திருச்சி தேசிய சட்டப் பள்ளியில் குளிர்பானத்தில் சிறுநீர் கலந்த விவகாரம் - 2 மாணவர்கள் சஸ்பென்ட்
திருச்சி தேசிய சட்டப் பள்ளியில் சக மாணவருக்கு குளிர்பானத்தில் சிறுநீர் கலந்த விவகாரம் 2 மாணவர்களை சஸ்பென்ட செய்து பல்கலை., நிர்வாகம் நடவடிக்கை.
திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைகழகம் அமைந்துள்ளது. இங்கு, இளங்கலை சட்டப் படிப்பு இறுதியாண்டு படிக்கும் பட்டியலின மாணவரும் அவருடன் பயிலும் 2 மாணவர்களும் தோழர்களாக இருந்து வந்துள்ளனர். கடந்த ஜனவரி 6ஆம் தேதி மாலை முதல், பாதிக்கப்பட்ட பட்டியல் இன மாணவரும் அவருடன் இளநிலை இறுதியாண்டு சட்டப்படிப்பு படிக்கும் வேறு சில மாணவர்களும் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் சந்தித்துள்ளனர். அவர்கள் தங்களின் தேர்வுகள் தொடர்பாக சந்தித்து பேசிக் கொண்டிருந்ததாக கூறபடுகிறது. இந்நிலையில் இரவு 12 மணி அளவில் சக மாணவருக்கு குளிபானத்தில் சிறுநீர் கலந்து கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பட்டியல் இன மாணவர் ஜனவரி 10ஆம் தேதி பல்கலைக்கழக பதிவாளர் பாலகிருஷ்ணனிடம் பாதிக்கப்பட்ட மாணவர், தன்னுடன் படிக்கும் 2 மாணவர்கள் மீது புகார் கொடுத்துள்ளார். பாதிக்கபட்ட மாணவருடைய புகாரின்படி, பாதிக்கப்பட்ட பட்டியல் இன மாணவரும், மற்ற மாணவர்களும் இணைந்து தங்களது படிப்பு குறித்து ஆலோசித்துக் கொண்டு இருந்ததாக கூறபடுகிறது. அப்போது, மாணவர்கள் குளிர்பானம் அருந்தியுள்ளனர். அதில், பாதிக்கப்பட்ட பட்டியல் இன மாணவர் குடித்த குளிர்பானத்தில் சிறுநீர் கலந்து கொடுக்கப்பட்டதாகவும், அதைத் தாம் தெரியாமல் குடித்துவிட்டதாகவும் மாணவர் தனது புகாரில் கூறியுள்ளார்.
மேலும், புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்த பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பாலகிருஷ்ணன் கூறிய தகவல், விதிகளின்படி மாணவர் புகார் வந்தவுடனேயே, அது பல்கலைக்கழக துணை வேந்தருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் அதே நாளில், குற்றம்சாட்டப்பட்ட இரண்டு மாணவர்களையும் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். துணை வேந்தர் அமைத்துள்ள 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவில் பல்கலையின் உதவிப் பேராசிரயர்கள் உள்ளனர். அவர்கள், ஜனவரி 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை, பாதிக்கப்பட்ட மாணவர், குற்றம் சாட்டப்பட்ட மாணவர்கள், இருப்பிட விடுதி காப்பாளர் மற்றும் உடன் படிக்கும் மாணவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் பல்கலைகழக நிர்வாகம் நடவடிக்கை:
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 2 மாணவர்களை ஓராண்டுக்கு தடைவிதித்து பல்கலைக்கழக ராகிங் குழு பரிந்துரை செய்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர் சட்ட பல்கலைக்கழக துணை வேந்தர் நாகராஜ் பதிவாளர் பாலகிருஷ்ணன் இருவரிடம் 10 ஆம் தேதி புகார் அளித்தார். அதன் பெயரில் இது தொடர்பாக விசாரிக்க உதவி பேராசிரியர் தலைமையிலான விசாரணை குழு துணைவேந்தர் மற்றும் பதிவாளர் இடம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. விசாரணையில் ராக்கிங் செய்தது உறுதி செய்யப்பட்டது. சம்பந்தப்பட்ட இரண்டு மாணவர்களின் மீது துறை ரீதியாகவும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க இந்த குழு பரிந்துரைத்துள்ளது. பதிவாளர் பாலகிருஷ்ணன் ராம்ஜி நகர் போலீசில் சம்பந்தப்பட்ட 2 மாணவர் மீது புகார் அளித்தார். ராம்ஜிநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இரண்டு மாணவர்களும் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் துணைவேந்தர் தலைமையிலான 9 பேர் கொண்ட ராக்கிங் தடுப்பு குழு கூட்டம் பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது.
இதில் ராகிங்கில் ஈடுபட்ட 2 மாணவர்களும் நடப்பு கல்வி ஆண்டில் (2023 -2024) பத்தாவது பருவத் தேர்விற்க்கு எழுதவும் படிக்கவும் தடை விதித்துள்ளது. அதற்கு பதிலாக பத்தாவது பருவத்தை அடுத்த ஆண்டு (2024- 2025) ஆம் ஆண்டு படிக்கலாம் என பரிந்துரைத்துள்ளது.
பரிந்துரையை பல்கலை நிர்வாக குழு அடுத்த வாரம் இறுதி செய்யும் என பல்கலைக்கழக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது.