மேலும் அறிய
Advertisement
திருச்சி: கருங்குளம் ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 40 பேர் காயம்
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கருங்குளத்தில் நடைபெற்ற ஜல்லிகட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 40 பேர் காயமடைந்தனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கருங்குளத்தில் புனித அந்தோணியார் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு புனித இஞ்ஞாசியார் ஆலய திடலில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்ற பின்னர் ஜல்லிக்கட்டை ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக ஜல்லிகட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் சரிபார்கபட்டது. இதனை தொடர்ந்து உறுதி மொழி ஏற்றனர். பின்பு முதலில் கோவில் காளை வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது. அதைத்தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை, நாமக்கல், புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் வாடிவாசலில் இருந்து தொடர்ந்து அவிழ்த்து விடப்பட்டது. அப்போது சீறிப்பாய்ந்தும், துள்ளிக்குதித்தும் வந்த காளைகள் அடக்க வந்த வீரர்களை அருகில் கூட நெருங்கவிடாமல் நின்று விளையாடின. அருகில் நெருங்கிய வீரர்களை முட்டி தூக்கி வீசின. இருப்பினும் காளைகளுடன் வீரர்கள் மல்லுக்கட்டி, திமிலை பற்றி அடக்கினர். இதில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் சைக்கிள், கட்டில், பீரோ, சில்வர் பாத்திரங்கள், வெள்ளி நாணயங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்த ஜல்லிக்கட்டில் 693 காளைகள் களமிறங்கின. 261 வீரர்கள் களம் கண்டனர். காளைகள் முட்டித்தள்ளியதில் 40 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அதே பகுதியில் அமைக்கப்பட்டிருந்த முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 12 பேர் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். குறிப்பாக 11 மாட்டின் உரிமையாளர்கள், 17 மாடுபிடி வீரர்கள். 5 பார்வையாளர் இதில் 6 பேர் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதி. அவிழ்க்கப்படும் அனைத்து காளை உரிமையாளர்களுக்கு அண்டா, வேஷ்டி மற்றும் தென்னங்கன்று வழங்கப்பட்டது. இதில் சிறந்த மாடுபிடி வீரராக கருங்குளத்தை சேர்ந்த சுள்ளான் (எ) பிரவீனுக்கு வாஷிங் மிஷினையும் (பள்ளிகல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி சார்பில் வழங்கப்பட்டது). சிறந்த மாட்டுக்கான பரிசை பெரிய ஆணைக்கரை பட்டியை சேர்ந்த டேவிட் என்பவருக்கு 4 கிராம் தங்கம் வழங்கப்பட்டது. திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் மேற்பார்வையில் மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு ராமநாதன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion