மேலும் அறிய

விராலிமலை முருகன் கோயிலில் லிப்ட் அமைக்கும் பணி தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை முருகன் கோயிலில் லிப்ட் அமைக்கும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் திருக்கோவில்களில் முக்கியமானது விராலிமலை முருகன் கோவில். திருச்சியிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலும், புதுக்கோட்டைக்கு வடமேற்காக சுமார் 40 கிலோமீட்டரிலும் விராலிமலை அமைந்துள்ளது. இங்கு முருகப்பெருமானுக்கு பாலும், பழமும், பஞ்சாமிர்தம் நைவேத்தியமாக செய்யப்படுகிறது. இங்குள்ள முருகப் பெருமானுக்கு உச்சிகால வழிபாட்டின்போது சுருட்டு நைவேத்தியம் செய்யப்படுகிறது. இந்தக் கோவிலில் ஆறுமுகப் பெருமான், மயில் மீது வீற்றிருக்கிறார். இது தெற்கு பார்த்த மயில் என்பதால் இதற்கு “அசுர மயில்” என்று பெயர். தட்சணாமூர்த்தியின் சிலை அருகே ஜனகர், ஜனந்தர், ஜனாதனர், ஜனத்குமாரர் ஆகிய நான்கு முனிவர்களின் சிலையை அருகே காணலாம். இந்த முனிவர்களுக்கு குருபகவான் உபதேசம் செய்வதாக கூறப்படுகிறது. விராலிமலை முருகன் கோவில் அமைந்துள்ள இடத்தில், ஒரு காலத்தில் “குரா” என்ற மரம் இருந்தது. ஒரு வேடன் ஒரு புலியை விரட்டி வந்த போது, குரா மரம் இருந்த இடத்தில் புலி காணாமல் போக, அந்த இடத்தில் தெய்வ சக்தி இருப்பதாக வேடன் கருதினான். அதன் பிறகு அங்கேயே இருந்து முருகனை வழிபடத் துவங்கினான். அங்கு வந்த முருகன் அவருக்கு அருள் பாலித்தார். சண்முகநாதன் என்ற பெயரில் அங்கேயே தங்கினார். திருப்புகழில் 18 இடங்களில், விராலிமலை பற்றி அருணகிரிநாதர் பாடியிருக்கிறார். மலைக்கு செல்லும் வழியில் “சந்தன கோட்டம்” என்னும் மண்டபத்தில் ஆறுமுகப் பெருமான் காட்சியளிக்கிறார். மேலும் இடும்பன் சன்னதி, பாறையில் குடைந்து அமைக்கப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னதியும் அமைந்துள்ளன. பங்குனி உத்திரம், கந்த சஷ்டி ஆகியவை இத்தலத்தின் சிறப்பான உற்சவங்கள்.நோய் மற்றும் துன்பங்கள் நீங்க, கல்வி, செல்வம், மற்றும் ஆயுள் நீடிக்கவும் இங்குள்ள முருகனாரை வேண்டிச் செல்வர். இத்தனை சிறப்புகள் கொண்ட இக்கோவிலில் பக்தர்களின் வசதிக்காக ரூ.3 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக மலைப்பாதை அமைக்கப்பட்டு மலைமேல் வாகனம் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளன. 

 

விராலிமலை முருகன் கோயிலில் லிப்ட் அமைக்கும் பணி தொடக்கம்
 
மேலும் வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் சாமி தரிசனம் செய்யும் வகையில் வாகனம் நிறுத்துமிடத்திலிருந்து 2 லிப்ட் அமைக்கும் பணியானது நடைபெற்று வந்தது. இந்தநிலையில் ஒருசில காரணங்களுக்காக இந்த பணி நீண்ட நாட்களாக நடைபெறாமல் இருந்து வந்தது. இந்தநிலையில் லிப்ட் வசதியை விரைந்து முடிக்க வேண்டும் என்ற பக்தர்களின் கோரிக்கையை ஏற்று இந்து சமய அறநிலையத்துறை அறிவுறுத்தலின்பேரில் தற்போது கட்டிடப்பணி மற்றும் லிப்ட் அமைக்கும் பணிக்கு ரூ.65 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு மீண்டும் கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் விரைந்து முடிந்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு விரைவில் வந்துவிடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

தலைப்பு செய்திகள்

இரும்பு உத்தரங்கள் வந்தாச்சு... பணிகள் ஸ்பீடு பிடிச்சாச்சு:திருச்சி கோட்டை மேம்பாலம் ஜனவரிக்குள் திறக்க நடவடிக்கை?
இரும்பு உத்தரங்கள் வந்தாச்சு... பணிகள் ஸ்பீடு பிடிச்சாச்சு:திருச்சி கோட்டை மேம்பாலம் ஜனவரிக்குள் திறக்க நடவடிக்கை?
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
Hyundai Tucson: ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
Embed widget