மேலும் அறிய

இனி LLR-ரை இ-சேவை மையங்களிலும் பதிவு பண்ணலாம் - கட்டணம் எவ்வளவு தெரியுமா..?

இனி இ-சேவை மையங்கள் மூலமாகவும் LLR (வாகனங்களை ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம்) பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தகவல்

தமிழ்நாட்டில் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டுவதற்கு, ஓட்டுனர் உரிமை கட்டாயம் எடுக்க வேண்டும்.  அதே சமயம் போக்குவரத்து விதிமுறைகளை நன்கு அறிந்திருக்க வேண்டும் என்ற விதிமுறைகளை தமிழ்நாடு அரசு கடைப்பிடித்து வருகிறது. இதில் கிராமப்புறங்களில் இருந்து ஓட்டுநர் உரிமம் பெற வேண்டும் என்றால், அருகில் உள்ள நகர்புறங்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் பல்வேறு இன்னல்களை பொதுமக்கள் சந்தித்து வருவதாக தொடர்ந்து புகார்கள் வருகிறது. அதே சமயம் தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளி மற்றும் நெட் செண்டர்களில் அதிக விலைக்கு ஓட்டுனர் உரிமம் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. அது மட்டுமல்லாமல் தொடர்ந்து பொதுமக்களிடையே ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் புகார்கள் வந்ததன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு பல்வேறு கட்ட ஆலோசனைக்கு பிறகு இந்த முடிவை அறிவித்துள்ளது. 

இனி LLR-ரை  இ-சேவை மையங்களிலும் பதிவு பண்ணலாம் - கட்டணம் எவ்வளவு தெரியுமா..?

இ-சேவை மையங்களில் LLR பதிவு பண்ணலாம்..

தற்போது LLR (வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம்)பெற ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளையும், இடைத்தரகர்களையும், தனியார் Browsing Centre களையும் பொதுமக்கள் அனுகவேண்டிய நிலை உள்ளது. இதில் தேவையற்ற செலவு பொதுமக்களுக்கு ஏற்படுகிறது. மேலும் இந்த முறையில் வெளிப்படைத் தன்மையும் இல்லாமல் உள்ளது. மேலும் இந்த சேவைகளைப் பெறுவதற்கு பொதுமக்கள் அருகாமையில் உள்ள நகரங்களுக்கு வரவேண்டிய நிலை உள்ளது. இதனைத் தவிர்ப்பதற்காகவும், இது குறித்து எந்த வித புகார்களுக்கும் இடமளிக்காத வகையில் இதனை மேம்படுத்துவதற்கும், நடைமுறையில் உள்ள சிக்கல்களைக் களைவதற்கும், பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகாமையிலேயே இந்த சேவையை கொண்டு சேர்ப்பதற்கும், தமிழ்நாடு அரசு முடிவு செய்து உள்ளது.

அதனடிப்படையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படியும், தமிழ்நாடு போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் வழிகாட்டுதலின்படியும் இனி மாநிலம் முழுவதிலுமுள்ள 55,000 க்கும் அதிகமான இசேவை மையங்கள் மூலம் இந்த LLR (வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம்) பெற விண்ணப்பிக்கும் முறை (13.03.2024) முதல் நடைமுறைக்கு வந்தது. 

இனி LLR-ரை  இ-சேவை மையங்களிலும் பதிவு பண்ணலாம் - கட்டணம் எவ்வளவு தெரியுமா..?

இ-சேவை மையங்களில் கட்டணம் ரூ.60 செலுத்த வேண்டும்.

இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு தங்களுக்கு அருகாமையிலுள்ள இசேவை மையங்கள் மூலமாகவும் இனி LLR (வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம்) பெற விண்ணப்பித்துக் கொள்ளலாம். இசேவை மையங்கள் மூலம் இந்த சேவையினைப் பெறுவதற்கு பொதுமக்கள் கூடுதலாக இசேவை மையத்திற்கான சேவைக் கட்டணமாக ரூ.60-ஐச் செலுத்த வேண்டும். ஒப்புதல் அளிக்கப்பட்ட LLR -ஐ வழக்கம் போல விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தொடர்ந்து மோட்டார் வாகனத் துறை மூலம் பொதுமக்கள் பெறக்கூடிய இதர சேவைகளையும், (Driving License Permit உரிமை மாற்றம் உள்ளிட்ட) இ.சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman:
Seeman: "நான் புலி.. நான் பெரியாரை ஏத்துக்கவே மாட்டேன்" மீண்டும் சீறிய சீமான்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
Minister Raghupathi on EPS: கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

செங்கோட்டையனுக்கு வந்த PHONE CALL.. ஆட்டத்தை ஆரம்பித்த சசிகலா! எடப்பாடிக்கு ஆப்பு ரெடி!ஆதங்கத்தில் கோகுல இந்திரா! கடுப்பான ஜெயக்குமார்! என்ன செய்யப்போகிறார் EPS?Rajini fans vs TVK: விஜய் சுற்றுப்பயணம்” அழுகிய முட்டை வீசுவோம்” ரஜினி ரசிகர்கள் சதி திட்டம்?மணிப்பூர் CM திடீர் ராஜினாமா! காலைவாரிய பாஜக MLA-க்கள்! அமித்ஷாவுடன் மீட்டிங்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman:
Seeman: "நான் புலி.. நான் பெரியாரை ஏத்துக்கவே மாட்டேன்" மீண்டும் சீறிய சீமான்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
Minister Raghupathi on EPS: கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
ADMK EPS Discussion: செங்கோட்டையன் மீது நடவடிக்கையா.? முக்கிய ஆலோசனை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி...
செங்கோட்டையன் மீது நடவடிக்கையா.? முக்கிய ஆலோசனை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி...
Annamalai: திமுக அரசு.. நம்பர் ஒன் அமைச்சர் இவர் தான், பாஜக தூக்குவது உறுதி - ஸ்கெட்ச் போட்ட அண்ணாமலை
Annamalai: திமுக அரசு.. நம்பர் ஒன் அமைச்சர் இவர் தான், பாஜக தூக்குவது உறுதி - ஸ்கெட்ச் போட்ட அண்ணாமலை
NEET UG Exam: நீட் இளங்கலைத் தேர்வு கட்டணம், மையம்..விண்ணப்பிப்பது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கம்!
NEET UG Exam: நீட் இளங்கலைத் தேர்வு கட்டணம், மையம்..விண்ணப்பிப்பது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கம்!
Sengottaiyan : ”சசிகலாவோடு பேசினாரா செங்கோட்டையன்?” எடப்பாடி பழனிசாமி அதிருப்திக்கு என்ன காரணம்..?
Sengottaiyan : ”சசிகலாவோடு பேசினாரா செங்கோட்டையன்?” எடப்பாடி பழனிசாமி அதிருப்திக்கு என்ன காரணம்..?
Embed widget