திருச்சியில் 9 சோதனை சாவடிகளில் நம்பர் பிளேட்டுகளை கண்டறியும் கண்காணிப்பு கேமரா பொருத்தம் - காவல் ஆணையர் காமினி
திருச்சி மாநகரில் காணாமல் போன ரூ.20 லட்சம் மதிப்புள்ள 98 செல்போன்களை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு - திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் காமினி
![திருச்சியில் 9 சோதனை சாவடிகளில் நம்பர் பிளேட்டுகளை கண்டறியும் கண்காணிப்பு கேமரா பொருத்தம் - காவல் ஆணையர் காமினி Trichy Police Commissioner Kamini 9 checkpoints in Trichy equipped with surveillance cameras to detect vehicle number plates - TNN திருச்சியில் 9 சோதனை சாவடிகளில் நம்பர் பிளேட்டுகளை கண்டறியும் கண்காணிப்பு கேமரா பொருத்தம் - காவல் ஆணையர் காமினி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/13/251bccf727df3b543af217b9a70a7d591718260134916184_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருச்சி மாநகர் காவல்துறை ஆணையர் காமினி பொறுப்பேற்றதிலிருந்து, திருச்சி மாநகர் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குற்றச்சாம்பவங்களை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக வழிப்பறி, திருட்டு, கொலை சம்பவங்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளார்.
குறிப்பாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை மற்றும் லாட்டரி சீட்டு விற்பனை ஆகிய செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.
இந்நிலையில் பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் விதமாக சிறப்பு குறைதீர்ப்பு முகாம் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி தலைமையில் வாரம் தோறும் நடைபெற்று வருகிறது.
குழந்தை தொழிலாளர் இல்லாதா மாநிலமாக மாற்ற வேண்டும் - திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் காமினி
இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்றும், 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்தமாட்டோம். குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் என்றும், தமிழ்நாட்டை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு தங்களால் இயன்றவரை பாடுபடுவோம் என தெரிவித்தார்.
மேலும், கே.கே.நகர் ஆயுதப்படை திருமண மண்டபத்தில் திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியில் காணாமல் போய் கண்டுபிடிக்கப்பட்ட சுமார் ரூ.20 இலட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த 98 ஆன்டிராய்டு செல்போன்கள் அதன் உரிமையாளிடம் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி அவர்கள் ஒப்படைத்தார்கள்.
மேலும், திருச்சி மாநகர பொதுமக்களுக்கான சிறப்பு குறைதீர்ப்பு முகாம் காவல் ஆணையர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்கள் இச்சிறப்பு முகாமிற்கு நேரில் வந்து கொடுத்த 34 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு கான சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டி அனுப்பி வைக்கப்பட்டது.
திருச்சி மாநகரில் இதுவரை 55 நபர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.
மேலும் திருச்சி மாநகரில் நடந்த வழிப்பறி கொலை சம்பவத்தில் 22 வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் வீட்டின் பூட்டை உடைத்த 19 வழக்குகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை திருச்சி நகரில் 55 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி மாநகரில் உள்ள 9 சோதனை சாவடிகளில் வாகனங்களில் நம்பர் பிளேட்டுக்களை கண்டறியும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
திருச்சி மாநகரை பொறுத்தவரை 860 கண்காணிப்பு கேமராக்கள் சாலைகள் மட்டும் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகரில் தொடர் திருட்டு சம்பவங்களை தடுக்க பொதுமக்களும், வியாபாரிகளும் அந்தந்த பகுதிகளில் போலீசார்ருடன் ஒத்துழைப்பு நல்கி கண்காணிப்பு கேமராக்களை அதிகளவில் பொருத்த வேண்டும் என கமிஷனர் காமினி கூறினார்.
பொது மக்களை அச்சுறுத்தும் விதமாக தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள், வழிப்பறி, திருட்டு கொலை மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருள், லாட்டரி சீட்டு விற்பனை உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடுவதை கண்டறிந்து சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)