மேலும் அறிய

Trichy power cut: திருச்சி மக்களே உஷாரா இருங்க.. நாளைக்கு ஒரு நாள் மின்சாரம் நிறுத்தம்: எந்தெந்த பகுதிகள்? விபரம்

திருவரங்கம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை முதல் மாலை வரை மின்சாரம் துண்டிக்கப்படும் - மின்வாரியம் அறிவிப்பு

பொதுவாக தமிழ்நாட்டில் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது மின்சாரம் துண்டிக்கப்படுவது வழக்கம். மேலும் பராமரிப்ப பணிகள் தொடங்குவதற்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பாகவே பொது மக்களுக்கு மின்சாரம் நிறுத்தம் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்படும்.

இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் இயங்கக்கூடிய துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் ஒரு சில பகுதிகளில் மின்சாரம் வழங்குவது நிறுத்தப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. 

மேலும் இது தொடர்பாக திருவரங்கம் துணை மின் நிலையம் செயற்பொறியாளர் செல்வம் கூறியது.. 

திருச்சி மாவட்டம்,  திருவரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட திருவரங்கம் 110/11KV துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2024) (வியாழன் கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் திருவரங்கம், மூலத்தோப்பு, மேலூர், வசந்தநகர், ரயில்வே ஸ்டேஷன் ரோடு, கிழக்கு உத்திர வீதி, மேற்கு உத்திர வீதி, ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது. 

Trichy power cut: திருச்சி மக்களே உஷாரா இருங்க.. நாளைக்கு ஒரு நாள் மின்சாரம் நிறுத்தம்: எந்தெந்த பகுதிகள்? விபரம்

திருச்சி மக்களே உஷாரா இருங்க..  நாளைக்கு கரண்ட் இருக்காது..

அதேபோல் வடக்கு உத்திர வீதி, தெற்கு உத்திர வீதி, வடக்கு சித்திரை வீதி, கிழக்கு சித்திரை வீதி, தெற்கு சித்திரை வீதி, மேற்கு சித்திரை வீதி, அடையவளஞான் தெருக்கள், பெரியார்நகர், மங்கம்மாநகர், அம்மாமண்டபம் ரோடு, மாம்பழச்சாலை, வீரேஸ்வரம் திருவாணைக்கோவில் சன்னதி வீதி, சீனிவாச நகர், நரியன் தெரு, நெல்சன் ரோடு. அம்பேத்கார் நகர், பஞ்சகரை ரோடு, அருள் முருகன் கார்டன், உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நாளை ஒரு நாள் நிறுத்தப்படும். 

இதேபோல் ஏ.யு.டீ. நகர், ராகவேந்திரா கார்டன். காந்தி ரோடு, டிரங்க் ரோடு, சென்னை பைபாஸ் ரோடு,கல்லனை ரோடு, கீழகொண்டையம்பேட்டை, ஜம்புகேஸ்வரர் நகர், தாகூர் தெரு, திருவென்னைநல்லூர், பொன்னுரங்கபுரம், திருவளர்சோலை, பனையபுரம், உத்தமர்சீலி, கிளிக்கூடு,  செக் போஸ்ட் ஆகிய பகுதிகளில் நாளைக்கு ஒரு நாள் துணை மின் நிலையம் பராமரிப்பு காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும். 

மேலும், துணை மின் நிலையம் பராமரிப்பு பணியின் காரணமாக நாளை (29.08.2924) காலை 09:45 மணி முதல் மாலை 16:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், இயக்கலும் & காத்தலும், திருவரங்கம், செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.

Trichy power cut: திருச்சி மக்களே உஷாரா இருங்க.. நாளைக்கு ஒரு நாள் மின்சாரம் நிறுத்தம்: எந்தெந்த பகுதிகள்? விபரம்

துணை மின் நிலையம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுதல்..

தமிழ்நாடு முழுவதும் அவ்வப்போது மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. சிறிதளவு காற்று அடித்தாலே மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. மழை பெய்தால் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது , பல இடங்களில் இருந்து புகார்கள் தொடர்ந்து வருகிறது. 

ஆகையால் இவற்றை கருத்தில் கொண்டு முறைப்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இயங்கும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மின்சாரத்தை பாதுகாப்பான முறையில் மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாளை காலை முதல் மாலை வரை மேலே கூறப்பட்டுள்ள பகுதிகளில் மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டு இருக்கும்.

எனவே பொதுமக்கள் மின்சாரம் துண்டிபதற்கு  முன்னதாகவே தங்களுக்கு தேவையான மின் சாதனங்களை சார்ஜ் செய்து வைத்து கொள்ள வேண்டும். மேலும் மின்சார வாரியத்திற்கு பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என மின்சார வாரியம் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றிய திருமா!
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றிய திருமா!
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Vs TVK | Aloor Shanavas: என்னது விஜய் கூத்தாடியா? உங்க தலைவர் திருமா யாரு? ஷா நவாஸை பொளக்கும் பிரபலங்கள்!Aadhav Arjuna: VCK Issue : ஆதவ் பற்றவைத்த நெருப்புகோபத்தில் விசிக சீனியர்ஸ்! கட்சியை காப்பாற்றுவாரா திருமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றிய திருமா!
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றிய திருமா!
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
"பக்திமானா இருப்பார் போல" பெட்ரோல் பங்கில் சாமியை கும்பிட்டுவிட்டு ஆட்டைய போட்ட திருடர்!
"அவங்களுக்கு தகுதி இருக்கு" மம்தா தலைமையில் இந்தியா கூட்டணி? பயங்கர வியூகமா இருக்கே!
Vijay - Seeman:
Vijay - Seeman: "திருமாதான் வேண்டும்" சீமானை கண்டுகொள்ளாத விஜய்! அப்செட்டில் அண்ணன்!
Embed widget