மேலும் அறிய

பயணிகளின் கனிவான கவனத்திற்கு... 6 ரயில்கள் ரத்துங்க: முழு விவரம் உள்ளே

பொறியியல் பணிகள் காரணமாக, நாளை 13-ந்தேதி இந்த வழித்தடம் வழியாக செல்லும் ரெயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி ரெயில்வே கோட்டத்தின் கோட்டை - முத்தரசநல்லூர் பிரிவுக்கு இடையே பொறியியல் பணிகள் காரணமாக நாளை 13-ந்தேதி திருச்சி வழியாக செல்லும் 6 பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

திருச்சி ரெயில்வே கோட்டத்தின் கோட்டை - முத்தரசநல்லூர் பிரிவுக்கு இடையேயான தற்போதைய சாலை, மேம்பாலம் அகற்றுதல் மற்றும் பொறியியல் பணிகள் காரணமாக, நாளை 13-ந்தேதி இந்த வழித்தடம் வழியாக செல்லும் ரெயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி கரூர் - திருச்சி பயணிகள் ரெயில் (வண்டி எண்: 76810), திருச்சி - கரூர் பயணிகள் ரெயில் (வண்டி எண்- 76809), திருச்சி - ஈரோடு பயணிகள் ரெயில் (வண்டி எண்- 56105), மயிலாடுதுறை - சேலம் பயணிகள் ரெயில் (வண்டி எண்- 16811), சேலம் - மயிலாடுதுறை பயணிகள் ரெயில் (வண்டி எண்- 16812), ஈரோடு - திருச்சி பயணிகள் ரெயில் (வண்டி எண்- 56810) உள்ளிட்ட ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

அதனால இந்த ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் உங்கள் பயணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். இதேபோல் ஈரோடு - திருச்சி பயணிகள் ரெயில் (வண்டி எண்- 56106) ஈரோட்டில் இருந்து காலை 8.10 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் கரூர் வரை மட்டுேம இயங்கும். பாலக்காடு - திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்- 16844) கரூர் வரை மட்டும் இயங்கும். மேலும் திருச்சியில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்படும் திருச்சி - பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்- 16843) திருச்சி - கரூர் இடையே ரத்து செய்யப்பட்டு கரூரில் இருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

காரைக்கால் - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்- 16187) காரைக்காலில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு திருச்சி, திண்டுக்கல், கரூர் வழியாக மாற்றுப்பாதையில் எர்ணாகுளத்திற்கு செல்லும். கடலூர் - மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்- 16231) கடலூரில் இருந்து மாலை 3.40 மணிக்கு புறப்பட்டு திண்டுக்கல், கரூர் வழியாக மாற்றுப்பாதையில் மைசூருக்கு சென்றடையும்.

இந்த ரெயில்கள் கோட்டை மற்றும் குளித்தலை ரெயில் நிலையங்களுக்கு செல்லாது. இந்த தகவல் திருச்சி ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மங்களூரூ - தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்- 16160) மங்களூரூவில் இருந்து காலை 6.45 மணிக்கு புறப்பட்டு 2 மணி நேரம் தாமதமாக தாம்பரத்திற்கு சென்றடையும். மன்னார்குடி - கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்- 16615) மன்னார்குடியில் இருந்து இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு 40 நிமிடம் தாமதமாக கோவைக்கு சென்றடையும். எனவே இந்த வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் இதை மறந்துடாதீங்க. அப்புறம் வருத்தப்படுவீங்க. கவனம் தேவைங்க.

தற்போது ரயில் பயணத்தையே அதிகம் பேர் விரும்புகின்றனர். மேலும் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் மக்கள் குடும்பத்துடன் ரயிலில் பிற மாவட்ட சுற்றுலாத்தலங்களுக்கு பயணம் செய்கின்றனர். இந்நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. எனவே குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்கள் பயணத்தை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். 

தலைப்பு செய்திகள்

CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
Embed widget