மேலும் அறிய

Toyota Fortuner 2026: அப்க்ரேடட் ராஜாவாக வரும் டொயோட்டா ஃபார்ட்சுனர் - உள்ளே, வெளியே - குவியும் மாற்றங்கள்

New Gen Toyota Fortuner 2026: புதிய தலைமுறை டொயோட்டா ஃபார்ட்சுனரில் உள்ளே தொடங்கி வெளியே வரை வழங்கப்பட்டுள்ள, அப்டேட்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

New Gen Toyota Fortuner 2026: புதிய தலைமுறை டொயோட்டா ஃபார்ட்சுனரில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

புதிய தலைமுறை டொயோட்டா ஃபார்ட்சுனர்

இந்திய கார் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே, டொயோட்டாவின் ஃபார்ட்சுனர் கார் மாடல் அதன் வலிமையான கட்டமைப்பு மற்றும் கம்பீரமான சாலை இருப்பிற்காக வாடிக்கையாளர்களால் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இந்த கார் மாடலை முற்றிலுமாக மேம்படுத்தி புதிய தலைமுறை எடிஷனாக, நடப்பாண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சந்தைப்படுத்த டொயோட்டா நிறுவனம் தயாராகி வருகிறது. இதில் வழங்கப்பட்டு மிகப்பெரிய மாற்றங்கள் வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமையும் என கூறப்படுகிறது.

டொயோட்டா ஃபார்ட்சுனர் 2026 - கட்டமைப்பில் மாற்றம்

டொயோட்டா ஃபார்ட்சுனரின் தற்போதைய எடிஷனில் பின்பற்றப்படும் கட்டமைப்பில் இருந்து வெளியேறி, ஹிலக்ஸில் பயன்படுத்தப்படும் மிகவும் மேம்படுத்தப்பட்ட TNGA - F லேடர் ப்ளாட்ஃபார்ம் புதிய ஃபார்ட்சுனரில் பயன்படுத்தப்பட உள்ளதாம். புதிய கட்டமைப்பின் பயன்பாடானது காருக்கு கட்டமைப்பு அடிப்படையில் கூடுதல் வலிமையுடன் பயணிக்கும் தன்மை மற்றும் ஆஃப் - ரோட் செயல்திறன் உள்ளிட்டவற்றை மேம்படுத்தி கொடுக்கும் என கூறப்படுகிறது. 7 சீட்டர் எஸ்யுவி ஆனது புதிய எடிஷனில் உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் அடிப்படையிலும் மிகப்பெரிய அப்க்ரேட்களை பெற உள்ளதாம்.

Toyota Fortuner 2026: அப்க்ரேடட் ராஜாவாக வரும் டொயோட்டா ஃபார்ட்சுனர் - உள்ளே, வெளியே - குவியும் மாற்றங்கள்

டொயோட்டா ஃபார்ட்சுனர் 2026 - ஓவர் தி ஏர் அப்டேட்ஸ்

உட்புறத்தில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட டேஷ்போர்டானது இரண்டு பெரிய 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன்களை கொண்டுள்ளது. ஒன்று இன்ஃபோடெயின்மெண்டிற்காகவும், மற்றொன்று ட்ரைவர் இன்ஃபர்மேஷனுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. அவற்றுடன் கனெக்டட் டெக், ஓவர் தி ஏர் அப்டேட்கள் மற்றும் 360 டிகிரி கேமரா சிஸ்டமும் சேர்க்கப்படலாம்.

டொயோட்டா ஃபார்ட்சுனர் 2026 - வெளிப்புற அப்டேட்கள்

வெளிப்புறத்தில் ப்ராண்டின் சர்வதேச கார் மாடல்களின் தாக்கத்தை கொண்டு வெளிப்புற வடிவமைப்பானது, மிகவும் தீவிரமான மற்றும் மேம்படுத்தப்பட்ட தோற்றத்தினை பெறும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆரம்பகட்ட தகவல்களின்படி, நேர்த்தியான LED முகப்பு விளக்குகள், அகலமான ல்ரில் மற்றும் முன்புறம் மற்றும் பின்புறத்தில் செதுக்கப்பட்டதைப் போன்ற பம்பர் அமைப்புடன் கூடிய கூர்மையான முன்பகுதியைக் காட்டுகின்றன. இது புதிதாக வடிவமைக்கப்பட்ட அலாய் வீல்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பின்புறத்திலும் புதிய அணுகுமுறை காணப்படலாம். டெயில் லேம்ப்களை இணைக்கும் முழு அகல LED லைட் பார் மற்றும் டெயில்கேட்டின் குறுக்கே ஃபார்ட்சுனர் பெயர் பொறிக்கப்பட்டு இருக்கலாம். மறுவடிவமைக்கப்பட்ட பில்லர்கள், தடிமனான பாடி க்ளாடிங் மற்றும் மேலும் தோற்றத்தை மேம்படுத்தி காட்டும் கேரக்டர் லைன்கள் போன்ற பிற மாற்றங்களும் இதில் அடங்கும். பனோரமிக் சன்ரூஃப், மேம்படுத்தப்பட்ட க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் ADAS தொகுப்பு போன்ற அம்சங்களை டொயோட்டா வழங்க வாய்ப்புள்ளது.


Toyota Fortuner 2026: அப்க்ரேடட் ராஜாவாக வரும் டொயோட்டா ஃபார்ட்சுனர் - உள்ளே, வெளியே - குவியும் மாற்றங்கள்

டொயோட்டா ஃபார்ட்சுனர் 2026 - இன்ஜினில் மாற்றம்

புதிய தலைமுறை ஃபார்ட்சுனரில் இன்ஜின் அடிப்படையில் எந்த மாற்றமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி,  2.7 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 2.8 லிட்டர் டீசல் இன்ஜின் அப்படியே தொடரக்கூடும். பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 164bhp சக்தியையும் 245Nm டார்க்கையும்,  டீசல் இன்ஜின் 201bhp சக்தியையும் 420Nm (MT)/500Nm (AT) டார்க்கையும் வழங்குகிறது. ஃபார்ச்சூனர் நியோ ட்ரைவ், 2.8 லிட்டர், 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு டீசல் மைல்ட் ஹைப்ரிட் பவர்டிரெய்னைத் தொடர்ந்து தக்கவைக்கக் கூடும். தற்போதைய மாடலைப் போலவே, இந்த இன்ஜினும் 6-ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கலாம்.

டொயோட்டா ஃபார்ட்சுனர் 2026 - வெளியீடு, விலை

ஜப்பானிய வாகனத் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா, புதிய தலைமுறை ஃபார்ட்சுனருக்கு இதுவரை அதிகாரப்பூர்வமான வெளியீட்டுத் தேதியை அறிவிக்கவில்லை. உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டவுடன், உள்நாட்டில் அந்த காருக்கான பிரபலத்தைக் கருத்தில் கொண்டு, புதிய ஃபார்ட்சுனர் விரைவில் இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய எடிஷனின் ரூ.34.16 லட்சம் தொடங்கி ரூ.49.59 லட்சம் வரை நீளும் விலை வரம்பானது, புதிய எடிஷனுக்கு சற்றே அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Ather Konarc Electric Scooter: 120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Maruti Suzuki Celerio on EMI: மைலேஜ்ல இத அடிச்சுக்க காரே கிடையாது.! மாருதி செலரியோ வாங்க முன்பணம், EMI எவ்வளவு.? தெரிஞ்சுக்கோங்க
மைலேஜ்ல இத அடிச்சுக்க காரே கிடையாது.! மாருதி செலரியோ வாங்க முன்பணம், EMI எவ்வளவு.? தெரிஞ்சுக்கோங்க

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Ather Konarc Electric Scooter: 120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
Tasmac liquor online : மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்.? விளக்க வீடியோ இதோ..
மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்- எப்படி தெரியுமா.?
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Embed widget