மேலும் அறிய

திருச்சி முக்கொம்பு பழைய தடுப்பணையை இடிக்கும் பணி தொடங்கியது

முக்கொம்பு காவிரி தடுப்பணை கதவணைகள் புனரமைக்கும் பணி மற்றும் கொள்ளிடம் மேலணையில் உள்ள தற்காலிக தடுப்பணையை இடிக்கும் பணி தொடங்கியது.

கொள்ளிடம் தடுப்பணை 1836ம் ஆண்டு வெள்ளையர்களால் கட்டப்பட்டது. 45 மதகுகள் ஒரு பிரிவாகவும், 10 மதகுகள் இன்னொரு பிரிவாகவும் மொத்தம் 55 மதகுகளுடன் இது உருவாக்கப்பட்டது. காவிரியில் மழை காலங்களில் மிக அதிக வெள்ளம் வரும்போது கொள்ளிடத்தின் வழியாக உபரிநீரை வெளியேற்றவும், மற்ற காலங்களில் பாசனம் மற்றும் குடிநீருக்காவும் இந்த திட்டத்தை உருவாக்கினார்கள். கடந்த 2018 ஆம் ஆண்டு கர்நாடகத்திலும், கேரளத்திலும் வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் அங்குள்ள அணைகள் நிரம்பி வழிந்ததால் உபரிநீர் முழுவதும் மேட்டூர் அணைக்கு விடப்பட்டது. மேட்டூர் அணை கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ம் தேதி நிரம்பியது. அதன் பிறகும் வினாடிக்கு 2 லட்சம் கனஅடிக்கு மேல் கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் வந்தது. அதை அப்படியே மேட்டூர் அணையில் இருந்து திறந்து விட்டனர். இந்நிலையில் பவானி, அமராவதி அணைகளில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டதால் காவிரியில்வினாடிக்கு 2.4 லட்சம் கனஅடி சென்றது. இந்த வெள்ளத்தை காவிரி தாங்காது என்பதால் காவிரியில் வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியை மட்டும் வெளியேற்றிவிட்டு 2.1 லட்சம் கனஅடி தண்ணீரை கொள்ளிடம் வழியாக வெளியேற்றினர்.

தொடர்ந்து ஒருவாரத்திற்கு மேல் 1 லட்சம் கனஅடிக்கு மேல் கொள்ளிடம் வழியாக வெளியேற்றப்பட்டதால் கடந்த ஆண்டு இதே நாளில்(22.8.2018) இரவு 8 மணி அளவில் கொள்ளிடம் தடுப்பணை உடைந்து போனது. ஆனால் உடைப்பு ஏற்பட்டபோது கொள்ளிடம் வழியாக வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி மட்டுமே தண்ணீர் சென்றது. 45 மதகுகள் கொண்ட தடுப்பணையில் 5 முதல் 13 வரை உள்ள மதகுகள் வெள்ளத்தில் அடைத்து செல்லப்பட்டது. இதனால் விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காதோ என்ற  அச்சமான சூழ்நிலையில் இருந்தார்கள்.

திருச்சி முக்கொம்பு பழைய தடுப்பணையை இடிக்கும் பணி தொடங்கியது

இதனை தொடர்ந்து பழைய அணையை பலப்படுத்தி பாதுகாப்பாக வைத்திருந்தாலும், புதிய கதவணையும் ரூ.387.60 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டது. இந்தச்சூழலில், கர்நாடகத்தில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது பெய்துவரும் மழையால் கிடைக்கும் உபரிநீர் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடும் தருணங்களில் கொள்ளிடத்தில் பிரித்து அனுப்புவதில் தற்காலிக காப்பணை இடையூறாக உள்ளது. புதிய கதவணை இல்லாத தருணங்களில் பாதுகாப்பு அரணாக இருந்த தற்காலிக காப்பணையானது, புதிய கதவணை கட்டப்பட்ட பிறகு இடிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. ஏனெனில், சேதமடைந்த கதவணையில் ஷட்டர்கள் வழியாக தண்ணீரை வெளியேற்றலாம். ஆனால், சேதமடைந்த பகுதியில் மதகு எண் 4 முதல் 16 வரையில் கட்டப்பட்டுள்ள தாற்காலிக காப்பணையில் ஷட்டர்கள் கிடையாது. முழுவதும் கான்கீரீட் கட்டமைப்புதான். எனவே, வெள்ள நீரை தேக்கி வைத்து தேவையான தருணங்களில் வெளியேற்ற முடியாது. வெள்ளக் காலங்களில் காப்பணை இடையூறாவே உள்ளது. எனவே, இதனை அகற்றும் பணியை பொதுப்பணித்துறை அலுவலர்கள் திட்டமிட்டு அரசுக்கு பரிந்துரை செய்தனர். அரசின் ஒப்புதல் பெற்று, காப்பணை அகற்றும் பணி நேற்று தொடங்கியது.

திருச்சி முக்கொம்பு பழைய தடுப்பணையை இடிக்கும் பணி தொடங்கியது

இந்தாண்டு மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவதற்கு முன்பாக காவிரி கதவணையில் உள்ள மதகுகளில் பொருத்தப்பட்டுள்ள ஷட்டர்களையும் புனரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கதவணையில் உள்ள 41 கதவணைகளையும் புனரமைக்கும் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. முக்கொம்பு மேலணையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில், நீர்வளத் துறையின் திருச்சி ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் தமிழ்ச் செல்வன், ஆற்றுப்பாதுகாப்பு கோட்ட உதவி செயற்பொறியாளர் பி. முருகானந்தம், மேலணை உதவி பொறியாளர் பி. ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சிவகங்கை: Grinder App வலையில் சிக்கி இளைஞர் மீது கொடூர தாக்குதல்! கொள்ளையர்கள் கைது, அதிர்ச்சி தகவல்!
சிவகங்கை: Grinder App வலையில் சிக்கி இளைஞர் மீது கொடூர தாக்குதல்! கொள்ளையர்கள் கைது, அதிர்ச்சி தகவல்!
DMK Election Manifesto: திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பிடிக்கும் பிரமாண்ட அறிவிப்பு!!! எகிறும் எதிர்பார்ப்பு
திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பிடிக்கும் பிரமாண்ட அறிவிப்பு!!! எகிறும் எதிர்பார்ப்பு
போக்சோ வழக்கில் அதிரடி தீர்ப்பு அளித்த திருச்சி கோர்ட்: கொத்தனாருக்கு ஆயுள் கால சிறை
போக்சோ வழக்கில் அதிரடி தீர்ப்பு அளித்த திருச்சி கோர்ட்: கொத்தனாருக்கு ஆயுள் கால சிறை
அக்னிபாத் திட்டத்தின் கீழ் இராணுவத்தில் சேர ஒரு சூப்பர் வாய்ப்பு.. ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியீடு- உடனே விண்ணப்பியுங்கள்!
அக்னிபாத் திட்டத்தின் கீழ் இராணுவத்தில் சேர ஒரு சூப்பர் வாய்ப்பு.. ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியீடு- உடனே விண்ணப்பியுங்கள்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AIADMK Candidates List: அதிமுக 3ம் கட்ட வேட்பாளர்களை அறிவித்த எடப்பாடி- ஸ்டாலின், உதயநிதிக்கு யார்? திரு.வி.க. நகர் சர்ப்ரைஸ்
AIADMK Candidates List: அதிமுக 3ம் கட்ட வேட்பாளர்களை அறிவித்த எடப்பாடி- ஸ்டாலின், உதயநிதிக்கு யார்? திரு.வி.க. நகர் சர்ப்ரைஸ்
Tamilnadu Round Up: தவெக வேட்பாளர்கள், 121 இடங்களில் மோதும் DMK & ADMK, ரூ.1.22 கோடி - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: தவெக வேட்பாளர்கள், 121 இடங்களில் மோதும் DMK & ADMK, ரூ.1.22 கோடி - தமிழ்நாட்டில் இதுவரை
TN Election 2026: சென்னையின் 16 தொகுதிகள் - திமுக Vs அதிமுக களமிறக்கிய வேட்பாளர்கள் யார்? BJP ஏமாற்றம்
TN Election 2026: சென்னையின் 16 தொகுதிகள் - திமுக Vs அதிமுக களமிறக்கிய வேட்பாளர்கள் யார்? BJP ஏமாற்றம்
US Iran War Gulf Targeted: எச்சரித்த ஈரான் அதிபர்; குவைத், துபாயை போட்டு சாத்திய ஈரான் ஏவுகணைகள்; தவிக்கும் அரபு நாடுகள்.!
எச்சரித்த ஈரான் அதிபர்; குவைத், துபாயை போட்டு சாத்திய ஈரான் ஏவுகணைகள்; தவிக்கும் அரபு நாடுகள்.!
USA Iran War: ”உள்ள வந்துருவிங்களா? நரகத்திற்கு வெல்கம்” ஈரான் அருகே குவியும் அமெரிக்க படைகள் - தெஹ்ரான் வார்னிங்
USA Iran War: ”உள்ள வந்துருவிங்களா? நரகத்திற்கு வெல்கம்” ஈரான் அருகே குவியும் அமெரிக்க படைகள் - தெஹ்ரான் வார்னிங்
Toyota Fortuner 2026: அப்க்ரேடட் ராஜாவாக வரும் டொயோட்டா ஃபார்ட்சுனர் - உள்ளே, வெளியே - குவியும் மாற்றங்கள்
Toyota Fortuner 2026: அப்க்ரேடட் ராஜாவாக வரும் டொயோட்டா ஃபார்ட்சுனர் - உள்ளே, வெளியே - குவியும் மாற்றங்கள்
US Report on Pak. Terror: இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத குழுக்களுக்கு பாக். இன்னும் ஆதரவு; வெளியான அமெரிக்க அதிர்ச்சி ரிப்போர்ட்
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத குழுக்களுக்கு பாக். இன்னும் ஆதரவு; வெளியான அமெரிக்க அதிர்ச்சி ரிப்போர்ட்
MI Vs KKR: கடப்பாரை Vs வாரியர்ஸ் - மும்பையை தொடரும் 13 வருட சாபம்? பாண்ட்யா டீம் ரூ.25 கோடியை சமாளிக்குமா?
MI Vs KKR: கடப்பாரை Vs வாரியர்ஸ் - மும்பையை தொடரும் 13 வருட சாபம்? பாண்ட்யா டீம் ரூ.25 கோடியை சமாளிக்குமா?
Embed widget