Trichy: மசாஜ் சென்டர் என்ற பெயர்.. இரு இளம் பெண்களை வைத்து ஜோராக நடந்த பாலியல் தொழில்.. ஒருவர் கைது!
திருச்சி மாநகர் பகுதியில் உள்ள மசாஜ் சென்டரில் 2 இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
![Trichy: மசாஜ் சென்டர் என்ற பெயர்.. இரு இளம் பெண்களை வைத்து ஜோராக நடந்த பாலியல் தொழில்.. ஒருவர் கைது! Trichy: Prostitution of 2 young women in the name of massage center One person arrested Trichy: மசாஜ் சென்டர் என்ற பெயர்.. இரு இளம் பெண்களை வைத்து ஜோராக நடந்த பாலியல் தொழில்.. ஒருவர் கைது!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/24/f21c8f45d8bd65e5ede0cb2b496570f61687618497037184_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருச்சி மாநகரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு சில பகுதிகளில் தொடர்ந்து பாலியல் தொழில் நடைபெற்று வருவதாகவும், குறிப்பாக இளம் பெண்களை ஏமாற்றி விபச்சார தொழிலை செய்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சத்திய பிரியா அவர்களின் உத்தரவின் அடிப்படையில்.. திருச்சி முழுவதும் காவல்துறையினர் இரவு ,பகலாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சந்தேகப்படும்படியான இடங்கள் இருந்தால் உடனடியாக சோதனை செய்யவும் மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக காவல்துறைக்கு புகார் வந்தது. அதன்படி ஒரு சில இடங்களில் ஆய்வு மேற்கொண்டதில் அது உண்மை என கண்டறிந்த பிறகு சம்பந்தப்பட்டவன் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் திருச்சி மாநகர் தில்லைநகர் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஸ்பா எனும் மசாஜ் சென்டர் இயங்கி வந்தது. இங்கு இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் தில்லை நகர் காவல்துறையினரிடம் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான சிறப்பு படை போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று சோதனை நடத்தினர். இதில் திருச்சி கருமண்டபம் ஆர். எம்.எஸ். காலனி 2-வது தெரு பகுதியைச் சேர்ந்த பூபதி சஞ்சய் ( வயது 28) என்பவர் இரண்டு இளம் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து பூபதியை போலீசார் கைது செய்தனர். மேலும் மீட்கப்பட்ட பாண்டிச்சேரியை சேர்ந்த 25 மற்றும் 23 வயது உடைய இரண்டு இளம் பெண்களை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இளம்பெண்களை வைத்து விபச்சார தொழில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)