மேலும் அறிய

தான் மறைந்தாலும் தன் கலையால் இன்றளவும் வாழ்ந்து கொண்டு இருக்கும் முதல் சூப்பர் ஸ்டாருக்கு 114ம் பிறந்த நாள் இன்று

திருச்சியின் அடையாளமாக விளங்கிய தமிழகத்தின் முதல் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு சொந்தமானவர் தியாகராஜ பாகவதர் பிறந்த தினம் இன்று.

தமிழ் திரைப்பட துறையில் முதல் சூப்பர் ஸ்டாராகவும், பொதுவாழ்க்கையில் சிறந்த மனிதராக வாழ்ந்து காட்டியவர்.  சுருக்கமாக எம்.கே.டி. என அழைக்கப்படும் தியாகராஜ பாகவதர் இவர் மார்ச் 1, 1910 ஆம் ஆண்டு மாயவரத்தில் பிறந்தவர். இவர்களது பெற்றோர் மாயவரம் கிருஷ்ணமூர்த்தி ஆச்சாரி - மாணிக்கத்தம்மாள் ஆவார்கள். பின்பு சில ஆண்டுகளுக்கு பிறகு தனது குடும்பத்துடன் திருச்சிக்கு குடிபெயர்ந்ததனர். மேலும் தனது சிறுவயதிலில் இருந்து நடிப்பில் ஆர்வம் கொண்ட பாகவதர் பல்வேறு நாடகங்களில் நடித்தார். இவரின் நடிப்பாற்றலை பார்த்த சிலர் திரையுலகத்தில் அறிமுகம் படித்தனர். இதனை தொடர்ந்து 1934 ஆம் ஆண்டு பவளக்கொடி என்கிற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிய இவர், 14 தமிழ்த் திரைப்படங்களில் நடித்தார், அதில் 6 படங்கள் வெற்றிப் படங்களாகும். தியாகராஜ பாகவதரின் இசையை செல்வந்தர் முதல் பாமரர்கள் வரை அனைவரும் பாகுபாடின்றி ரசித்தனர். இவரின் திரைப்பாடல்கள் பெரும்பாலும் இறைப்பற்றுடனும், தென்னிந்திய பாரம்பரிய இசையை சார்ந்தே இருக்கும். இவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு பாடலெழுதும் ஆஸ்தான பாடலாசிரியரான பாபநாசம் சிவன், இவருக்கென தனித்துவமான பாடல்களை இயற்றுவதில் வல்லவராய் இருந்தார். 

தான் மறைந்தாலும் தன் கலையால் இன்றளவும் வாழ்ந்து கொண்டு இருக்கும்  முதல் சூப்பர் ஸ்டாருக்கு 114ம் பிறந்த நாள் இன்று

புகழின் உச்சத்தில் இருந்த அவரின் வாழ்க்கை சில சதிகளிலும் சிக்கிக் கொண்டார். சென்னையில் மிகப் பரபரப்பாகப் பேசப்பட்ட லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் பாகவதர் மற்றும் அவரின் திரையுலக ஆத்ம தோழரான என்.எஸ்.கிருஷ்ணன் உடன் கைது செய்யப்பட்டார். 4 வருடம் சிறைத் தண்டனையும் பெற்றார். தண்டனை காலத்திலேய இவரின் வழக்கு மறு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 1948 இல் இருவரும் குற்றமற்றவர்கள் என நிருப்பிக்கப்பட்டதின் அடிப்படையில் அவர் விடுதலையானார்,  சிறைக்கு சென்று வந்தது அவரது வாழ்க்கையில், சினிமா உச்சத்தை பொளாதார ரீதியாக பாதித்தது. பாகவதர் சிறை செல்ல நேர்ந்தபோது 12 படங்களுக்கு முன்பணம் வாங்கி இருந்தார். படத் தயாரிப்பாளர்கள் கொடுத்த முன் பணத்தை திருப்பிக் கேட்டார்கள். அந்த சிரமமான நேரத்திலும் அந்தப் பணத்தை யெல்லாம் மிகுந்த சிரத்தையோடு திருப்பிக் கொடுத்தார். பிறகு அவர் நடித்த திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. சிறைக்குப்பின் பலர் படமெடுக்க முன்வந்தாலும் பாகவதர் அவற்றை ஒதுக்கிவிட்டார். அவர் பெரிதும் விரும்பிய சினிமாதுறை தனது கஷ்ட காலத்தில்  உதவாதநிலையில்  வெறுத்து ஒதுக்கினார்.

தான் மறைந்தாலும் தன் கலையால் இன்றளவும் வாழ்ந்து கொண்டு இருக்கும்  முதல் சூப்பர் ஸ்டாருக்கு 114ம் பிறந்த நாள் இன்று

மேலும் யாரையும் நம்பாமல் அவர் சொந்தப் படங்கள் எடுக்க தொடங்கினார். ஆனால் அதுவும் தோல்வியில் முடிந்தது. இவரின் நண்பர்கள் பல உதவி செய்ய முன்வந்தாலும் அவற்றை அனைத்தையும் மறுத்துவிட்டார்.  பலருக்கு உதவி செய்வதில் பாகவதர் தாராள குணம் கொண்டவர். சேமிப்பு குணம் அற்றவர். படங்களில் இருந்து ஒய்வு பெற்ற சமயத்தில் தன்னையே நம்பி இருந்த பாடலாசிரியர் பாபநாசம் சிவனுக்கு ஏற்பட்ட பொருளாதார சிக்கலை உணர்ந்து, அவர் கேட்காமலேயே தான் சாப்பிடுவதற்கும், விருந்தினர்களை உபசரிக்கவும் பயன்படுத்தும் தங்கதட்டையே கொடுத்துதவியவர். தனது வழக்கை சிக்கலின்றி முடித்து வைத்த வழக்குரைஞர் எத்திராஜிக்கு ஒரு தங்கத்தட்டை அளித்து பெருமைப்படுத்தியவர். வழக்கறிஞர் எத்திராஜ் இந்த தங்கத் தட்டையும் தன்னிடமிருந்த பணத்தையும் வைத்து 1948ஆம் சென்னையில் எத்திராஜ் மகளிர் கல்லூரியை ஆரம்பித்தார்.

தான் மறைந்தாலும் தன் கலையால் இன்றளவும் வாழ்ந்து கொண்டு இருக்கும்  முதல் சூப்பர் ஸ்டாருக்கு 114ம் பிறந்த நாள் இன்று

இப்படி உதவிய பாகவதர் குடும்பம் மிகப் பெரிய பொருளாதார இக்கட்டையும் சந்தித்தது. இன்றைய பல ஜாம்பவானகள் அனைவரும் வந்து காத்திருந்த அவரது வீட்டில் வறுமைத் தாண்டவமாடியது. பாகவதரின் கடைசி காலம் மிகவும் சோகமயமானது. வீட்டு வாடகைகூட கொடுக்க முடியாத சூழ்நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். மருத்துவத்திற்காகக்கூட யாருடைய தயவையும் அவர் நாடவில்லை. பல திரைக்கலைஞர்கள் விழா எடுத்து நிதி திரட்டும் ஆலோசனையைக் கூறியும் அதை ஏற்க மறுத்து விட்டார். நவம்பர் 1, 1959, இதய நோயினால் பாதிக்கப்பட்டு சென்னை பொதுமருத்துமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் அங்கு காலமானார். பின்பு பாகதவர் உடலை அவர் வாழ்ந்த ஊரான திருச்சிக்கு கொண்டுவந்தனர்.பின்பு பாகதவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக திருச்சி மாவட்ட விஸ்வகர்மா சங்கத்தினர் இன்று தமிழ்நாட்டின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர் அவர்களின் 114 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு அவரது மற்றும்  பெற்றோர்கள்  நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இவரின் நினைவிடத்தை இன்றளவும் பராமரிக்கபட்டு வருகிறார்கள். மேலும் தியாகராஜ பாகதவர் தனது வாழ்க்கையும், திரையுலக பயணத்தையும் தொடங்கியது திருச்சியில் என்பது இங்கு வாழும் மக்களுக்கு பெருமைகுறிய நிகழ்வாக கருதுகிறார்கள். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

KKR vs PBKS LIVE Score: கொல்கத்தாவில் சிக்ஸர் மழை பொழியும் பஞ்சாப்; திணறும் KKR!
KKR vs PBKS LIVE Score: கொல்கத்தாவில் சிக்ஸர் மழை பொழியும் பஞ்சாப்; திணறும் KKR!
ParisOlympics2024: ஒலிம்பிக் படகுப்போட்டிக்கு தேர்வான நேத்ரா குமணன்! பிரதமர் மோடி- அமைச்சர் உதயநிதி வாழ்த்து!
ParisOlympics2024: ஒலிம்பிக் படகுப்போட்டிக்கு தேர்வான நேத்ரா குமணன்! பிரதமர் மோடி- அமைச்சர் உதயநிதி வாழ்த்து!
Voter Turnout: ஜனநாயக கடமையில் நாட்டுக்கு முன்னுதாரணமாக திகழும் திரிபுரா.. உ.பி., மகாராஷ்டிரா சொதப்பல்!
ஜனநாயக கடமையில் நாட்டுக்கு முன்னுதாரணமாக திகழும் திரிபுரா.. உ.பி., மகாராஷ்டிரா சொதப்பல்!
Fact Check: பிரியா காந்தி தேர்தல் பரப்புரையில் மூவர்ண கொடி தலைகீழாக இருந்ததா? உண்மை என்ன?
பிரியா காந்தி தேர்தல் பரப்புரையில் மூவர்ண கொடி தலைகீழாக இருந்ததா?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Rahul gandhi Chombu campaign  : சொம்பை தூக்கிய ராகுல்! ஆத்திரத்தில் பாஜக! கர்நாடக காங்கிரஸ் பரபரAyyakannu pressmeet : ”1000 பேரு ரெடி! மோடிக்கு செக்” அய்யாக்கண்ணு அதிரடிDMK Councillor arrest :  பெண் VAO-ஐ தாக்கிய திமுக கவுன்சிலர் கைது! நடந்தது என்ன?DK Shivakumar daughter : ”அரசியலுக்கு வர்றேனா? காங்கிரஸ் பத்தி தெரியாது” D.K.சிவக்குமார் மகள் தடாலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
KKR vs PBKS LIVE Score: கொல்கத்தாவில் சிக்ஸர் மழை பொழியும் பஞ்சாப்; திணறும் KKR!
KKR vs PBKS LIVE Score: கொல்கத்தாவில் சிக்ஸர் மழை பொழியும் பஞ்சாப்; திணறும் KKR!
ParisOlympics2024: ஒலிம்பிக் படகுப்போட்டிக்கு தேர்வான நேத்ரா குமணன்! பிரதமர் மோடி- அமைச்சர் உதயநிதி வாழ்த்து!
ParisOlympics2024: ஒலிம்பிக் படகுப்போட்டிக்கு தேர்வான நேத்ரா குமணன்! பிரதமர் மோடி- அமைச்சர் உதயநிதி வாழ்த்து!
Voter Turnout: ஜனநாயக கடமையில் நாட்டுக்கு முன்னுதாரணமாக திகழும் திரிபுரா.. உ.பி., மகாராஷ்டிரா சொதப்பல்!
ஜனநாயக கடமையில் நாட்டுக்கு முன்னுதாரணமாக திகழும் திரிபுரா.. உ.பி., மகாராஷ்டிரா சொதப்பல்!
Fact Check: பிரியா காந்தி தேர்தல் பரப்புரையில் மூவர்ண கொடி தலைகீழாக இருந்ததா? உண்மை என்ன?
பிரியா காந்தி தேர்தல் பரப்புரையில் மூவர்ண கொடி தலைகீழாக இருந்ததா?
அகிலேஷ் யாதவ் மனைவிக்கு இந்த நிலைமையா? கணவரிடம் கடன்பட்ட டிம்பிள் யாதவ்.. சொத்து மதிப்பு இவ்வளவா?
அகிலேஷ் யாதவ் மனைவிக்கு இந்த நிலைமையா? கணவரிடம் கடன்பட்ட டிம்பிள் யாதவ்!
Vote Counting: தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள்: தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை
Vote Counting: தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள்: தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை
Spiderman Couple: தோழியுடன் ஸ்பைடர்மேன் உடையில் பைக்கில் அட்ராசிட்டி செய்த இளைஞர்! தட்டித்தூக்கிய போலீஸ்
தோழியுடன் ஸ்பைடர்மேன் உடையில் பைக்கில் அட்ராசிட்டி செய்த இளைஞர்! தட்டித்தூக்கிய போலீஸ்
Nainar Nagendran: விஸ்வரூபம் எடுக்கும் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: சிபிசிஐடி கைக்கு போகும் வழக்கு! சிக்கலில் நயினார்?
Nainar Nagendran: விஸ்வரூபம் எடுக்கும் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: சிபிசிஐடி கைக்கு போகும் வழக்கு! சிக்கலில் நயினார்?
Embed widget