மேலும் அறிய

சட்டம் படிக்கும் மாணவர் குடித்த குளிர்பானத்தில் சிறுநீர் கலப்பா? திருச்சியில் கொடூரம்

மாணவர் புகார் தொடர்பாக விசாரணை நடத்திய மூன்று பேர் கொண்ட குழுவினர், வரும் 18ஆம் தேதி அல்லது 19ஆம் தேதி அறிக்கையை சமர்ப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைகழகம் அமைந்துள்ளது. இங்கு, இளங்கலை சட்டப் படிப்பு இறுதியாண்டு படிக்கும் பட்டியலின மாணவரும் அவருடன் பயிலும் 2 மாணவர்களும் தோழர்களாக இருந்து வந்துள்ளனர். கடந்த ஜனவரி 6ஆம் தேதி மாலை முதல், பாதிக்கப்பட்ட பட்டியல் இன மாணவரும் அவருடன் இளநிலை இறுதியாண்டு சட்டப்படிப்பு படிக்கும் வேறு சில மாணவர்களும் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் சந்தித்துள்ளனர்.

குளிர்பானத்தில் சிறுநீர் கலப்பு:

அவர்கள் தங்களின் தேர்வுகள் தொடர்பாக சந்தித்து பேசிக் கொண்டிருந்ததாகப் புகாரில் கூறியுள்ளார். பல்கலைக்கழக நிர்வாகத்தின்படி, வழக்கமான தேர்வுகள் முடிவடைந்தன, ஜனவரி 7ஆம் தேதி முதல் மறுதேர்வுகள் நடந்துள்ளது. மேலும், பாதிக்கபட்ட மாணவருடைய புகாரின்படி, பாதிக்கப்பட்ட பட்டியல் இன மாணவரும், மற்ற மாணவர்களும் இணைந்து தங்களது படிப்பு குறித்து ஆலோசித்துக் கொண்டு இருந்ததாக கூறபடுகிறது. அப்போது, மாணவர்கள் குளிர்பானம் அருந்தியுள்ளனர். அதில், பாதிக்கப்பட்ட பட்டியல் இன மாணவர் குடித்த குளிர்பானத்தில் சிறுநீர் கலந்து கொடுக்கப்பட்டதாகவும், அதைத் தாம் தெரியாமல் குடித்துவிட்டதாகவும் மாணவர் தனது புகாரில் கூறியுள்ளார்.

சட்டம் படிக்கும் மாணவர் குடித்த குளிர்பானத்தில் சிறுநீர் கலப்பா? திருச்சியில் கொடூரம்

மேலும், சம்பவம் ஜனவரி 6ஆம் தேதி இரவு சுமார் 12 மணியளவில் நடந்ததாக மாணவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பட்டியல் இன மாணவர் ஜனவரி 10ஆம் தேதி பல்கலைக்கழக பதிவாளர் பாலகிருஷ்ணனிடம் புகார் மனுவைக் கொடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவர், தன்னுடன் படிக்கும் 2 மாணவர்கள் மீது புகார் கொடுத்துள்ளார்.

புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்த பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பாலகிருஷ்ணன் கூறிய தகவல், விதிகளின்படி மாணவர் புகார் வந்தவுடனேயே, அது பல்கலைக்கழக துணை வேந்தருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் அதே நாளில், குற்றம்சாட்டப்பட்ட இரண்டு மாணவர்களையும் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். துணை வேந்தர் அமைத்துள்ள 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவில் பல்கலையின் உதவிப் பேராசிரயர்கள் உள்ளனர். அவர்கள், ஜனவரி 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை, பாதிக்கப்பட்ட மாணவர், குற்றம் சாட்டப்பட்ட மாணவர்கள், இருப்பிட விடுதி காப்பாளர் மற்றும் உடன் படிக்கும் மாணவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

சட்டம் படிக்கும் மாணவர் குடித்த குளிர்பானத்தில் சிறுநீர் கலப்பா? திருச்சியில் கொடூரம்

இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழகம் அமைத்த குழு விசாரணை நடத்திக்கொண்டிருக்கும்போதே பாதிக்கப்பட்ட பட்டியலின மாணவர் புகாரை திரும்பப்பெற முயன்றுள்ளார். ஆனால், ராகிங் தொடர்பான சட்ட விதிகளின்படி மாணவர் புகாரை திரும்பப் பெற முடியாது என்றார் பல்கலைக்கழக பதிவாளர் பாலகிருஷ்ணன் தகவல் தெரிவித்தார்.

மாணவர் புகார் தொடர்பாக விசாரணை நடத்திய 3 பேர் கொண்ட குழுவினர், வரும் 18ஆம் தேதி அல்லது 19ஆம் தேதி அறிக்கையை சமர்ப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டவிதிகளின் படி, அதில் மாணவர் துன்புறுத்தப்பட்டுள்ளது உறுதியாகும்பட்சத்தில், அறிக்கை கிடைத்த 24 மணிநேரத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் போலீசில் புகார் தெரிவிக்க வேண்டும். மாணவர் புகார் கொடுக்க தாமதித்ததற்கான காரணம் மற்றும் தற்போது புகாரை திரும்பப் பெறுவதற்கான காரணம் குறித்து விசாரணை நடந்துள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பில் தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
Embed widget