மேலும் அறிய

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு - தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 44 பேர் திருச்சிக்கு வருகை

கொள்ளிடக் கரைகளில் தடுப்புகள் ஏற்படுத்த தயார் நிலையில் 500-க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளை கொண்டு வந்து கரைகளில் அடுக்கியுள்ளனர்.

திருச்சி காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து 44 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் திருச்சிக்கு வந்தனர். அவர்கள் திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் தயார் நிலையில் உள்ளனர். அவர்களை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் நேரில் சந்தித்து, திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார். மேலும் திருச்சி ஸ்ரீரங்கம் கருடமண்டபம் அருகில் காவிரி ஆற்றின் கரையில் வசிப்பவர்களிடம் வெள்ள அபாய எச்சரிக்கையினை எடுத்துக்கூறி பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து திருச்சி மாநகரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் காரணமாக கரையோர மற்றும் தாழ்வான தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்கவும், பொதுமக்களை வெள்ளப்பகுதியில் இருந்து உடனடியாக பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து வந்து தங்க வைப்பதற்கும்  காவல்துறையை சேர்ந்த 1 இன்ஸ்பெக்டர், 4 சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 80 போலீசார் கொண்ட திருச்சி மாநகர காவல் பேரிடர் மேலாண்மை குழு அமைக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு - தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 44 பேர் திருச்சிக்கு  வருகை

மேலும் இந்த குழுவினர் தக்க பாதுகாப்பு உபகரணங்களுடன் ஸ்ரீரங்கம் மற்றும் கோட்டை பகுதியில் தயாராக இருக்க வேண்டும் என்றும், நீச்சல் தெரிந்த போலீசார் பாதுகாப்பு பணிக்கு நியமித்தும், பேரிடர் மீட்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் மிகவும் கவனமுடன் மீட்பு பணியில் ஈடுபட வேண்டும் என்றும் மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேன் அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பாக  கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, லால்குடியை அடுத்த கூகூர் மற்றும் இடையாற்றுமங்கலம், அன்பில், செங்கரையூர், ஆனந்திமேடு ஆகிய கொள்ளிடக் கரையோர பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக மணல் மூட்டைகள் அடுக்கப்பட உள்ளன. இதையொட்டி லால்குடி நீர்வளத்துறை உதவி பொறியாளர் அலுவலகம் முன்பு நீர்வளத்துறை ஊழியர்கள் மணல் மூட்டைகளை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதில் லால்குடி நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் முருகானந்தம், உதவி செயற்பொறியாளர் கூடுதல் பொறுப்பு ராஜா ஆகியோரின் ஆலோசனைப்படி பாசன உதவியாளர்கள் மற்றும் ஊழியர்கள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு - தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 44 பேர் திருச்சிக்கு  வருகை

இதேபோல் புள்ளம்பாடி ஒன்றியம் திண்ணகுளம் மற்றும் விரகாலூர் கிராமங்களில் கொள்ளிட கரையோரங்களில் நீரின் அளவை லால்குடி கோட்டாட்சியர் வைத்தியநாதன், தாசில்தார் செசிலினாசுகந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், மாதவன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் கரையோரங்களில் கூடுதல் வெள்ளம் ஏற்பட்டால் தடுப்பு நடவடிக்கைகள், பொதுமக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தனர். இந்நிலையில் கொள்ளிடக் கரைகளில் தடுப்புகள் ஏற்படுத்த தயார் நிலையில் 500-க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளை கொண்டு வந்து கரைகளில் அடுக்கியுள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்
அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்
"ரூ 5,000 கொடுக்கிறோம்.. நம்பி ஓட்டு போடுங்க" முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அதிரடி!
Good Bad Ugly Teaser: தெறிக்குதே.. அஜித்தின் குட் பேட் அக்லி டீசர் எப்போ ரிலீஸ் தெரியுமா?
Good Bad Ugly Teaser: தெறிக்குதே.. அஜித்தின் குட் பேட் அக்லி டீசர் எப்போ ரிலீஸ் தெரியுமா?
Mayiladuthurai Power Shutdown (26.02.2025): மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை - இதுல உங்க ஊர் இருக்கா பாருங்க?
Mayiladuthurai Power Shutdown (26.02.2025): மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை - இதுல உங்க ஊர் இருக்கா பாருங்க?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்
அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்
"ரூ 5,000 கொடுக்கிறோம்.. நம்பி ஓட்டு போடுங்க" முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அதிரடி!
Good Bad Ugly Teaser: தெறிக்குதே.. அஜித்தின் குட் பேட் அக்லி டீசர் எப்போ ரிலீஸ் தெரியுமா?
Good Bad Ugly Teaser: தெறிக்குதே.. அஜித்தின் குட் பேட் அக்லி டீசர் எப்போ ரிலீஸ் தெரியுமா?
Mayiladuthurai Power Shutdown (26.02.2025): மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை - இதுல உங்க ஊர் இருக்கா பாருங்க?
Mayiladuthurai Power Shutdown (26.02.2025): மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை - இதுல உங்க ஊர் இருக்கா பாருங்க?
"இன்குலாப் ஜிந்தாபாத்" 7ஆவது மாடியில் இருந்து குதித்த நபர்.. தலைமை செயலகத்தில் பரபரப்பு!
அரசு தற்காலிக பணியாளர்களுக்கு பறிபோகிறது வேலை! நீதிமன்ற உத்தரவால் பெரும் பரபரப்பு
அரசு தற்காலிக பணியாளர்களுக்கு பறிபோகிறது வேலை! நீதிமன்ற உத்தரவால் பெரும் பரபரப்பு
AUS vs SA: கைவிடப்பட்ட ஆஸ்திரேலியா -தெ. ஆப்பிரிக்கா போட்டி! அரையிறுதிக்குப் போகப்போவது யார்?
AUS vs SA: கைவிடப்பட்ட ஆஸ்திரேலியா -தெ. ஆப்பிரிக்கா போட்டி! அரையிறுதிக்குப் போகப்போவது யார்?
பாட்டி, தம்பி, காதலி.. ஐவர் கொடூர கொலை.. வேட்டை ஆடிய இளைஞர்.. கேரளாவை அதிரவிட்ட சம்பவம்!
பாட்டி, தம்பி, காதலி.. ஐவர் கொடூர கொலை.. வேட்டை ஆடிய இளைஞர்.. கேரளாவை அதிரவிட்ட சம்பவம்!
Embed widget