மேலும் அறிய

திருச்சியில் ரூபாய் 10,000 லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது - லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை

திருச்சியில் மனை உட்பிரிவு செய்து கொடுக்க ரூ 10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக சர்வேயர் கைது செய்யப்பட்டார் - லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை.

திருச்சி சுப்பிரமணியபுரம் இந்திரா காந்தி நெருவை சேர்ந்தவர் பொன்னையா இவரது மகள் முனியப்பன்(50) இவர் சொந்தமாக மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில்  திருச்சி கொட்டப்பட்டு கிராமத்தில் 1200 சதுரஅடி உள்ள ஒரு மனையினை கடத்த மாதம் வாங்கியுள்ளார். அந்த மனையினை உட்பிரிவு செய்து பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக திருச்சி கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கடந்த 11-7-2024 அன்று விண்ணப்பித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, முனியப்பன் விண்ணப்பித்து ஒரு மாதம் ஆகியும் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து எந்த தகவலும் கிடைக்கப்பெறாததால் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று முனியப்பன் விசாரித்தார்.

அப்போது தனது மனையை உட்பிரிவு செய்து கொடுக்க கொட்டப்பட்டு பகுதிக்கான சர்வேயர் முருகேசன் (34) என்பவரை பார்க்க வேண்டும் என்று தெரிந்து கொண்டு முருகேசனிடம் பேசி உள்ளார். அதற்கு சர்வேயவர் முருகேசன்,  முனியப்பனின் மனையினை வந்து ஆய்வு செய்துவிட்டு உட்பிரிவு செய்து தர 15,000 லஞ்சமாக கேட்டுள்ளார்.

திருச்சியில் ரூபாய் 10,000 லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது - லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை

திருச்சியில் ரூபாய் 10,000 லஞ்சம் பெற்ற சர்வேயர் கைது

ஆனால் முனியப்பன் லஞ்சப் பணத்தை குறைத்து கொள்ள வேண்டுமாறு முருகேசனிடம் கெஞ்சி கேட்டதன் பேரில், முருகேசன் 5000 ரூபாய் குறைத்துக் கொண்டு 10 ஆயிரம் கொடுத்தால் தான் உனக்கு உட்பிரிவு செய்து தர முடியும் என்று கட்டாயமாக கூறியுள்ளார்.

இதனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத முனியப்பன் திருச்சி லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் அளித்த புகாரின் பேரில் டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் ஆய்வாளர்கள் சக்திவேல் பிரசன்ன வெங்கடேசன் பாலமுருகன் மற்றும் குழுவினரிடம் புகார் தெரிவித்தார். 

இந்நிலையில் இன்று முனியப்பனிடமிருந்து சர்வேயர் முருகேசன் ரூ 10 ஆயிரம் ரூபாய் லஞ்ச பணம் கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து பெற்றபோது அங்கு மறைத்திருந்த வஞ்ச ஒழிப்பு துறையினர் சர்வேயர் முருகேசனை கையும் களவுமாக மடக்கி பிடித்தனர். இதன் தொடர்ச்சியாக திருச்சி கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டத்தை பொருத்தவரையில் நிலங்கள் உட்பிரிவு செய்வது தொடர்பாக நில அளவையர்கள் தங்களிடம் வரும் பொதுமக்களிடம் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு தொகை என நிர்ணயம் செய்து இடைத்தரகர்கள் மூலம் லஞ்சம் பெற்று வருகிறார்கள் என்பது பொதுமக்கள் அளித்த பல புகார்களின் அடிப்படையில் தெரிய வருகிறது.

பொதுமக்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டால் நில அளவையர்கள் யாரும் தொலைபேசியை எடுப்பதில்லை என்றும் இடைத்தரகர்களின் தொலைபேசிக்கு மட்டுமே தொடர்பு கொள்ள முடியும் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

அரசு துறையில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பொதுமக்களுக்காக சேவை செய்யக்கூடியவர்கள். எந்த நிலையிலும் பொது மக்களிடம் லஞ்சம் பெறக் கூடாது என சட்டம் உள்ளது. ஆனால் கடந்த சில மாதங்களாக திருச்சி மாவட்டத்தில் இருக்கக்கூடிய அரசு அலுவலகங்களில் லஞ்சம் பெறுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

இனிவரும் காலங்களில் அரசு துறையில் பணியாற்றும் அதிகாரிகள் அல்லது அலுவலர்கள் பொதுமக்களிடையே லஞ்சம் கேட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், பொதுமக்கள் உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

AR Rahman Divorce: முடிவுக்கு வந்த 30 ஆண்டுகால திருமண வாழ்க்கை: ஏ.ஆர்.ரஹ்மானுடன் மனைவி விவாகரத்து - ரசிகர்கள் அதிர்ச்சி
AR Rahman Divorce: முடிவுக்கு வந்த 30 ஆண்டுகால திருமண வாழ்க்கை: ஏ.ஆர்.ரஹ்மானுடன் மனைவி விவாகரத்து - ரசிகர்கள் அதிர்ச்சி
A R Rahman : ரொம்ப வயசான மாதிரி ஃபீல் ஆகிடுச்சு..மனைவி சாய்ராவை முதல்முறை சந்தித்தது குறித்து ரஹ்மான்
A R Rahman : ரொம்ப வயசான மாதிரி ஃபீல் ஆகிடுச்சு..மனைவி சாய்ராவை முதல்முறை சந்தித்தது குறித்து ரஹ்மான்
"இதுதான்யா மனிதநேயம்" பரிதவிக்கும் பாலஸ்தீனியர்கள்.. ஓடோடி சென்று உதவிய இந்தியா!
யானை மிதித்து பறிபோன இரண்டு உயிர்: உடனடியாக அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு! வெளியான தகவல்
யானை மிதித்து பறிபோன இரண்டு உயிர்: உடனடியாக அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு! வெளியான தகவல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP Controversy Video |’’நாங்க ஆட்சிக்கு வரலனா..உங்கள சூறையாடிருவாங்க!’’பாஜக மதவெறி வீடியோGym Master Death | காதில் ரத்தம்..பாத்ரூமில் சடலம்..ஜிம் உரிமையாளர் திடீர் மரணம்!Keerthi Suresh Wedding : கீர்த்தி சுரேஷ்-க்கு டும் டும் 15 வருடம் காதலா!காதலன் யார் தெரியுமா?Tiruchendur Elephant Attack : உணவு கொடுத்த பக்தர்!மிதித்து கொன்ற கோவில் யானை..

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AR Rahman Divorce: முடிவுக்கு வந்த 30 ஆண்டுகால திருமண வாழ்க்கை: ஏ.ஆர்.ரஹ்மானுடன் மனைவி விவாகரத்து - ரசிகர்கள் அதிர்ச்சி
AR Rahman Divorce: முடிவுக்கு வந்த 30 ஆண்டுகால திருமண வாழ்க்கை: ஏ.ஆர்.ரஹ்மானுடன் மனைவி விவாகரத்து - ரசிகர்கள் அதிர்ச்சி
A R Rahman : ரொம்ப வயசான மாதிரி ஃபீல் ஆகிடுச்சு..மனைவி சாய்ராவை முதல்முறை சந்தித்தது குறித்து ரஹ்மான்
A R Rahman : ரொம்ப வயசான மாதிரி ஃபீல் ஆகிடுச்சு..மனைவி சாய்ராவை முதல்முறை சந்தித்தது குறித்து ரஹ்மான்
"இதுதான்யா மனிதநேயம்" பரிதவிக்கும் பாலஸ்தீனியர்கள்.. ஓடோடி சென்று உதவிய இந்தியா!
யானை மிதித்து பறிபோன இரண்டு உயிர்: உடனடியாக அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு! வெளியான தகவல்
யானை மிதித்து பறிபோன இரண்டு உயிர்: உடனடியாக அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு! வெளியான தகவல்
கருணாநிதி பற்றி பேசிய சீமான்: முடிஞ்சா செஞ்சி பாருன்னு சவால் விட்ட அமைச்சர் சேகர்பாபு - என்ன நடந்தது?
கருணாநிதி பற்றி பேசிய சீமான்: முடிஞ்சா செஞ்சி பாருன்னு சவால் விட்ட அமைச்சர் சேகர்பாபு - என்ன நடந்தது?
“விஜய் ஆட்சிக்கு ஆசைப்படலாம்; தவறல்ல” - திருமாவளவன் வைக்கும் ட்விஸ்ட் - பரபரப்பில் அரசியல் களம்
“விஜய் ஆட்சிக்கு ஆசைப்படலாம்; தவறல்ல” - திருமாவளவன் வைக்கும் ட்விஸ்ட் - பரபரப்பில் அரசியல் களம்
"100 கோடி கேக்குறாங்க" அதிமுகவுடன் டீல் பேசும் கட்சிகள்.. ஓப்பனாக பேசிய திண்டுக்கல் சீனிவாசன்!
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
Embed widget