Job Alert: 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்? ரூ.50,000 ஊதியம்! திருச்சியில் அரசு வேலை - விண்ணப்பிப்பது எப்படி?
Job Alert: திருச்சிராப்பள்ளியில் உள்ள ஊரக வளர்ச்சி அலுவலகங்களில் உள்ள வேலைவாய்ப்பிற்கான தகவல்களை காணலாம்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகிற்குட்பட்ட அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 3-ம் தேதி கடைசி நாள்.
பணி விவரம்:
அலுவலக உதவியாளர்
அந்தநல்லூர், லால்குட், மணிகண்டம், மண்ணச்சநல்லூர், மருங்காபுரி, முசிறி, தொட்டியம், திருவெறும்பூர், துறையூர், உப்புலியபுரம், வையம்பட்டி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள அலுவலகங்களில் தேர்வு செய்யப்படுவர் பணி அனுப்பப்படுவர்.
கல்வித் தகுதி:
இந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணிபுரியம் உயர் அலுவலர்களுக்கு அடிப்படை பணிகளை மேற்கொள்வதில் உதவி செய்தல் மற்றும் அலுவலக நடைமுறை பணிகளில் உதவி செய்தல் வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரம்
01.07.2023 அன்று 18 வயது நிரம்பியவர்களும் 32 வயதுக்கு மிகாமில் இருக்க வேண்டும்.
ஊதியம்
இதற்கு மாத ஊதியமாக ரூ.15,700 -ரூ.50,000/- வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை
இதற்கு விண்ணப்பிக்க https://tiruchirappalli.nic.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
ஆணையர்,
அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம்,
திருச்சிராப்பள்ளி - 639 101
இந்த வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு https://tiruchirappalli.nic.in/notification-for-filling-up-of-vacancies-of-record-clerk-and-office-assistant-in-panchayat-unions-in-tiruchirappalli-district/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 03.02.2024 பிற்பகல் 5.45 மணி வரை
கடலூர் மாவட்ட மருத்துவமனையில் வேலைவாய்ப்பு
கடலூர் மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்
- மாவட்ட திட்ட மேலாளர்
- தகவல் உதவியாளர்
- மருத்துவ உளவியலாளர்
- வட்டார தரவு உள்ளீட்டாளர்கள்
- Programme cum Administrative Assistant
- இயன்முறை மருத்துவர்
- இடைநிலை சுகாதார பணியாளார் (மக்களைத் தேடி மருத்துவம்)
- சுகாதரா பணியாளர்
- ஸ்டாஃப் நர்ஸ்
- லேப் டெக்னீசியன்
- பல்நோக்கு சுகாதார பணியாளர்
- நகர சுகாதார செவிலியர்
- பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்
- நுண்கதிர்வீச்சாளர்
- உளவியலாளர்
- பல் மருத்துவர்
கல்வி மற்றும் பிற தகுதிகள்
- மாவட்ட திட்ட மேலாளர் பணிகு விண்ணப்பிக்க (BAMS/BUMS/BHMS/BSMS/BNYS) b ஆகிய துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- தகவல் உதவியாளர் பணிக்கு கம்யூட்டர் சயின்ஸ் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பி.பி.ஏ., பி.சி.ஏ., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மருத்துவ உளவியலாளர் M.Sc., Psychology/M.Phil Clinical Psychology ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- உளவியலாளர் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- வட்டார தரவு உள்ளீட்டாளர்கள் பணிக்கு கணிதம் , Statistics/Statistics ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- இயன்முறை மருத்துவர் பணிக்கு விண்ணப்பிக்க Physiotherapy துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- இடைநிலை சுகாதார பணியாளர் பணிக்கு நர்சிங் துறையில் டிப்ளமோ அல்லது இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- தூய்மை பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- ஸ்டாப் நர்ஸ் பணிக்கு விணபிக்க நர்சிங் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- லேப் டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிக்க Medical Laboratory Technology துறையில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
- பல்ரோக்கு சுகாதார பணியாளர் பணிக்கு Biology,Botany, Zoology ஆகிய படிப்புகளை தெரிவு செய்தவர்களாக இருக்க வேண்டும். +2 படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- நகர சுகாதார செவிலியர் பணிக்ககு Auxilliary Nurse மற்றும் Midwifery துறையில் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி தமிழில் தெளிவாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- நுண்கதிர்வீச்சாளர் பணிக்கு X-Ray Technician துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- உளவியலாளர் பணிக்கு Psychology/MSW பணியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- பல் மருத்துவ பணிக்கு பி.டி.எஸ். படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்
- கல்வித்தகுதிக்கான சான்று மற்றும் மதிப்பெண் சான்றிதழ்கள்
- இருப்பிடச்சான்று
- சாதிச்சான்று
- மாற்றுத்திறனாளி/ கணவர் இறந்தவர்/ கணவனால் காவிடப்பட்டவர் சான்று
- ஆதார் அட்டையின் நகல்
ஊதிய விவரம்
- மாவட்ட திட்ட மேலாளர் - ரூ.30,000/-
- தகவல் உதவியாளர் - ரூ.15,000/-
- மருத்துவ உளவியலாளர் - ரூ.18,000/
- உளவியலாளர் - ரூ.-18,000/-
- வட்டார தரவு உள்ளீட்டாளர்கள் -ரூ.13,500/
- Programme cum Administrative Assistant -ரூ.12,000/-
- இயன்முறை மருத்துவர்-ரூ.13,000/-
- இடைநிலை சுகாதார பணியாளார் (மக்களைத் தேடி மருத்துவம்) -ரூ.18,000/-
- சுகாதரா பணியாளர் - ரூ.8,500/-
- ஸ்டாஃப் நர்ஸ் - ரூ.18,000/-
- லேப் டெக்னீசியன் - ரூ.13,000/-
- பல்நோக்கு சுகாதார பணியாளர் - ரூ.14,000/-
- நகர சுகாதார செவிலியர் - ரூ.14,000/-
- பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் - ரூ.8,500/-
- நுண்கதிர்வீச்சாளர் - ரூ.13,300/-
- உளவியலாளர் - ரூ.23,000/-
- பல் மருத்துவர் - ரூ.26,000/-
விண்ணப்பிக்கும் முறை
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான ஆவணங்களின் நகல்களோடு அலுவலகத்திற்கு சென்று நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
உறுப்பினர் செயலாளர் / துணை இயக்குநர்
சுகாதாரப் பணிகள்,
மாவட்ட நல்வாழ்வு சங்கம்
துணை இயக்குநர்,
சுகாதாரப் பணிகள் அலுவலகம்,
05, பீச் ரோடு,
கடலூர் - 607 001
வயது வரம்பு உள்ளிட்ட மேலதிக விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s3a96b65a721e561e1e3de768ac819ffbb/uploads/2024/01/2024012015.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 08.02.2024 மாலை 5 மணிக்குள்