மேலும் அறிய

போராட்டத்தில் பாஜகவினருக்கும் , காவல்துறைக்கும் இடையே வாக்குவாதம் - திருச்சியில் பரபரப்பு

திருச்சியில் அரசு அதிகாரிகளின் மீது தாக்குதல் நடத்தியவர்களை கண்டித்து திருச்சி மாவட்ட பாஜக சார்பாக வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட காஜாமலை பகுதியில் ஏசிஎல் என்ற சாஃப்ட்வேர் நிறுவனத்தை  கார்த்திகேயன், ரெங்கநாதன் உள்ளிட்ட 4 பேர் நடத்தி வந்துள்ளனர். அவர்கள் கடந்த 2012 ம் ஆண்டு காஜமலையில் உள்ள சொத்தினை அடமானம் வைத்து கனரா வங்கியில் கடன் வாங்கி உள்ளனர். ஆனால் அதற்கான அசல் மற்றும் வட்டியை அவர்கள் செலுத்தாமல் இருந்துள்ளனர்.

துணை வட்டாட்சியர் மீது தாக்குதல்:

பலமுறை வங்கியில் இருந்து நோட்டீஸ் அனுப்பியும் கடன் தொகையை திரும்ப செலுத்தாததால் காஜாமலை பகுதியில் உள்ள கார்த்திக் வீட்டிற்கு நேற்று முன்தினம் மண்டல துணை வட்டாட்சியர் பிரேம்குமார் மற்றும் கனரா வங்கி ஊழியர்கள் ஜப்தி செய்ய சென்றுள்ளனர். ஜப்தி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது அங்கு வந்த கார்த்திக் மற்றும் அடையாளம் தெரியாத 20க்கும் மேற்பட்ட குண்டர்கள் சரமாரியாக அவர்களை தாக்கி உள்ளனர். மேலும், இந்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயம் அடைந்த மண்டல துணை வட்டாட்சியர் பிரேம் குமார் மற்றும் கனரா வங்கி ஊழியர்கள் படுகாயத்துடன் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து திருச்சி மேற்கு வட்டாட்சியர் ராஜவேல் மற்றும் கனரா வங்கி மேலாளர் ஆகியோர் கே கே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

போராட்டத்தில் பாஜகவினருக்கும் , காவல்துறைக்கும் இடையே வாக்குவாதம் - திருச்சியில் பரபரப்பு

இந்நிலையில் துணை வட்டாட்சியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்தும் அவரை தாக்கிய முக்கிய குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்கத்தினர், பணி புறக்கணித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அமர்ந்து கடந்த வாரம் 2 நாட்களாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். துணை வட்டாட்சியரை தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வருவாய் துறையினருக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என தான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இந்த பணி புறக்கணிப்பு போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் 750 வருவாத்துறையினர் பங்கேற்றுள்ளனர் என தெரிவித்தனர். இந்நிலையில் இன்று கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியது "வருவாய் துறையினர் ஜப்தி நடவடிக்கைகள் செல்லும் போது காவல்துறையினருக்கு தகவல் தெரிவிப்பார்கள், அதேபோல  காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் போலீசார் வருவதற்கு முன்பாகவே தாக்குதல் சம்பவம் நடைபெற்று உள்ளது. குறிப்பாக இந்த தாக்குதல் சம்பவத்திற்கு திமுக கவுன்சிலர் காஜாமலை விஜய் தான் காரணம், அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பொய்யான நபர்களை கைது செய்யாமல், உண்மையான நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்தனர்.

போராட்டத்தில் பாஜகவினருக்கும் , காவல்துறைக்கும் இடையே வாக்குவாதம் - திருச்சியில் பரபரப்பு

மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி வருகிற 25-ந் தேதி முதல் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த போவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் துணை தாசில்தாரை தாக்கியதாக கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்த தேவஆசீர்வாதம், காஜாமலையை சேர்ந்த சுப்பிரமணி, ரெங்கநாதன் உள்ளிட்டோரை ஏற்கனவே கைதுசெய்து இருந்த நிலையில், நேற்று முன்தினம் காஜாமலை பகுதியை சேர்ந்த அசன், சையத்ஜாகீர்உசேன், ஷேக்மொய்தீன், காட்டூரை சேர்ந்த முத்துப்பாண்டி, மாடசாமி ஆகிய 8 பேரை கைது செய்தனர். இந்நிலையில் திருச்சி மாவட்ட பாஜக தலைவர் ராஜசேகர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது போராட்டத்திற்கு அனுமதி இல்லை என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பாஜக நிர்வாகிகளுக்கும், காவல்துறைக்கு வாக்குவாதம் நடைபெற்றது. பின்பு 30 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு போராட்டம் நடத்தாமல் பாஜவினர் கலைந்து சென்றனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
IND vs SA T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா..வித்தியாசமான ஆடும் 11ல் களம் இறங்கிய இந்தியா!
IND vs SA T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா..வித்தியாசமான ஆடும் 11ல் களம் இறங்கிய இந்தியா!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
"இந்தியாவுக்கு தகுதி இருக்கு" புகழ்ந்து தள்ளிய ரஷிய அதிபர் புதின்.. மிரண்ட உலக நாடுகள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Seeman | நாதக சீமானுக்கு செக்! விஜய் எடுத்த அதிரடி முடிவு! தவெகவினர் மரணகலாய்Vijay Thiruma meeting | ஒரே மேடையில் விஜய், திருமா! கடுப்பில் விசிக சீனியர்கள்!ஆதவ் அர்ஜூனா அடாவடி!TVK Vijay : வாக்கு தவறிய விஜய் மறந்துட்டாரா? தைரியம் இல்லையா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்Aadhav arjuna : ”திருமாவுக்கு அடுத்து நான் தான்” திட்டம் தீட்டும் ஆதவ்! கொந்தளிக்கும் விசிக சீனியர்ஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
IND vs SA T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா..வித்தியாசமான ஆடும் 11ல் களம் இறங்கிய இந்தியா!
IND vs SA T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா..வித்தியாசமான ஆடும் 11ல் களம் இறங்கிய இந்தியா!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
"இந்தியாவுக்கு தகுதி இருக்கு" புகழ்ந்து தள்ளிய ரஷிய அதிபர் புதின்.. மிரண்ட உலக நாடுகள்!
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... நூதன மோசடி: எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... நூதன மோசடி: எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்
TNPSC Results: அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி; 50 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
TNPSC Results: அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி; 50 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
Chennai Airport: பரபரப்பான சென்னை விமான நிலையம்.. உயிர் தப்பிய பயணிகள் - என்ன நடந்தது?
பரபரப்பான சென்னை விமான நிலையம்.. உயிர் தப்பிய பயணிகள் - என்ன நடந்தது?
Embed widget