(Source: ECI | ABP NEWS)
Trichy Power Cut Alert: நாளை(03.07.25) திருச்சியில் மின் தடை! முக்கிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம், தெரிந்து கொள்ளுங்கள்!
Trichy Power Shutdown: திருச்சியில் நாளை 07-03-2025 பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் பல்வேறு இடங்களில் மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது

Trichy Power Shutdown: திருச்சியில் நாளை மாத பராமரிப்பு பணி காரணமாக நகரின் சில இடங்களில் மின் தடை செய்யப்படுவது வழக்கம். மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யும் தமிழ்நாடு மின்சார வாரியம் மாதந்தோறும் இந்த மின் தடையை செய்து பராமரிப்பு பணிகளை மேற்க்கொண்டு வருகிறது.
திருச்சியில் நாளைய மின்தடை: 03.07.2025
இந்நிலையில், நாளை(03.07.2025) திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடை செய்யப்படும் எனற அறிவிப்பை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இதனால், பராமரிப்பு பணிகளுக்காக வியாழக்கிழமை (03.07.2025) காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
அதாவத்தூர்:
புலியூர், தாயனூர், புங்கனூர், இனியனூர், சோமரசம்பேட்டை, குழுமணி, வயலூர், நாச்சிக்குறிச்சி, முள்ளிகரும்பூர், எட்டரை, கொப்பு, ஆல்துறை, பெரிய கருப்பூர், மல்லியம்பத்து
மேலே கூறிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சில பகுதிகளிலும், சில பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சில பகுதிகளிலும் மின்தடை செய்யப்பட உள்ளது. இதனால், பொதுமக்கள் தங்கள் பணிகளை அதற்கேற்றவாறு முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வது நல்லது ஆகும்.






















