்ற வழித்தடங்களில் 90 முதல் அதிகப்பட்சம் 110 கிலோ மீட்டர் வேகத்தில் தான் ரயில்கள் இயக்கப்படுகின்றன. எனவே இந்த ரூட்டில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க ரயில்வே திட்டமிட்டது. கோர்டு லைன் வழித்தடத்தை பொறுத்தவரை பெரிய அளவிலான பாலங்கள், சிறிய பாலங்கள், ரயில்வே லெவல் கிராசிங்குகள், சிக்னல்கள், சுரங்கப்பாதைகள், லூப் லைன்கள் ஆகியவை உள்ளன.
எனவே இதையல்லாம் கருத்தில் கொண்டு இந்த வழித்தடத்தில் வேகத்தை அதிகரிப்பது தொடர்பான பணிகளில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதற்காக தண்டவாளம், சிக்னல் முறைகளை மேம்படுத்துவது, பாலம் அமைப்பது, வேகக் கட்டுபாடுகளை அகற்றுவது உள்ளிட்ட பணிகளை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது. ரயில் நிலையங்களில், ரயில் வழித்தடங்களில் வேகமாக இயக்க தடையாக உள்ள விஷயங்களை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. வழக்கமான ரயில் சேவையில் எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன என்பதும் நினைவில் கொள்ள வேண்டும். இதில் முக்கியமாக செய்ய வேண்டிய பணி என்னவென்றால், குஷன்களை அதிகப்படுத்தும் நிலைப்படுத்தும் பணிகளை செய்வதுதான்.
அதேபோல, தண்டவாளத்தில் வளைவுகள் இருந்தால் அதை சீர் செய்வதும் மற்றொரு முக்கிய பணியாகும். இந்த வளைவுகள் குறைக்கப்படும் பட்சத்தில், ரயில்களின் வேகத்தை 130 கிலோ மீட்டர் வரை அதிகரிக்க முடியும். தண்டவாளங்களில் அதிக அளவில் அத்துமீறி கடக்க கூடிய பகுதிகளை கண்டறிந்து வேலிகள் அமைப்பது உள்ளிட்ட பணிகளும் செய்யப்பட உள்ளது என்று தெரிய வந்துள்ளது. விழுப்புரம் விருதாச்சலம் வழித்தடத்தில், டபுள் டிஸ்ண்டண்ட் சிக்னல்கள் அமைக்கும் பணி முடிவு பெறும் தருவாயில் உள்ளது. விருத்தாச்சலம் சிலக்குடி மற்றும் சிலக்குடி டூ திருச்சி வரையிலான ரூட்டில் டபுள் டிஸ்ண்டண்ட் சிக்னல்கள் நிறுவப்பட உள்ளது.
டபுள் டிஸ்ண்டண்ட் சிக்னல்கள் நிறுவததன் மூலம் ரயில்களை வேகமாகவும். பாதுகாப்பாகவும் இயக்க முடியும். விழுப்புரம் - திருச்சி பிஜி செக்ஷன் இந்த மொத்த பணிகளும் அடுத்த நிதி ஆண்டில் முடிக்கப்படும் என்று எதிபார்க்கப்படுகிறது. இதன்பிறகு இந்த ரூட்டில் ரயில்களின் வேகம் 130 கிமீட்டர் வரை அதிகரிக்கப்படும். இதன்மூலம் பயண நேரம் கணிசமாக மிச்சமாகும். இந்த வழித்தடத்தில் தற்போது 100 க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ், பாசஞ்சர் ரயில்கள் இரு மார்க்கத்திலும் இயக்கப்படுகின்றன. வந்தே பாரத், அனந்தபுரி, வைகை , பாண்டியன் பல்லவன், ராக்போர்ட், ஹவ்ரா ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்படுகின்றன. பணிகள் நிறைவடைந்து ரயில்கள் வேகம் அதிகரிக்கப்பட்டால் பயண நேரம் வெகுவாக குறையும். இதனால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.





















