Trichy Power Cut: திருச்சியில் நாளைய(03-01-2026) மின் தடை! எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது? முழு விவரம் இதோ!
Trichy Power Shutdown: திருச்சியில் (03-02-2026) மின் தடை செய்யப்பட உள்ள இடங்கள் குறித்த விவரங்களை காணலாம்

Trichy Power Shutdown: திருச்சியில் பல்வேறு பகுதிகளில் 03-01-2026 அன்று மின்சார வழித்தடங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
மாதாந்திர மின் பராமரிப்பு பணி
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. திருச்சி மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.
எந்த நேரத்தில் மின் நிறுத்தம்?
பராமரிப்பு பணிக்காக வழக்கமாக காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை அறிவிக்கப்பட்ட இடங்களில் மின்சாரமானது நிறுத்தப்படும். . இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
எங்கெல்லாம் மின் தடை:
புதுநத்தம்
காவல்காரன்பட்டி, சுக்கம்பட்டி, கருமலை, பன்னங்கொம்பு, சத்துவபுரம், அடையாபட்டி, கே.பிடி.பழவஞ்சி, கம்புலிப்பட்டி, சின்னகாவுடம்பட்டி, குளத்தூரன்பட்டி, பாலக்காட்டம்,
அம்பிகாபுரம்
அரியமங்கலம், காட்டூர், சங்கிலியாண்டபுரம், கல்கந்தர் கோட்டை, மலையப்பா என்ஜிஆர், வள்ளுவர் என்ஜிஆர், மிலிட்ரி கிளை, முத்துமணிடவுன் 1-12 கிராஸ்.






















