17 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல் - 4 காவலர்களை சிறையில் அடைக்க உத்தரவு
சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 4 காவலர்களையும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி முக்கொம்பு பகுதிக்கு காதலனுடன் சென்ற 17 வயது,சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 4 காவலர்களை சிறையில் அடைக்க உத்தரவிடப்படுள்ளது.
கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாக திருச்சி முக்கொம்பு பகுதிக்கு தனது காதலன் உடன் 17 வயது சிறுமி சென்றுள்ளார். அங்கு மது அருந்திய எஸ்.ஐ. சசிகுமார், காவலர்கள் பிரசாத், சித்தார்த், சங்கரபாண்டி ஆகிய நான்கு காவலர்கள் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி ஜீயபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் முசிறி, திருவெரும்பூர் காவல் துணைக்கண்காணிப்பாளர்கள் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 4 காவலர்களையும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் உரிய விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து சிறையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க திருச்சி மாவட்ட கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவிட்டுள்ளார்.
பெண்களுக்கு பாதுகாப்பு தர வேண்டிய காவல்துறையினரே சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் வாசிக்க..
CM Stalin: குறுவை விவசாயிகளுக்கு இழப்பீடு...முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!