மேலும் அறிய

திருச்சி மத்திய மண்டலத்தில் 1,383 பிடிவாரண்ட் நிறைவேற்றம் - ஐஜி கார்த்திக்கேயன்

திருச்சி மத்திய மண்டலத்தில் ஒரே வாரத்தில் 1,383 பிடிவாரண்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. 28 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி மத்திய மண்டலத்தில் கடந்த ஓராண்டாக திருட்டு, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து அதிக அளவில் நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்தது. இவற்றை தடுக்க காவல்துறையின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவந்தனர். மேலும் தொடர் குற்றசம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில், குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜர் ஆகாமல் ஏராளமான ரவுடிகள், குற்றவாளிகள் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்தனர். இவர்களை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து இருந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை பிடிக்க கடந்த 1-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை ஒரு வாரம் சிறப்பு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதில், மத்திய மண்டலம் முழுவதுமாக மொத்தம் 1,383 பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட ரவுடிகள் மற்றும் குற்றவாளிகள் பிடிக்கப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் திருச்சியில் 77 பிடிவாரண்டு, புதுக்கோட்டையில் 122, கரூரில் 48, பெரம்பலூரில் 50, அரியலூரில் 266 பிடிவாரண்டும், தஞ்சாவூரில் 308, திருவாரூரில் 303, நாகப்பட்டினத்தில் 37, மயிலாடுதுறையில் 102-ம் அடங்கும். 

குறிப்பாக செக் மோசடி வழக்குகளில் 102 பிடிவாரண்டு, ஜாமீனில் விடுவிக்கக்கூடிய வழக்குகளில் 10 பிடிவாரண்டு நிறைவேற்றப்பட்டுள்ளன. அத்துடன் 40 ரவுடிகள் மீது இருந்த பிடிவாரண்டு நிறைவேற்றப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் கொலை, போக்சோ வழக்குகள் மற்றும் போதை பொருள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய 28 குற்றவாளிகள் கடந்த 7 நாட்களில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் மத்திய மண்டலத்தில் ரவுடிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கையில், 114 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 149 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ரவுடிகளின் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, கட்ட பஞ்சாயத்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களின் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thaipusam 2025: கந்தனுக்கு அரோகரா! தைப்பூசம் இன்று கோலாகல கொண்டாட்டம்! லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
Thaipusam 2025: கந்தனுக்கு அரோகரா! தைப்பூசம் இன்று கோலாகல கொண்டாட்டம்! லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
Hajj 2025 Rules: வந்தது உத்தரவு..! இனி குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது, ஹஜ் பயணத்திற்கு புதிய கட்டுப்பாடுகள்
Hajj 2025 Rules: வந்தது உத்தரவு..! இனி குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது, ஹஜ் பயணத்திற்கு புதிய கட்டுப்பாடுகள்
Bus Accident: கோர விபத்து..! கவிழ்ந்த பேருந்து, எடுக்க எடுக்க கிடைத்த பிணங்கள் - 51 சடலங்கள் கண்டெடுப்பு
Bus Accident: கோர விபத்து..! கவிழ்ந்த பேருந்து, எடுக்க எடுக்க கிடைத்த பிணங்கள் - 51 சடலங்கள் கண்டெடுப்பு
Seeman:
Seeman: "நான் புலி.. நான் பெரியாரை ஏத்துக்கவே மாட்டேன்" மீண்டும் சீறிய சீமான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

செங்கோட்டையனுக்கு வந்த PHONE CALL.. ஆட்டத்தை ஆரம்பித்த சசிகலா! எடப்பாடிக்கு ஆப்பு ரெடி!ஆதங்கத்தில் கோகுல இந்திரா! கடுப்பான ஜெயக்குமார்! என்ன செய்யப்போகிறார் EPS?Rajini fans vs TVK: விஜய் சுற்றுப்பயணம்” அழுகிய முட்டை வீசுவோம்” ரஜினி ரசிகர்கள் சதி திட்டம்?மணிப்பூர் CM திடீர் ராஜினாமா! காலைவாரிய பாஜக MLA-க்கள்! அமித்ஷாவுடன் மீட்டிங்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thaipusam 2025: கந்தனுக்கு அரோகரா! தைப்பூசம் இன்று கோலாகல கொண்டாட்டம்! லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
Thaipusam 2025: கந்தனுக்கு அரோகரா! தைப்பூசம் இன்று கோலாகல கொண்டாட்டம்! லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
Hajj 2025 Rules: வந்தது உத்தரவு..! இனி குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது, ஹஜ் பயணத்திற்கு புதிய கட்டுப்பாடுகள்
Hajj 2025 Rules: வந்தது உத்தரவு..! இனி குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது, ஹஜ் பயணத்திற்கு புதிய கட்டுப்பாடுகள்
Bus Accident: கோர விபத்து..! கவிழ்ந்த பேருந்து, எடுக்க எடுக்க கிடைத்த பிணங்கள் - 51 சடலங்கள் கண்டெடுப்பு
Bus Accident: கோர விபத்து..! கவிழ்ந்த பேருந்து, எடுக்க எடுக்க கிடைத்த பிணங்கள் - 51 சடலங்கள் கண்டெடுப்பு
Seeman:
Seeman: "நான் புலி.. நான் பெரியாரை ஏத்துக்கவே மாட்டேன்" மீண்டும் சீறிய சீமான்
Ind vs Eng 3rd Odi : ஃபார்முக்காக போராடும் கோலி! அணிக்கு திரும்பும் பண்ட்? 3வது ஒரு நாள் போட்டி பிளேயிங் 11 எப்படி இருக்கும்?
Ind vs Eng 3rd Odi : ஃபார்முக்காக போராடும் கோலி! அணிக்கு திரும்பும் பண்ட்? 3வது ஒரு நாள் போட்டி பிளேயிங் 11 எப்படி இருக்கும்?
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
Minister Raghupathi on EPS: கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
Embed widget