வெற்றிமாறன், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் ஜாதி படம் எடுக்கிறார்களா..? - திருமாவளவன் கூறியது என்ன?
தமிழகத்தில் ஜாதிய பாகுபாடுகள் 99 சதவீதம் இன்னும் அப்படியே தான் உள்ளது. ஒரு சதவீதம் தான் நாம் பேச தொடங்கி உள்ளோம் - திருமாவளவன் எம்.பி பேட்டி
புதுக்கோட்டை மாவட்டம், முத்துப்பட்டினத்தில் நடைபெற்ற தொழிலதிபரின் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசியது..
சென்னையில் அரசு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு மூடநம்பிக்கையை வளர்க்கும் விதத்தில் பேசியது முற்றிலும் தவறு.
அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய கருத்தை பேசிய மகாவிஷ்ணு கைது ஏற்கத்தக்கது, மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசிய விவகாரத்தில் தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் இனிவரும் காலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு இது போன்ற மூடநம்பிக்கையை வளர்க்கும் எந்த நிகழ்ச்சிக்கும் தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது .
குறிப்பாக பள்ளிகளில் இது போன்ற மூடநம்பிக்கைகளை வளர்க்கும் செயல்கள் இருக்கக்கூடாது. அதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் மதுவால் இளைய சமுதாயங்கள் சீரழிந்து வருகிறது பல குடும்பங்கள் அழிந்து போகும் நிலை அதிகரித்து வருகிறது ஆகையால் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக தொடர்ந்து பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து பேசி வருகிறோம் . இதே கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற அக்டோபர் இரண்டாம் தேதி வி.சி.க சார்பில் மாநாடு நடைபெற உள்ளது. இதில் மதுவால் சீரழிந்து வரும் சமுதாயங்கள், மக்கள் குறித்து விரிவாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில இந்த மாநாடு இருக்கும்.
நாங்கள் திமுக கூட்டணியோடு தான் உள்ளோம், கூட்டணி தொடர்ந்து கொண்டுள்ளது. வருகின்ற 2026 தேர்தலுக்கு இன்னும் ஒன்னரை ஆண்டுகள் உள்ளது,இப்போது அது குறித்த கேள்வி தேவையில்லை என நினைக்கிறேன் என்றார்.
நடிகர் விஜய் மாநாடு வெற்றி பெற வாழ்த்துகள்
எல்லா அரசியல் கட்சிகளுமே மாநாடு தொடங்கும் போது இது போன்ற பிரச்சனைகளை சந்திப்பது வழக்கம் தான். அந்த வகையில் தான் நடிகர் விஜய் அவர்களின் மாநாட்டிற்கு இடம் தேர்வு செய்வது முதல் பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் நடிகர் விஜயின் மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
இயக்குனர்கள் வெற்றிமாறன், பா.ரஞ்சித், மாரிசெல்வராஜ் போன்றவர்கள் ஜாதி பெருமை பேசக்கூடிய படங்களை எடுப்பதில்லை என கூறினார்.
சாதிய கட்டமைப்பை கேள்விக்குள்ளாக்கக்கூடிய விவாதத்திற்கு உள்ளாக்கக்கூடிய கருப்பொருளை மையமாக வைத்து தான் அவர்கள் படங்களை எடுத்து வருகின்றனர்.
Jayam Ravi Divorce : மனைவி ஆர்த்தியை பிரிந்தார் ஜெயம் ரவி.. ஷாக்கில் ரசிகர்கள்..
அதுதான் இப்போது ஜாதியை வாதிகளுக்கு பிரச்சினையாக உள்ளதே தவிர, அவர்கள் ஜாதியவாதத்தை உயர்த்தி பிடிப்பவர்கள் அல்ல என்றார்.
புரட்சிகரமான சமூக மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற வேட்கை அவர்களிடம் உள்ளது.
அதனால் தான் இந்த படங்களின் வாயிலாக தங்களது உணர்வுகளை அவர்கள் வெளிப்படுத்துகின்றனர்.
தமிழகத்தில் ஜாதியை பாகுபாடுகள் 99 சதவீதம் இன்னும் அப்படியே தான் உள்ளது. ஒரு சதவீதம் தான் நாம் பேச தொடங்கி உள்ளோம். இந்திய அளவில் இந்த விவாதம் விரிவாக்கம் ஆக வேண்டும் என்றும் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.